ஸ்ரீசூர்ணம்
Appearance
தமிழ்
[தொகு]
பொருள்
[தொகு]- ஸ்ரீசூர்ணம், பெயர்ச்சொல்.
- திருமண் பாதங்களின் இடையிலிடப்படும் மஞ்சள் அல்லது சிவப்பு நிறமான பொடி
- ஒரு வகை மஞ்சள்/சிவப்பு நிறப் பொடி
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- yellow or red powder/paste of turmeric and rice flour, used in Vaiṣṇavaite sectarian marks
- a kind of yellow or red powder which vaishnavites wear on their foreheads as religious symbol
விளக்கம்
[தொகு]- திருவைணவர்--ஸ்ரீவைஷ்ணவர்-- நெற்றியில் அணியும் நாமம் (திருமண்) என்னும் மூன்று செங்குத்தான நேர்க்கோடுகளுள்ளச் சமயச் சின்னத்தில், இரண்டு வெண்ணிற கோடுகளின் நடுவில், மூன்றாவதாக ஒரு வகை மஞ்சள்/சிவப்பு நிறப் பொடியால், ஒரு நேர்க்கோடு அணிவர்...இந்தப்பொடிக்கு ஸ்ரீசூர்ணம் என்று பெயர்...இரண்டு வெண்மை நிறக்கோடுகள் திருமாலின் இரு பாதங்களாகவும் நடுவில் அமையும் செந்நிற/மஞ்சள் நிறக்கோடு ஸ்ரீ எனப்படும் திருமகளாகவும் கருதப்படுகின்றன...சூர்ணம் என்றால் பொடி...வெண்மைக்கோடுகள் இல்லாமல் செந்நிறக் கோடு மட்டும் அணியும் வழக்கமும் உள்ளது...இந்தப்பொடி மஞ்சள் மற்றும் அரிசியினால் உண்டாக்கப்படுகிறது...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +