ஸ்ரீசூர்ணம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

ஸ்ரீசூர்ணம்:
ஸ்ரீசூர்ணம்--நாமத்தின் நடுவில் போடப்பட்ட செந்நிற கோட்டிற்கானப் பொடி
ஸ்ரீசூர்ணம்:
ஸ்ரீசூர்ணம்--நாமத்தின் நடுவில் போடப்பட்ட மஞ்சள்/சிவப்பு நிறக் கோட்டிற்கானப் பொடி


  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்-- श्रीचूर्ण--ஶ்ரீசூ1ர்ண---மூலச்சொல்
  • ஸ்ரீ + சூர்ணம்

பொருள்[தொகு]

  • ஸ்ரீசூர்ணம், பெயர்ச்சொல்.
  1. திருமண் பாதங்களின் இடையிலிடப்படும் மஞ்சள் அல்லது சிவப்பு நிறமான பொடி
  2. ஒரு வகை மஞ்சள்/சிவப்பு நிறப் பொடி

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. yellow or red powder/paste of turmeric and rice flour, used in Vaiṣṇavaite sectarian marks
  2. a kind of yellow or red powder which vaishnavites wear on their foreheads as religious symbol

விளக்கம்[தொகு]

  • திருவைணவர்--ஸ்ரீவைஷ்ணவர்-- நெற்றியில் அணியும் நாமம் (திருமண்) என்னும் மூன்று செங்குத்தான நேர்க்கோடுகளுள்ளச் சமயச் சின்னத்தில், இரண்டு வெண்ணிற கோடுகளின் நடுவில், மூன்றாவதாக ஒரு வகை மஞ்சள்/சிவப்பு நிறப் பொடியால், ஒரு நேர்க்கோடு அணிவர்...இந்தப்பொடிக்கு ஸ்ரீசூர்ணம் என்று பெயர்...இரண்டு வெண்மை நிறக்கோடுகள் திருமாலின் இரு பாதங்களாகவும் நடுவில் அமையும் செந்நிற/மஞ்சள் நிறக்கோடு ஸ்ரீ எனப்படும் திருமகளாகவும் கருதப்படுகின்றன...சூர்ணம் என்றால் பொடி...வெண்மைக்கோடுகள் இல்லாமல் செந்நிறக் கோடு மட்டும் அணியும் வழக்கமும் உள்ளது...இந்தப்பொடி மஞ்சள் மற்றும் அரிசியினால் உண்டாக்கப்படுகிறது...


( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர்

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஸ்ரீசூர்ணம்&oldid=1880034" இருந்து மீள்விக்கப்பட்டது