தமிழ் நாட்டில் சேலம் மாவத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆத்தூர் ஆகும்...ஆற்று + ஊர் என்னும் சொற்களே ஆத்தூர் ஆயிற்று என்பர்...விசிஷ்ட நதி எனப்படும் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது...இந்த ஊர் சேலம் மாவட்டத்தில் சேலத்திற்கு அடுத்த இரண்டாவது பெரிய நகரமாக, ஆத்தூர் வட்டத்திற்கு தலைமை நகராக விளங்குகிறது...அனந்தகிரி என்பது இப்பட்டணத்தின் பழையப் பெயர்...தமிழக வரலாற்றோடும், இந்துபுராணங் களோடும் தொடர்புடைய நகரம்...பதினேழாம் நூற்றாண்டு இலட்சுமண நாயகன் எனும் பாளையக்காரரால் கட்டப்பட்ட, இங்குள்ள கோட்டை புகழ் வாய்ந்தது...மரவள்ளிக் கிழங்கு உற்பத்திக்கும் மற்றும் கிழங்கு மாவு, சவ்வரசி, பருத்தி உற்பத்திக்கும் தமிழ் நாட்டில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது...