கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
முன்றில்(பெ)
- வீட்டின் முன்பகுதி; இடைகழி
- முற்றம்
- முன்னறை
மொழிபெயர்ப்புகள்
- foyer, lobby
விளக்கம்
- முன்றில் = முன் + இல்
- முன் என் கிளவி முன்னர்த் தோன்றும்
- இல் என் கிளவி மிசை றகரம் ஒற்றல்! (தொல்)
- 'முன்' என்ற சொல்லுக்குப் பக்கத்தில் 'இல்' என்ற சொல் சேர்ந்தால், அங்கே றகரம் தோன்றும்.
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- முன்றில் உணங்கல் மாந்தி (குறுந்தொகை)