உள்ளடக்கத்துக்குச் செல்

அகந்தை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

அகந்தை (பெ)

பொருள்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
பயன்பாடு
  • 01. அகந்தையுள்ளவர்கள் பிறர் குறைகளை மட்டுமே காண்பவர்களாகயிருப்பார்கள்.
  • 02. அகந்தை ஒழிந்தால், மனம் விரிவடையும் ; புதிய தகவல்களை கற்றுக்கொள்ள மனம் முயலும்.
  • அகம் என்றால் உள்ளே என்று பொருள். புறம் என்றால் வெளியே என்று பொருள். அதாவது அகம் என்பதை மனதின் உள்ளே என்று எடுத்துக்கொள்ளவேண்டும்.

காரம் என்றால் கோபம் என்று பொருள். மனதின் உள்ளே காரத்தை வைத்துக்கொண்டு வாழ்தல் என்று பொருள். இவர்கள் "தான்" என்ற அகந்தை கொண்டவர்களாகயிருப்பார்கள். அதாவது பிறரை புரிந்து கொள்ளாதவர்களாக மற்றும் புரிந்து கொள்ள விருப்பம் இல்லாதவர்களாக இருப்பார்கள். இந்த குணாதிசயத்தை "அகங்காரம்" என்று சொல்லுவார்கள். இந்த குணத்தையுடைவர்களை அகங்காரி அல்லது அகங்காரன் என்று சொல்லுவார்கள். எப்போதும் பிறரை விட தாங்கள் எல்லாவிதங்களிலும் உயர்வு என்ற நினைப்பில் வாழ்பவர்கள். இதன் காரணமாக அவர்கள் எதிரில் இருப்பவர்களின் தகுதிகளை புரிந்து கொள்ள விருப்பம் இல்லாதவராக அவர்களை மட்டம் தட்டுவதில் விருப்பம் உடையவராக இருப்பார்கள். இதுவே அவர்களுடைய குணாதிசயமாக மாறிவிடும்.

இந்த வார்த்தையை பயன்படுத்தும் விதத்தை இந்த வாக்கியத்தின் மூலம் பார்க்கலாம்:

"தன்னுடைய வீட்டில் வேலை பார்க்கும் சமையல்காரன் சாம்பசிவத்தின் மகன் விக்கிரமன் அகில இந்திய போட்டி தேர்வில் கலந்து கொண்டு நாட்டிலே முதல் மாணவனாக வந்ததை தெரிந்து கொண்ட அகங்காரி பார்வதி மனதில் உறங்கிக்கொண்டிருந்த அகந்தை தலை தூக்க, எப்படியாவது சாம்பசிவத்தை திருடன் என்று சொல்லி பழி தீர்த்துக்கொள்ள விரும்பினாள் ." (இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் ---அகந்தை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி


"https://ta.wiktionary.org/w/index.php?title=அகந்தை&oldid=1956292" இலிருந்து மீள்விக்கப்பட்டது