அகாலம்
பொருள்
அகாலம்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- inauspicious or unseasonable time; untimeliness
- times of scarcity or famine
- unlimited duration
விளக்கம்
பயன்பாடு
- அகால மரணம் - untimely death
- அகால மழை - unseasonable rain
- "கைலாசத்தோட வலப்பக்க சரிவிலே வெள்ளை செம்மறிக்கூட்டம் நிக்கற மாதிரி பனிமேகம். மடியிலே ஒரு பட்டுத்துவாலைய போட்டுண்டு கைகளை கோத்து வச்சுண்டு அது தியானத்திலெ இருந்தது. ஒரு சத்தம் கெடையாது. அகாலம். சத்தம் இல்லேன்னா சொல்றது இருக்கு. காத்து போற சத்தம் கேட்டுண்டே இருக்கு....சிலர் தும்மறாங்க, சிலர் மூச்சு விட்டு ஏங்கறாங்க, சிலர் மெல்ல விசும்பறாங்க. எங்க கூடவே வந்த நாலுகுதிரைகள் செருக்கடிச்சு காலால தரைய தட்டுற சத்தம். ஆனா எல்லா சத்தமும் சேர்ந்து பெரிய நிசப்தமா ஆயிட்டுது. எங்க எல்லார் மனசிலயும் ஓடிண்டிருந்த எல்லா காலமும் சேர்ந்து அகாலமா ஆயிட்டுது". (பெருவலி, ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அகாலம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +