அ
|
ஒலிப்பு
[தொகு]
|
---|
பொருள்
(பெ)அ
- தமிழின் முதல் எழுத்து; தமிழ் உயிரெழுத்துகளில் முதல் உயிரெழுத்து
- எட்டு என்னும் எண்ணின் தமிழியக் குறியீடு
- அழகு
- அந்த என்னும் சுட்டு
- எதிர்மறை முன்னொட்டு, ஆரியமொழிச்சொற்களை எதிர்மறையாக்க வழங்குவது; இடைச்சொல்
- ஓர் அசைச்சொல்
- (எ. கா.) (பெயரெச்ச விகுதியாக) => தன்வழிய காளை (சீவக சிந்தாமணி- 494)
- ஓர் இரக்கக் குறிப்பு
- (எ. கா.) அஆ! கீழே கொட்டி விட்டதே
- ஆறாம்வேற்றுமை உருபுகளுள் ஒன்று.
- (எ. கா.) என கைகள்
- அஃகான்
- சிவன்
- திருமால்
- சாரியை
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- 1) the first tamil vowel
- 2) eight the letter printed without the loop at the top
- 3) beauty
- 4) pref. to nouns, expressing remoteness
- 5) placing அ before some words, leads to the opposite words
- 6) a euphony
- 7) ah! expressing pity
- 8) the tamil grammatical term
- 9) a synonym for the first letter
- 10) the (hindu gods) namely siva
- 11) the (hindu gods) namely vishnu
- 12)auxiliary, component particles employed in the formation of the two classes of verbs
- இந்தி- இதே ஒலியை உடைய இந்தியின் முதலெழுத்து - अ
விளக்கம்
ஆதிகால ஒலியிலிருந்து பெற்ற அ என்னும் எதிர்மறை முன்னொட்டைச் சொற்களுக்கு முன்னே சேர்த்தால் எதிர்மறைப் பொருள் கிடைக்கும். இது ஏறக்குறைய அருந்தமிழ்ச்சொற்களை எதிர்மறையாக்க மட்டுமே அதிகமாக வழங்குவது; சில எடுத்துக்காட்டுகளைக் கீழே காணலாம்.
1நீதி | X | 1அநீதி | 2சைவம் | X | 2அசைவம் | 3சுத்தம் | X | 3அசுத்தம் | 4தர்மம் | X | 4அதர்மம் |
பயன்பாடு
- அ என்பது தமிழ் நெடுங்கணக்கில் முதல் உயிரெழுத்து.
(இலக்கணப் பயன்பாடு)
- அ என்பது, ஒரு பெயர்ச்சொல், அசைச்சொல், மற்றும் குறில் ஆக அமைகிறது.
(இலக்கியப் பயன்பாடு)
- அ என்ற சொல்லில் தொடங்கும் திருக்குறள்கள், மொத்தம் = 156.
- இது தமிழ் அரிச்சுவடியில் அடங்கும், அடிப்படைக் குறியீடாகும்.
( மொழிகள் ) |