அந்தம்
Appearance
பொருள்
அந்தம்(பெ)
- முடிவு
- மரணம்
- நாசம்
- விகுதி
- வரைக்கும். சேவப்ப நாயக்கர்முதல் விசயராகவ நாயக்கரந்தம் (தஞ். சரசு. i, 319)
- அழகு
- இருட்டு
- குருடு
- அஞ்ஞானம்
- நிச்சயம்
- அவயவம்
- சமீபம்
- சுபாவம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- end, close, termination
- death
- destruction
- (Gram.) suffix
- --adv. As far as, up to, till
- beauty, comeliness
- darkness
- blindness
- spiritual ignorance
- certainty
- limb
- nearness
- nature
விளக்கம்
பயன்பாடு
- உன் இதயம் முறிக்கப்பட்டால் உனது பாலங்கள் எரிக்கப் படுகின்றன! அதற்குப் பிறகு எதற்கும் அர்த்தமில்லை! அதுவே நல்வாழ்வின் அந்தம்! துயரத்தின் துவக்கம்! ([1]')
- நான்தான் ஆதி; நான்தான் அந்தம்; என்னையன்றி வணக்கத்துக்குரிய மன்னன் வேறெவனும் இருக்கக் கூடாது (சீனா நெடுஞ்சுவரும் திராவிட இயக்கமும், இளவேனில், கீற்று)
- ஆதி வீடு அந்தம் காடு
- இதில் நான் என்ன அடியே நீ என்ன ஞானப் பெண்ணே
- வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன?
- தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு (திரைப்பாடல் )
(இலக்கியப் பயன்பாடு)
- அந்தமில் சிறப்பின் (தொல். பொ. 243)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அந்தம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +