அழுத்தம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
  • கட்டாயம்
  • வலுவூட்டம்
  • இயற்பியல். ஓரலகு பரப்பின் மீது (பாய்மத்தால்) செலுத்தப்படும் செங்குத்து விசை
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

(இலக்கியப் பயன்பாடு)

  • எந்திரத்துக்கு எண்ணெய்வரத்து நின்று விட்டது. எந்திரத்துக்கு வரும் எண்ணெய்க்கு அழுத்தம் கொடுத்தனுப்பும் டைமிங் பிளேட் உடைந்துவிட்டது (தண்ணீர் தேசம் -I, வைரமுத்து)
  • அவள் அடிவயிற்றில் உழன்ற
வாந்தி துப்பினாள். அழுத்தம்
குறைந்தது. அமைதி வந்தது.
நெற்றியில் அடித்த சம்மட்டி
நின்றேவிட்டது.(தண்ணீர் தேசம் -I, வைரமுத்து)
  • இனி இதைப் பார்ப்பவர்களிடமிருந்தெல்லாம் மறைத்து வைக்க வேண்டும் என்ற மன அழுத்தம் இருக்காது (அந்திம காலம், ரெ.கார்த்திகேசு)
  • அடித்துப் பேசி அழுத்தம் திருத்தமாய்ச்
சுளைகளை யாகச் சொற்களைச் சொல்லி (நாமக்கல் கவிஞர்)

சொல்வளம்[தொகு]

அழுத்தம்
அழுத்தமானி
மின்னழுத்தம், காற்றழுத்தம், நெஞ்சழுத்தம், மன அழுத்தம், சமூக அழுத்தம்

{ஆதாரம்} --->

விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

"https://ta.wiktionary.org/w/index.php?title=அழுத்தம்&oldid=1633134" இலிருந்து மீள்விக்கப்பட்டது