அவுரி
Jump to navigation
Jump to search
பொருள்
அவுரி,பெயர்ச்சொல்.
- நீலிச் செடி. (திவாகர நிகண்டு)
- Indigofera tinctoria (தாவரவியல் பெயர்)
மொழிபெயர்ப்புகள்
பயன்பாடு
- துணிகளில் சாயமேற்றும் நுட்பங்களில் நம்மவர்கள் உலகில் தலைசிறந்து விளங்கினார்கள். பண்டைய சாயமேற்றும் முறைகள் உலகிலுள்ள அனைவருக்கும் முன்னோடியாகத் திகழ்ந்தது. அவுரிச் செடிகளைப் பயிரிட்டு அதிலிருந்து நீலநிறச் சாயம் உற்பத்தி செய்து இச்சாயத்தை நூல்களுக்கும், துணிகளுக்கும் சாயமேற்றி அழகூட்டினர். இந்தியாவில் இருந்து இந்த நீலநிறத்தைத் தெரிந்துகொண்டதால்தான் இதற்கு இண்டிகோ நீலம் என்ற பெயர் உலக அளவில் ஏற்பட்டது. சுண்ணாம்பு, சங்கு, முட்டை ஓடுகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி நிறங்களும், நிறமேற்றிகளும் உற்பத்தி செய்யப்பட்டன.
- செங்கல் மண்ணில் கிடைக்கும் கனிமங்களில் சிவப்பு சார்ந்த வண்ணங்கள் உருவாக்கப்பட்டன. மஞ்சள் சிறந்த கிருமிநாசினியாகவும், மூலிகையாகவும் பயன்பட்டதோடல்லாமல் மஞ்சள் நிறச் சாயம் உற்பத்தி செய்யவும் பயன்பட்டது. தாவரங்கள், கிழங்கு வகைகள், பல வண்ணப்பூக்களிலிருந்து பல்வேறு வண்ணச் சாயங்கள் நம்மவர்களால் உற்பத்தி செய்யப்பட்டன. (திருப்பூர்: தேவை திருப்புமுனை!, தினமணி, 22 ஜூலை 2011)
( மொழிகள் ) |
சான்றுகள் ---அவுரி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற