சங்கு
Appearance
சங்கு (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- வெண்நந்து(வெள்ளை நிற சங்கு):
வெண்ணந்தூர் என இவ்வூருக்குப் பெயர் வரக் காரணமான வெள்ளை நிற சங்கு.
- நீர்வாழ் சங்கு
- ஒரு பேரெண்
- பெரும்படை
- கோழி
- (நாட்டியம்)பெருவிரல் நிமிர ஒழிந்த நான்கு விரல்களும் வளைந்து நிற்கும் இணையாவினைக் கைவகை
- இசங்கு
- கடுரோகிணி
- முளை
- நிழலினால் பொழுதறிய நேராக நடப்பெறும் கோல்
- மட்டிப்படைக்கலம்
- கழுத்து
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- chank, conch, large convolute shell
- thousand billions
- A large army
- (dance) A gesture with one hand in which the thumb is held upright while the other fingers are bent
- cock
- mistletoe berry thorn
- Christmas rose
- stake, peg, spike
- gnomon or perpendicular column for measuring the altitude of the sun by the length of its shadow
- A kind of weapon
விளக்கம்
பயன்பாடு
- சங்கு சுட்டாலும் வெண்மைதரும் (மூதுரை, ஔவையார்)
- சங்குதங்கு தடங் கடல் (திவ். பெரியதி. 1, 8, 1)
- சங்குதரு நீணிதியம் (சீவக சிந்தாமணி. 493).
- கழுக்கடை சங்கொடு . . . விழுப்படை யாவும் (கந்தபு. சகத்திரவாகு)
சங்கு (வி)
பொருள்
- பல்லாங்குழியில் ஆட்டமுறை இலாபமின்றி நின்றுவிடுதல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
ஆதாரங்கள் ---சங்கு--- DDSA பதிப்பு + வின்சுலோ +
காட்சிக்கூடம்
[தொகு]சேலம் அருங்காட்சியகத்திலுள்ள பல்வகை சங்குகளின் ஒளிப்படங்கள்.
-
வெற்றிச் சங்கு
-
அலங்கார சங்கு