ஆண்பால்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

(பெ) - ஆண்பால்

  1. இலக்கணம். உயர்திணையில் ஓர் ஆண் மகனைக் குறிக்கும் பெயர். தமிழ் இலக்கணத்தில் ஐந்து வகைப் பாகுபாடுகளில் ஒன்று; ஐம்பாலில் ஒன்று; பல மொழிகளில் பெயர்ச்சொற்களின் பாகுபாடுகள் மூன்றின் ஒன்று (ஆண்பால், பெண்பால், இரண்டுமல்லா நடுப்பால்).
  2. உயிரினங்களில் பொதுவாக சூல், சினை, கருவுறும் பெண்பாலுக்கு எதிர்வகையான சூலேற்றும், சினையேற்றும், கருவுறச்செய்யும் வகையான (ஆண்) இனம். செடிகொடிகள் முதல் பாலூட்டிகள் வரை பற்பல உயிரினங்களில் இப்படி பால்வகை உள்ளவற்றில் ஒரு வகை.
மொழிபெயர்ப்புகள்

(ஆங்)

  1. masculine gender
  2. male sex
விளக்கம்
  • பால் என்றால் பிரிவு. தமிழில், ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின் பால் என்பன பெயர்ச்சொற்களின் ஐம்பெரும் பாகுபாடு. (அறத்துப்பால், பொருட்பால் இன்பத்துப்பால் என்பதில் வரும் பால் என்பதும் பிரிவைக் குறிக்கும்).

(வாக்கியப் பயன்பாடு)

(இலக்கியப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் ---ஆண்பால்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆண்பால்&oldid=1633188" இலிருந்து மீள்விக்கப்பட்டது