உள்ளடக்கத்துக்குச் செல்

இயக்கமுறைமை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

*(தமி) இயக்கமுறைமை = இயங்கு தளம் = இயக்குதளம்

மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

கணினியின் வன் மற்றும் மென்பொருள் வளங்களை நிர்வகிக்கக் கூடிய நிரல்களின் தொகுப்பை நாம் இயங்குதளம் என்கிறோம். ஏற்கப்பட்ட கட்டளைகளுக்கிணங்க மின்னணு சாதனங்களை, சீராக இயக்கவல்லது இயங்கு தளம் ஆகும். நினைவகங்களை பகுத்தொதுக்கி கட்டுப்படுத்துவது, கொடுக்கப் படும் வன்பொருள் சார் கோரிக்கைகளுக்கு முன்னுரிமைக் கொடுத்து செயல்படுத்துவது, உள்ளீட்டு மற்றும் வெளியீட்டுக் கருவிகளை நிர்வகிப்பது, பிணையத்திற்கான வசதிகள், கோப்புகளின் நிர்வாகம் முதலியன இயங்குதளங்களின் அடிப்படை பணிகளாகும். பெரும்பான்மையான இயங்குதளங்கள் முனையத்தினை, முதன்மையான இடைமுகப்பாகக் கொண்டு இயங்குகின்றன. அதீத பயன்பாடுகளை ஊக்குவிக்கும் பொருட்டு, அவற்றுள் சில வரைகலை இடைமுகப்பினையும் வழங்குகின்றன. ஏனைய வன்மென் பொருட்களுக்கும், செயலிகளுக்கும் இயக்குதளம் அடிப்படையாக அமைகின்றது.

(எஃகா) - windows, linux, ubundu போன்றவை இயங்குதளங்களாகும்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=இயக்கமுறைமை&oldid=350148" இலிருந்து மீள்விக்கப்பட்டது