இரட்டி
பொருள்
இரட்டி , (வி)
- இருமடங்காக்கு
- ஒன்று இரண்டாகு. மகரம் இரட்டித்தது.
- திரும்பச்செய்
- மீளவா; மக்களி நோய் இரட்டிக்கின்றது.
- மாறுபடு இந்தச் சாட்சி அந்தச் சாட்சிக்கு இரட்டிக்கிறது.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- double
- be doubled
- repeat; continue crosswise, as ploughing
- return, relapse
- differ from; be discrepant; disagree
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- அடியிரட்டித் திட்டாடு மாட்டு (பு. வெ. 2, 8)
(இலக்கணப் பயன்பாடு)
இரட்டி , (பெ)
- இருமடங்கு; இரு பங்கு
- (நாட்டிய அபிநயம்) இணைக்கை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- அன்பிரட்டிபூண்டது (கம்பரா. சூர்ப்ப. 133)
(இலக்கணப் பயன்பாடு)
சொல்வளம்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + ,