உம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

உம் (இ)

 • உம் என்னும் இடைச்சொல் 8 பொருளில் வரும்
எச்சம் சிறப்பே ஐயம் எதிர்மறை முற்றே எண்ணே தெரிநிலை ஆக்கம் - என்று அப்பால் எட்டே உம்மைச் சொல்லே (தொல்காப்பியம் இடையியல் 7)
 1. எச்சம்
 2. சிறப்பு
 3. ஐயம்
 4. எதிர்மறை
 5. முற்று
 6. எண்
 7. தெரிநிலை
 8. ஆக்கம்


பயன்பாடு
 1. சாத்தனும் வந்தான் என்றால் சாத்தன் அன்றி வந்த பிறரையும் உணர்த்தும்
 2. தேவரே தின்னினும் வேம்பு கசக்கும் (நாலடியார் 112)
 3. பத்தானும் எட்டானும் தருக
 4. கொற்றன் வருதற்கும் உரியன் என்றால் வராமைக்கும் உரியன் என்னும் பொருள் தரும்
 5. மூவரும் வந்தனர்
 6. நிலனும் நீரும் தீயும் காற்றும் காயமும் கலந்த மயக்கம் உலகம்
 7. நன்றும் அன்று தீதும் அன்று என்றால் இடைநிலைப்பட்டது எனத் தெளிவுபடுத்தியது ஆயிற்று
 8. நெடியனும் வலியனும் ஆயினான் என்பது ஆக்கம்


( மொழிகள் )

ஆதாரங்கள் ---உம்--- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி

பிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=உம்&oldid=1633457" இருந்து மீள்விக்கப்பட்டது