உவம உருபு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

உவம உருபு(பெ)

  1. உவமை உருபு, உவமானத்தையும் உவமேயத்தையும் இணைக்கும் போல, போன்ற, புரைய, ஒப்ப, மான, நிகர, அன்ன போன்ற சொற்கள். இந்த உருபுகள் இடைச்சொற்களாகும்.
  • ஒப்பிடப் பயன்படும் பொருள் அல்லது சிறப்புப் பொருள்: உவமானம் / உவமை
  • ஒப்பிடப்படும் பொருள் அல்லது சிறப்பிக்கப்படும் பொருள்:உவமேயம்


மேற்கண்ட எடுத்துக்காட்டில்

  • பால்: சிறப்புப் பொருளாக அமைவதால் இவ்விடத்து பால் உவமானம்.
  • நிலா: பால் என்ற சிறப்புப் பொருளால் நிலா சிறப்பிக்கப்படுவதால் இவ்விடத்து நிலா உவமேயம் ஆயிற்று.
  • போன்ற:உவமை உருபு.


மேற்கண்ட எடுத்துக்காட்டில்

  • நிலா: சிறப்புப் பொருளாக அமைவதால் இவ்விடத்து நிலா உவமானம்.
  • முகம்: நிலா என்ற சிறப்புப் பொருளால் முகம் சிறப்பிக்கப்படுவதால் இவ்விடத்து நிலா உவமேயம் ஆயிற்று.
  • போன்ற:உவமை உருபு.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. simile
"https://ta.wiktionary.org/w/index.php?title=உவம_உருபு&oldid=1911351" இலிருந்து மீள்விக்கப்பட்டது