ஓமம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஓமம் விதை
ஓமம் விதை
ஓமப் பூக்கள்
ஓமத்தண்ணீர்
ஓமம்
ஓமம்
ஓமம்

தமிழ்[தொகு]

ptychotis Ajowan...(தாவரவியல் பெயர்)

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

ஓமம் , பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

 1. அசட்டி, அசமடம், அசமோதை, அசம்தா ஓமம்.
 2. இந்து மதத்தில் அக்கினியை வளர்த்து செய்யப்படும் பூசை, யாகம்
 • இரண்டாவது பொருளின் சொல் வடமொழி...होम...ஹோம...ஓமம் என்று உருவானது

மொழிபெயர்ப்பு[தொகு]

 • ஆங்கிலம்:
 1. carom = Carum copticum
 2. a Hindu ritual involving fire
 3. अजवाइनஇந்தி

ஓமத்தின் மருத்துவ குணங்கள்[தொகு]

 • ஒமத்தினால் குளிர்ச்சி சுரம், இருமல், அசீரணம், வயிற்றுப்பிசம், அதிசாரம், குடலிரைச்சல், ஆசனக்கடுப்பு, சீதபேதி, சுவாசகாசம், தந்தரோகம், தந்தமூலரோகம், குய்யரோகம் முதலியவைகள் நீங்கும்...

உபயோகிக்கும் முறை[தொகு]

 1. ஓமத்தை பொன்னிறமாகச் சிறிது வறுத்துச் சமனெடை கறியுப்புசேர்த்து இடித்துச் சூரணம் செய்து ஒரு வேளைக்கு 15--30 குன்றி எடை வாயில் போட்டுக் கொஞ்சம் நீருடன் விழுங்கினால் தீபனத்தை உண்டாக்கும்...வயிற்றுள்ள வாயுவைப் போக்கும்...குழந்தைகளுக்கு 3--5 குன்றி எடை வயதுக்குத் தக்கபடி தேனில் கொடுக்கலாம்...
 2. ஓமம், சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம் இவைகளை வகைக்கு அரைப் பலம் எடுத்துச் சிறிது நெருப்பனலில் வெதுப்பி இடித்துச் சூரணம் செய்து, அதனுடன் சமனெடை சீனிகூட்டி வேளைக்குத் திரிகடி அளவு அந்தியும் சந்தியும் உட்கொண்டால் கடூரமான பேதிகளையும், அசீரணத்தையும் போக்கடிக்கும்...
 3. ஓமம், கற்பூரம், கறிமஞ்சள்,ஆகியவற்றைத் தூள் செய்து வைத்துக்கொண்டு , அதிக சீதளத்தால் உடல் குளிர்ச்சி பெற்றவர்களுக்கு, உடலின்மேல் தூவித் தேய்த்தால் சுடு பிறக்கும்...
 4. ஓமத்தை நீர்விட்டு அரைத்துக் களிபோல் கிளறித் தாளக்கூடிய சூட்டில் நோயுள்ள பாகத்தில் வைத்துக் கட்டினால் அவ்விடத்திலுள்ள நோயும், வீக்கமும் போகும்...
 5. ஓமம், மிளகு, சுக்கு வகைக்கு அரைப் பலம், ஏலம் ஒரு பலம் இவைகளைச் சிறிது நெருப்பனலில் வெதுப்பி இடித்துச் சூரணம் செய்து சமனெடை சீனிகூட்டித் தினமும் இரண்டு வேளை திரிகடி அளவு கொடுக்க வயிற்றுவலியைக் குணப்படுத்தும்...
 6. ஓமம், பெருங்காயம், கடுக்காய், கல்லுப்பு, கறுப்புப்பு, எவாச்சாரம் ஆகிய ஆறு சரக்குகளை சமனெடையாக எடுத்துக்கொள்ளவும்...இவற்றில் முதல் மூன்று பொருட்களை நெருப்பனலில் வெதுப்பி மற்றவைகளுடன் சேர்த்து இடித்துச் சூரணம் செய்துகொள்ளவும்...இந்தச் சூரணத்தை வேளைக்கு 10--12 குன்றியெடை ஒருமிடறு (ஒரு முறை விழுங்கும் அளவு) நீரில் போட்டுக்கலக்கி உட்கொள்ள அசீரணம், வயிற்றுவலி, வயிற்றுப்பிசம் போகும்...
 7. ஓமத்தை இடித்துத் தூள்செய்து ஒரு மிகமெல்லிய துணியில் முடிச்சுக்கட்டி அதை அடிக்கடி மூக்கில்வைத்து மோந்துக் கொண்டிருந்தால் சலதோசம், சன்னி ஆகியவை போகும்...
 8. ஓமத்தை சூடுபெற வறுத்து ஒரு துணியில் முடிந்து தாளக்கூடிய பக்குவத்தில் மார்பு, முதுகு போன்ற இடங்களில் ஒற்றடம் கொடுக்க சுவாசகாசநோயில் தொல்லைதரும் கபத்தைக் கரைத்து வெளியாக்கும்...
 9. ஓமம், திப்பிலி, ஆடாதோடையிலை, கசகசாத்தோல் ஆகியவைகளை வகைக்கு 1/2 பலம் வீதம் ஒரு பழகிய மட்கலயத்தில் போட்டு, கால் படி நீர்விட்டு, 1/8 படியாகச் சுண்டக்காய்ச்சி வேளைக்கு கால் முதல் அரை அவுன்சு அளவு தினமும் மூன்று வேளை உட்கொண்டுவந்தால் சுவாசகாசநோயில் நுரையீரலில் கட்டியுள்ள கபம் கரையும்...
 • ஓமத்தில் அசம்தா ஓமம் (Carum Roxburghianum) என்னும் மற்றொரு வகை மருத்துவ குணத்தில் சாதாரண ஓமத்தைவிட மிகச்சிறந்தது எனப்படுவதால் மருந்து தயாரிப்பில் இனமறிந்து பயன்படுத்தல் நன்று
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஓமம்&oldid=1463761" இருந்து மீள்விக்கப்பட்டது