கரப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

Wiki-ta.jpg
என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.

பொருள்[தொகு]

  • கரப்பு, பெயர்ச்சொல்.
  1. மறைக்கை
    திருக்குறள்:கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று .. 1053
  2. களவு - (திவாகர நிகண்டு)
  3. வஞ்சகம்
    தேவாரம் : கரப்புறு சிந்தையர் காண்டற் கரியவன் .
  4. மீன் பிடிக்குங் கூடை பஞ்சரம் முதலியன
  5. மத்து (யாழ். அக.)
  6. கரப்பான் பூச்சியையும், பாச்சையையும், புத்தகப்பூச்சியையும் கரப்பு என்று, தமிழகத்தின் பல இடங்களில், பொருள் வேறுபடுத்திக் கூறுவர்
    பூஞை கரப்பருந்த நரடுங்கடன் (அருட்பா).

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. concealing, screening; hiding, as ones's thoughts
  2. theft
  3. fraud, deceit
  4. conical basket for catching fish; weel, hen-coop
  5. churn

தமிழ் இலக்கிய மேற்காள்கள்[தொகு]

திருக்குறள்:கரப்பு இடும்பை இல்லாரைக் காணின் நிரப்பு இடும்பை எல்லாம் ஒருங்கு கெடும்
  • மணிமேகலை: பரப்பு நீர்ப் பொய்கையும் கரப்பு நீர்க் கேணியும்
  • பதினெண் கீழ்க்கணக்கு: பல் பெண்டிராளன் அறியும் கரப்பு இடும்பை = நான்
  • பழமொழி: கரப்புடையார் வைத்த கடையும் உதவா
  • தேம்பாவணி: கரப்பு அறக் கற்ற போரும் கடிது உனக்கு இவையே தோன்றாது
  • தேவாரம்: கரப்பு உள்ளி நாடிக் கண்டிலரேனும் கல் சூழ்ந்த
  • தொல்காப்பியம் (பொருள்):மொழி கரந்து மொழியின் அது பழிகரப்பு ஆகும்.

ஊடகங்கள்[தொகு]

சொல்வளம்[தொகு]

கார்ப்பு - கருப்பு - கறுப்பு - கறைப்பு - கரப்பறை - கரப்புக்குடில் - கரப்பிலடைதல் - காதைகரப்பு


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கரப்பு&oldid=1245116" இருந்து மீள்விக்கப்பட்டது