கவடு
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கவடு, .
- மரக்கிளை
- கவருள்ள மரக்கிளை
- துடைச்சந்து. அவன் கவட்டிலே நுழைந்தான்
- பகுப்பு
- உட்பிரிவு
- யானைக் கழுத்திடும் கயிறு
- அடிவைப்பு
- கபடம், கபடு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- branch of a tree
- forked branch
- fork of the legs
- separation, division
- section, ramification
- rope of an elephant's neck
- stride, pace
- fraud, guile
விளக்கம்
பயன்பாடு
- கவட்டை - fork of a branch; fork of the legs
- கவட்டுக் கால் - bandy legs
- கவடுபடு - be forked like a branch
- கவடுவை - straddle, stride
- கவட்டு நெஞ்சன் - a cunning person
- கவடுள்ளவன் - a cunning deceitful person
- மூன்று கவடாக முளைத்திருக்கும் தமிழ் போல், மூன்று பாகங்களாக முகிழ்த்திருக்கும் நூல் (நினைவு நாடாக்கள், வாலி, ஆனந்தவிகடன், 01-ஜூன் -2011)
- (இலக்கியப் பயன்பாடு)
- காதலுங் களிப்பு மென்னுங் கவடுவிட்டு (சீவக. 1389).
- கவடுபடக் கவைஇய . . . உந்தி (மலைபடு. 34).
- கார்ப்பண்யத்தின் கவடுகளையெல்லாம்(ரஹஸ்ய. 504)
- பிரியக்கருதினான் கவடுபோலும் (இறை. 51,உரை)
- (இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---கவடு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற