கிரகநிலை
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- கிரகம் + நிலை = கிரகநிலை
- புறமொழிச்சொல்---சமசுகிருதம்--ग्रह--க்ரஹ + தமிழ்--நிலை = கிரகநிலை..
பொருள்
[தொகு]- கிரகநிலை, பெயர்ச்சொல்.
- கிரகம் நிற்கும் நிலைமை ((சோதிடவியல்) )
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
[தொகு]- சோதிடக்கலைக்கு ஆணிவேரானது நவ கிரகங்கள்..ஒருவரின் நிகழ் அல்லது எதிர்காலப்பலனை அறிய, அவரின் சாதகத்தை சோதிடர் ஆராய்வார்..சாதகத்தில் கணித்துள்ளபடி ஒன்பது (நவ) கிரகங்களும் அந்த ஒருவருக்கு அந்த நேரத்தில் எந்தவிதமான பலனை அளித்துக்கொண்டிருக்கின்றன அல்லது அளிக்கப் போகின்றன என்பதை அவை சாதகத்தில் இருப்பு நிலையைக்கொண்டு கணக்கிட்டுக் கூறுவார்...அந்த நிலைகள் நட்பு,ஆட்சி, உச்சம், பகை, நீசம் என ஐந்து இடங்களாகும்..ஒவ்வொரு கிரகமும் அதனதன் இருக்கும் இடத்தைப் பொறுத்து சாதக பாதகங்கள் அமையும்... அந்த இருப்பு நிலையே கிரகநிலை ஆகும்..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +