தத்தி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

தத்தி, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

 1. கொடை (யாழ். அக.)---(புறமொழிச்சொல்--சமசுகிருதம்--ददि---த3தி3---மூலச்சொல் )
 2. சத்துவம்- (புறமொழிச்சொல்--சமசுகிருதம்--धृति--த்4ருதி1---மூலச்சொல் )
  (எ. கா.) அவன் ததியுள்ளவன். (J.)
 3. காண்க... ததி³. (யாழ். அக.)
 4. ஓர் ஏளனச் சொல் கொச்சை மொழியில்

(மந்த புத்தி உடையவர்)

மொழிபெயர்ப்பு[தொகு]

 • ஆங்கிலம்
 1. gift
 2. strength, power, influence
 3. See... ததி³
 4. dullard in slang expression

விளக்கம்[தொகு]

 • புறமொழிச்சொல்--சமசுகிருதம்...நான்காவது பொருள் பேச்சு மொழியில் மட்டுமே பயன்படும்...இந்தச்சொல் மந்த புத்தியுடன் சோம்பேறித்தனமாக இருக்கும் நபரைக் குறிப்பிடப் பயன்படுகிறது...இது தயிர் சாதம் எனப் பொதுவாகக் கூறப்படும் 'தத்தியோதனம் ' என்னும் சொல்லின் முதல் மூன்று எழுத்துக்களைக் கொண்டு உருவானது...தயிர் சாதத்தை அதிக அளவு உண்டால் உடலும் மூளையும் மந்தமாகிவிடும் என்று கருதப்படுகிறது...தத்தி என்னும் சொல் வடமொழியில் தயிர் (दधि--த3தி4) என்ற சொல்லோடு தொடர்புடையது...தமிழ் மொழியின் 'தத்தி' என்ற சொல்லை வல்லொலியாக உச்சரிப்பதைப்போன்று அல்லாமல் இந்த மந்த புத்தி தத்தியை மெல்லொலியாக அதாவது கந்தன் என்னும் சொல்லில் 'த'வின் ஒலிபோல பலுக்கவேண்டும்...

பயன்பாடு[தொகு]

 • அட கடவுளே!! சுடலையிடமா இந்த விடயத்தைச் சொல்லித் தீர்வு கேட்கப்போகிறாய்?அவனொரு தத்தி...உனக்கு ஒரு தீர்வும் கிடைக்காது...வேறு ஆளைப் பார்!...


( மொழிகள் )

சான்றுகள் ---தத்தி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=தத்தி&oldid=1893858" இருந்து மீள்விக்கப்பட்டது