திரிபு
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- திரிபு, பெயர்ச்சொல்.
- மாற்றம், வேறுபாடு
- தோன்றல், திரிதல், கெடுதல் என்ற புணர்ச்சி விகாரம். (தொல். எழுத். 109, உரை.)
- முத்திக்கு இடையூறாய் நிற்கும் விபரீதவுணர்வு
- முதலெழுத்தொழியஇரண்டு முதலான எழுத்துக்கள் அடிதோறும் ஒத்திருக்கையிற் பொருள் வேறுபடப் பாடுஞ் செய்யுள்.
- (இயற்பியல்)-உருக்குலைவிக்கும் விசை செயற்படுவதால், பொருளின் நீளம், பருமன் அல்லது வடிவம் மாறுபடுகிறது. அதாவது அப்பொருள் திரிபு நிலையில் உள்ளது எனப்படும். ஒரு பொருளில் ஏற்பட்ட பரிமாண மாற்றத்திற்கும் அதன் தொடக்க நிலைப் பரிமாணத்திற்கும் இடையேயான தகவு திரிபு எனப்படுகிறது.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- change, alteration
- (Gram.) change in form
- perverted understanding, as an obstacle to salvation
- stanza whose initial letters excepting the first are identical in each line
- (physics) - strain
விளக்கம்
- ஒரு வினைச்சொல்லானது, அடுத்து வரும் சொல்லுக்கு ஏற்ப பொருள் மாறாமல், எழுத்து மட்டும் மாற்றம் பெற்று இருக்கும் நிலையினை, அதன் திரிபு நிலை என்கிறோம்.
பயன்பாடு
- வடமொழிச் சொற்களைத் தமிழின் இயல்புக்கேற்ப ஒலித்திரிபு செய்து வடவெழுத்துகளை விலக்கித் தமிழாக்கிக் கொள்வதே நெறி (கவிக்கோ ஞானச்செல்வன், மொழிப் பயிற்சி: பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!, தினமணிக்கதிர், 27 பிப் 2011)
(இலக்கியப் பயன்பாடு)
- குறிதிரி பறியா வறிவனை (கலித்தொகை.39, 46).
:மாற்றம் - வேறுபாடு - திரி - விகாரம் - தகவு
ஆதாரங்கள் ---திரிபு--- DDSA பதிப்பு + வின்சுலோ +