திருவுளம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
திருவுளம், .
- அரசன், குரு, முதலிய பெரியோரது உள்ளக்கருத்து; திருவுள்ளம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- என் கடவுளே! உமது திருவுளம் நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்: உமது திருச்சட்டம் என் உள்ளத்தில் இருக்கின்றது (திருப்பாடல்கள், அதிகாரம் 40, 8விவிலியம் /பழைய ஏற்பாடு)
- (இலக்கியப் பயன்பாடு)
- 'தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா! இப்பயிரைக்
- கண்ணீரால் காத்தோம்; கருகத் திருவுளமோ? (சுதந்திரப் பயிர், பாரதியார்)
- திருவுளமெனின் மற்றென் சேனையுமுடனே (கம்பரா.கங்கை. 67)
- சீரை உற்றிடும் தணிகைஅம் கடவுள்நின் திருவுளம் அறியேனே (திருவருட்பா, 78)
- உடையானுக் கிருக்கும் ஆசைத்
- திருவுளம் எண்ணி எண்ணிச்
- செவ்விள நகைசெய் கின்றாள் (குடும்ப விளக்கு, பாரதிதாசன்)
- நல்லவேளை திருவுளம், நடக்கவில்லை திருமணம்
- நன்றி நன்றி தேவா உனை மறக்க முடியுமா? (திரைப்பாடல்)
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
- திருவுள்ளம் - திருக்குறிப்பு - உள்ளம் - விருப்பம் - சித்தம் - உளம் - திருவிளையாடல்
( மொழிகள் ) |
சான்றுகள் ---திருவுளம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற