உள்ளடக்கத்துக்குச் செல்

தெறோச்சி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
(கோப்பு)
ஐக்கிய இராச்சியத்தின் தெறோச்சிப்படை வீரர்கள் 105 மி.மீ. இலகு தெறோச்சி மூலம் சுட்டுப் பயிற்சி எடுக்கின்றனர்

பொருள்

[தொகு]
  • தெறோச்சி, பெயர்ச்சொல்.

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  • ஆங்கில உச்சரிப்பு - howitzer

விளக்கம்

[தொகு]
தெறு+ ஓச்சு + இ = தெறோச்சி [1]
  • தெறு- சுடுதல், அழித்தல், கொல்லுதல்,வருத்துதல், நெரித்தல், கொட்டுதல், துன்பம்
  • ஓச்சு- எறிதல், செலுத்துதல், பாச்சுதல், உயர்த்துதல் , தூண்டி விடுதல்
  • - விகுதி

அதாவது கொன்றழிக்கக்கூடிய எறிகணையினை சுட்டு மிகக் கூடிய தொலைவிற்கும் அதிக அளவிலான உயரத்திற்கும் செலுத்துத்தும் ஓர் படைக்கலம் என்று பொருள் படும்.

பயன்பாடு

[தொகு]
  • நேற்று படையினர் முன்னரண்கள் மீது தெறோச்சியால் தாக்குதல் நடத்தியபடி முன்னேறினர்
  • விசுவமடுவில் இருந்த மக்கள் குடியிருப்புகள் மீது தெறோச்சிகள் மூலம் எறிகணைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

சொல்வளம்

[தொகு]
சேணேவி - துமுக்கி - கணையெக்கி - தெறாடி - தகரி - படைக்கலம் - துப்பு - தெறுவேயம்



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தெறோச்சி&oldid=1906484" இலிருந்து மீள்விக்கப்பட்டது