துப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்
 1. உமிழ்
 1. உளவடையாளம்
 2. உணவு, நெய், சத்து
 3. வலிவு, சாமர்த்தியம், செம்மை
 4. உதவி, சகாயம்
 5. வலிமை
 6. அறிவு
 7. திறமை
 8. ஆராயச்சி
 9. முயற்சி
 10. பெருமை
 11. துணை
 12. ஊக்கம்
 13. பொலிவு
 14. நன்மை
 15. பற்றுக்கோடு
 16. தன்மை
 17. தூய்மை
 18. உளவு
 19. பகை
 20. பவளம்
 21. அரக்கு
 22. சிவப்பு
 23. நுகர்ச்சி
 24. நுகர்பொருள்
 25. உணவு
 26. துரு
 27. உமிழ்நீர்
 28. நெய்
 29. படைக்கலப் பொது
 30. சுடுகலன்--> தற்காலத்தில்

பொருள் விளக்கம் (சுடுகலன்)[தொகு]

 • Gun = துப்பு

இச்சொல்லானது புதுமைக்காலத்தில் பயன்பாட்டில் உள்ள அனைத்து வகையான ஆய்தங்களுக்கும் பொதுச்சொல்லாகும். ஏனெனில், துப்பு என்றால் படைக்கலப் பொது என்று பொருள் தருகிறது யாழ்.அகராதி; துணைக்கருவி என்கிறது சூடாமணி நிகண்டு..

ஆக, பண்டைய காலத்தில் இருந்த ஆய்தங்களுக்கான பொதுச்சொல்லாக வழங்கப்பட்டிருத்தலைக் காண்க. புதுமைக்காலத்தில் அவ்வாய்தங்கள் பயன்பாட்டில் இல்லாததால், இச்சொல்லினை தற்காலத்து ஆய்தங்களுக்கான பொதுச்சொல்லாகப் பயன்படுத்தலாம் என்பது என் துணிபு & முடிபு. ஏன் இதனை அவ்வாறு வழங்கலாம் என்றால் ஏற்கனவே நாம் பயன்படுத்தி வந்த சுடுகலன் (ஈழ எழுத்து வழக்கு) என்னும் சொல்லானது வாயில் பலுக்குவதற்கு மிகவும் கடினமாகவும் வேகமாக பலுக்க இயலாததாகவும் உள்ளது. மேலும் இச்சொல்லானது தற்கால ஆய்தங்களின் செயற்பாடுகளை சிறப்பாக விவரிக்கிறது.. எனவே இதனை புதுமைக்கால ஆய்தங்களுக்கு நிகரான சொல்லாக வழங்குவதில் எந்தப் பிழையும் ஏற்படப் போவதில்லை.. தயங்காமல் பயன்படுத்தலாம்!

துப்பு - இச்சொல்லில் ஆய்தங்களுக்கு ஏற்ப வழங்கும் பொருள்:

வலி (சுடுகலன் வலிமையானதே)

பற்றுக்கோடு (சமரில் இதுவே உங்களுக்குப் பற்றுக்கோடு(supportive); அங்கு எப்போதும் இதுதான் பற்றுக்கோடாக அமைவது)

துணை (சமரில் இதுவே உங்களுக்குப் துணையாக நிற்கும்)

துணைக்கருவி (ஆமாம்! இது துணைக்கருவி தான்)

படைக்கலப் பொது (இச்சொல் உலகின் அனைத்து ஆய்தங்களுக்குமான பொதுச்சொல்லே)

பகை (பகைவனுக்கு இது பகையாளியே)

உமிழ்தல் (சன்னத்தை உமிழ்கிறதல்லவா?.. இப்பொருளொன்றே இது GUN-க்கான கலைசொல்லாகும் என்று சான்றாதரமாக்க போதுமானது)

மேற்கண்ட அத்துணை பொருட்களும் ஆய்தத்திற்கு(gun) ஏற்ப அமைந்துள்ளதைக் காண்க.!

இச்சொல்லைப் பயன்படுத்துவதிலோ இல்லை பலுக்குவதிலோ உங்களுக்கு எந்தச் சிக்கலும் இருக்காது.. ஏனெனில் துப்படா, துப்பாக்கி, துவக்கு என்றெல்லாம் பலுக்கிய நாவால் துப்பு என்று அதற்கு இனமான சொல்லைப் பலுக்குவதில் பெரும் சிரமம் இருக்காது. எனவே, சுடுகலனையோ துப்பையோ பயன்படுத்துவது உங்கள் இட்டிகை, ஆனால் அருள் கூர்ந்து இந்த துப்பாக்கி, துவக்கு என்னும் வேற்று மொழிச்சொல்லை மட்டும் பயன்படுத்தவோ பலுக்கவோ படாது!

மொழிபெயர்ப்பு[தொகு]

 • ஆங்கிலம்
 1. spit
 2. clue, trace
 3. food, ghee
 4. vigour
 5. aid
 6. weapon
 7. gun
பயன்பாடு
 • எ.கா: காவல் அதிகாரி ஏதாவது துப்பு கிடைக்குமா என்று தேடினார்.
 • துப்பால் எதிரியைக் குறி வைத்துச் சுடவும்

(இலக்கியப் பயன்பாடு)

 • துப்பார்க்குத் துப்பு ஆய துப்பு ஆக்கி, துப்பார்க்குத் துப்பு ஆயதூஉம் மழை (குறள் 12)
 • மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க துன்பத்துள் துப்புஆயார் நட்பு (குறள் 106)
சொல் வளப்பகுதி

 :துய் - துய்ப்பு - துவ்வு - துப்பாய - துப்பார் - துப்பற்றவன் - துப்பறிதல்


( மொழிகள் )

சான்றுகள் ---துப்பு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=துப்பு&oldid=1968988" இருந்து மீள்விக்கப்பட்டது