தோன்றல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

 • தோன்றல், பெயர்ச்சொல்.
 1. மகன்
 2. தமையன், மூத்தோன், அண்ணன்
 3. அரசன்
 4. தலைவன், அண்ணல், பெருமையிற்சிறந்தோன், கனவான்
  புலவரை யிறந்த புகழ்சாறோன்றல் (புறநா. 21).
 5. முல்லைநிலத் தலைவன்
 6. தோற்றம்
  வரைமருளு முயர்தோன்றல வினைநவின்றபேர்யானை (மதுரைக். 46)
 7. தலைமை
  பூவினுட் பிறந்த தோன்றற் புண்ணியன்(சீவக. 316).
 8. உயர்ச்சி
  வரைகண்டன்ன தோன்றல (நெடுநல். 108).
 9. விளக்கம்
  இருஞ்சுற வுயர்த்த தோன்ற லேத்தருங் குருசி றான்கொல் (சீவக. 1261).
 10. தோன்றல்விகாரம்
மொழிபெயர்ப்புகள்
 • ஆங்கிலம்
 1. son
 2. elder brother
 3. king
 4. chief, great person
 5. chief of a jungle tract
 6. appearance
 7. superiority, greatness
 8. height, loftiness
 9. splendour
 10. (Gram.)insertion of a letter,particle, etc., while combining words
விளக்கம்
பயன்பாடு

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---தோன்றல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

தோன்று, தோற்றம், தோன்றல்விகாரம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=தோன்றல்&oldid=1416279" இருந்து மீள்விக்கப்பட்டது