பணயம்
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- பணயம், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
பயன்பாடு
- பணயம் வை - to bet
- காளையை அடக்குவதற்குத் தனது உயிரைக்கூடப் பணயம் வைப்பதுதான் தமிழன் வீரம் ([1])
- நாட்டைப் பணயம் வைக்கிறான் தருமன். இழக்கிறான். அடுத்தடுத்து ஒவ்வொரு தம்பியாக வைத்து இழக்கிறான். அடுத்து, தன்னையே பணயம் வைக்கிறான். தோற்றுப் போகிறான்! தருமன் பாஞ்சாலியைப் பணயம் வைக்கிறான்; இழக்கிறான்! ([2])
(இலக்கியப் பயன்பாடு)
- ஒருவனாடப் பணயம்-வேறே ஒருவன் வைப்ப துண்டோ?
- சூதிற் பணயம் என்றே-அங்கோர்
- தொண்டச்சி போவதில்லை
- ஏது கருதி வைத்தாய்?-அண்ணே
- யாரைப் பணயம் வைத்தாய்? (பாஞ்சாலி சபதம், பாரதியார்)
- பூணு மாரமும் பணயமாக (கம்பரா. ஊர்தே. 185)
- பார்ப் பான் பணயங்கொடுத்து (விறலிவிடு.)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +