உள்ளடக்கத்துக்குச் செல்

பதடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • பதடி, பெயர்ச்சொல்.
  1. பதர்
  2. உமி
  3. பயனின்மை
  4. வில்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. chaff, blighted grain
  2. husk
  3. futility
  4. bow
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • பயனில் சொல் பாராட்டு வானை மகனெனல்
மக்கட் பதடி யெனல் (குறள், 196)
  • பகர்நிலாக் கற்றை பதடியா (பெருந்தொ. 1278).
  • பதடி வைகல் (குறுந். 323).
  • புள்ள மரிந்த கதிர்ச்செந்நெற்
போரிற் பகடுதனைநெருங்கப்
பூட்டி அடித்து வைகளைந்து
போதக் குவித்தபொலிக்குவையை
விள்ள அரிய குடகாற்று
வீசப் பதடி தனைநீக்கி
வௌ்ளிக் கிரிபோற் கனகவட
மேரு கிரிபோல் மிகத்தூற்றிக்
கள்ளம் எறியுங் கருங்கடைக்கட்
கடைசி பிரித்த மணிமுத்தைக்
களத்தி லெறிய அம்முத்தைக்
கண்டுகுடித்த கட்குவிலை (பிள்ளைத்தமிழ், த.இ.க.க.)

ஆதாரங்கள் ---பதடி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :பதர் - பொக்கு - கருக்காய் - உமி - தவிடு - சொத்தை

"https://ta.wiktionary.org/w/index.php?title=பதடி&oldid=1405500" இலிருந்து மீள்விக்கப்பட்டது