பதர்
Jump to navigation
Jump to search
ஒலிப்பு
![]() | |
(கோப்பு) |
பொருள்
பதர்(பெ)
- உள்ளீடற்ற நெல் முதலிய தானியம்; வெற்றுத் தானியம்; கருக்காய்
- பயனின்மை
- பயனற்றவன்; பயனற்றவள்; வெற்றாள்; வெட்டி
- குற்றம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- chaff, husk, empty ears of grain
- unsubstantiality; emptiness; worthlessness; insipidity; inferiority
- worthless person
- fault, defect
விளக்கம்
பயன்பாடு
- பளுவான பாவப் பாரங்கள் யாவும் பதர் என்றே தள்ளிடுங்கள் (கிறித்தவக் கீர்த்தனம்)
- காற்று வீசட்டும் பதர்கள் பறக்கட்டும் கோதுமை மணிகள் தங்கட்டும் (கிறித்தவக் கீர்த்தனம்)
- பங்குனி மாதம் பதர் கொள் (பழமொழி)
- காற்றுள்ளபோதே தூற்றிக்கொள். தூற்றுதல் என்பதற்கு நெல்லையும், பதரையும் பிரித்தல் என்பது பொருள். பதர் என்பது கருக்காய். இது நெல் போலவே தோன்றும், ஆனால் உள்ளே அரிசியிருக்காது; ஆதலால் லேசாக இருக்கும். அறுவடைக்குப் பின்பு களத்துமேட்டில் கொட்டியுள்ள நெல்லைத் தொழிலாளர்கள் முறங்களில் அள்ளித் தலைக்கு மேலே தூக்கி முறத்தைச் சாய்த்துக் குலுக்கக் குலுக்கக் கனமான நெல் காலடியில் குவியும்; பதரோ காற்றில் பறந்து தொலைவில் போய் விழும். இப்படி நெல் ஓரிடத்திலும் பதர் வேறிடத்திலுமாகப் பிரிந்துவிடும். காற்று வீசவில்லை என்றால் காரியம் நடக்காது. ஆகையால் அது வீசும்போதே வேலையைச் செய்துவிடவேண்டும். வாய்ப்பு நேரும்போது நழுவ விட்டுவிடாமல் பயன்படுத்திக் கொண்டு காரிய சித்தி பெறவேண்டும் என்பது பொதுக் கருத்து. (பழமொழிகள், நிலாச்சாரல்)
(இலக்கியப் பயன்பாடு)
- பதரில் செம்பொன்(பெருங். உஞ்சைக். 34, 194).
- பேதையும் பதரே(நறுந்.).
- பதரறு திருமொழி (சீவக. 2850)
ஒலிப்பு
![]() | |
(கோப்பு) |
பொருள்
பதர்(வி)
- பதராய்ப் போ
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- become useless
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- ஒருகால் பதர்த்ததிறே (ஈடு, 2, 8, 5)
ஆதாரங்கள் ---பதர்--- DDSA பதிப்பு + வின்சுலோ +