உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:அருநாடன்2

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஓங்குக தமிழ் வளம்!

வருக!

உங்கள் வருகைக் குறித்து மகிழ்ச்சி. உங்களது முயற்சி, மேலும் சிறக்க எனது அனுபவங்களை, உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

1.தேடியின்(தேடுசாளரம் - ஒவ்வொரு பக்கத்தின் இடப்பக்க நடுவிலுள்ளது.) மூலம் நீங்கள் பங்களிக்கும் சொல், ஏற்கனவே உள்ளதா? என சரி பாரத்துக் கொள்ளவும்.அது இல்லையெனில், படிவங்களைப் பயன்படுத்தவும்.
2..ஒவ்வொருப் பக்கத்தின் மேலும் காணப்படும் 'புதிய சொற்களை சேர்க்கவும்' என்ற அறிவிப்பைச் சொடுக்குங்கள்.
அதனால் வரும் படிவங்களைத் தேர்ந்தெடுத்து பங்களியுங்கள்.
3. உங்களது கருத்து வேறுபாடு்களை, அந்தந்த சொல்லுக்குரிய 'உரையாடல் பக்கத்தில்' (ஒவ்வொரு பக்கத்தின் மேலும்'உரையாடல் பக்கம்' இருக்கிறது.) தயங்காமல் தெரிவிக்கவும்.
4. பிற கருத்து வேறுபாடு்களை ஆலமரத்தடி என்ற பகுதியில் தெரிவிக்கலாம்.ஒவ்வொரு பக்கத்தின் மேலுமுள்ள ' புதுப்பயனர்களுக்கான உதவி', என்பதனைச் சொடுக்கி பார்வையிடுங்கள்.

விக்கி ஊடக நடுவத்திலிருந்து இயன்ற அளவு படங்களைச் சேர்த்தால், சொற்சுவை கூடும் அல்லவா? முயலுங்களேன்.

காண்க நீங்கள் உருவாக்கியப் பக்கம் தாங்கள் மேலும் சிறக்க வேண்டி, விடைப் பெறுகிறேன்.நன்றி!வணக்கம்.தகவலுழவன் 15:34, 1 ஜனவரி 2009 (UTC)

      • அருநாடன்! தயவுசெய்து மேலுள்ள உரையாடல் என்ற தத்தலை(tab) அழுத்திக் காணவும். அதோடு, 'புதுப்பயனர்களுக்கான உதவி'மேலுள்ள என்பதனை ஒருமுறைக் காணவும்.தகவலுழவன் 13:24, 14 ஜனவரி 2009 (UTC)

ஓங்குக தமிழ் வளம்!

("'நான் வெறும் ஆங்கில மொழிபெயர்ப்பு மட்டும் தராமல் தமிழிலும் .. Am I making sense?.."' என்பதற்கான மறுபதில்..)

விக்சனரியின் சொற்களைக் கூட்ட, நீங்கள் எடுக்கும் முயற்சிகள் மகிழ்ச்சியைத் தருகிறது. எனினும், கீழ்காணும் எனது கருத்துக்களைச் சற்று எண்ணவும். இவையனைத்தும், நமக்கு முன்னே செயல்பட்டவர்கள் காட்டிய முறைமைகளாகும்.

  • அனைத்து ஆங்கில எழுத்துக்களையும், சிறிய எழுத்துக்களிலே எழுத வேண்டும்.
  • முடிந்தவரை,ஆங்கில மொழிபெயர்ப்புகளுக்கு அடைப்புக்குறிகள்[[]] இட வேண்டும்.

அதிக எண்ணிக்கையில் உருவாக்க வேண்டும் என்ற ஆர்வம் இயற்கையானதே. அதிக எண்ணிக்கையில் சொற்களைச் சேர்க்க தானியங்கி அமைப்புகள் உங்களுக்கு உதவுமென நான் நம்புகிறேன். எனக்கு, அது குறித்த அனுபவமில்லை. அதனை விட, பலரும் இத்தளத்தைக் காண, நாம் அடித்தளமிட வேண்டும் என்ற எண்ணம் மிகவும் அத்தியாவசமானது என்று நான் கருதுகிறேன். அதற்காக அரி மற்றும் பானை போன்ற சொற்களை மேம்படுத்தி வருகிறேன். இன்னும் அதற்காக பல படங்கள் தேவை என்பதால் முழுமைப்பெறாமல் இருக்கிறது. இருப்பினும் , அவற்றை ஒருமுறைக் காணவும்.

  • தமிழிலிருந்து, ஆங்கிலம் உள்பட பிற மொழிகளுக்கு செல்ல நானும் உங்களைப் போன்றே ஈடுபடுவேன். அங்ஙனம் செயல் படும் போது இதுவரை இத்துறையில் ஈடுபட்டவர்களின் முறைமைகளை நாம் பேண வேண்டும் என்பதனை நாம் மறக்கக் கூடாது.
  • உங்களின் சொற்களில் சிலவற்றிற்க்கு, நான் ஏற்படுத்திய மாறுதல்கள் அச்சொற்களை மேம்படுத்தியிருப்பதை உணருங்கள்.
  • எந்த உரையாடல்' பகுதியில் உங்கள் கருத்தைத்தெரிவித்தாலும், இறுதியில்~ இக்குறியீட்டினை 4முறையிட்டால், அது தானாகவே உங்கள் பெயர், நேரம் மற்றும் தேதியினை எழுதி விடும்.
  • உங்கள் மின்அஞ்சல் முகவரி முழுமையானதாக இல்லை. நீங்கள் அதனைத் தெரியப்படுத்த விரும்பினால், முழுமையாகத் தெரியப்படுத்தவும். நன்றி! (தகவலுழவன் 14:11, 15 ஜனவரி 2009 (UTC))

வருக! வருக!

[தொகு]

மீண்டும் உங்களைக் காண்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். பழ.கந்தசாமி 00:44, 28 மே 2010 (UTC)Reply

அடையாள அட்டைக்கான தகவல்கள்

[தொகு]

அருநாடன்,

  • நீங்கள் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்கின்றீர்களா? உங்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளதா? இல்லையெனில், கீழே கொடுக்கப்பட்டுள்ளபடி செய்யுங்கள்.
  • கீழ்க்காணப்படும் URL -ஐ ஒற்றி புதிய URL-இல் ஒட்டவும்; பின்னர் Enter செய்தால் ஒரு பக்கம் வரும். அதில் உங்களைப் பற்றிய சில தகவல்கள் (வீட்டு முகவரி, தொலைபேசி எண்கள், குருதி வகை, புகைப்படம்) கேட்கப்பட்டு இருக்கும். அவற்றை உள்ளிட்டு விட்டு Update செய்யவும்.
  • மின்னஞ்சல் முகவரி என்னுடையதாக இருக்கும். அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம்.
  • இது உடனடியாகச் செய்யப்பட வேண்டிய வேலை.

--பரிதிமதி 19 சூன் 2010, 14:30 (இந்திய நேரம்)

-- இது குறித்து அவருக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன்.(த*உழவன் 09:59, 19 ஜூன் 2010 (UTC))

கோவை இணைய மாநாடு முகப்புப் படம்

[தொகு]
  • அருநாடன்! நீங்கள் கோவை இணைய மாநாட்டின் திடலில் அமைத்த, பெரிய திரையின் நிழற்படம் உள்ளதா? இருப்பின் எனக்கு அனுப்பவும். மற்ற படங்கள் இருப்பினும் அனுப்பவும். உங்களின் அலைப்பேசி எண்ணும் எனக்கு வேண்டும்.--த*உழவன் 05:34, 13 ஜூலை 2010 (UTC)
  • வருக!நீண்ட நாட்களுக்கு பிறகு பங்களிப்பதால் மகிழ்கிறேன்.படம் இணைத்தார் இன்னும் நன்றாக இருக்கும்.ஆங்கில மொழிபெயர்ப்பினையும் இணைத்தால், படம் தேட பலருக்கும் வசதியாக இருக்கும்.
  • இந்த கலந்துரையாடலில் , உங்களது கருத்தினைத் தெரியபடுத்தவும்.--த*உழவன் 06:52, 6 செப்டெம்பர் 2010 (UTC)Reply

1000 சொற்கள் சேர்த்தவராவீர்

[தொகு]

அருநாடன், இன்னும் 8 சொற்கள் சேர்த்தால் நீங்கள் 1000 சொற்கள் சேர்த்த பயனளிப்பவர் ஆவீர்! நல்வாழ்த்துகள்! பலருக்கும் ஊக்கமாய் அமையும் உங்கள் தொண்டு. --செல்வா 20:16, 7 செப்டெம்பர் 2010 (UTC)Reply

  • அருநாடன்2, விக்சனரியில் மீண்டும் உங்கள் பதிவுகளைப் பார்க்க மிக்க மகிழ்ச்சி. சென்ற இரண்டு நாட்களில் 100-க்கும் மேற்பட்ட சொற்களை விரைவில் சேர்க்க நீங்களும் ஒரு காரணம். செல்வா கூறியபடி, இன்னும் 8 சொற்கள் பதித்தால் உங்களை அருநாடன்: ஆயிரம் சொல் பதித்த அபூர்வ சிந்தாமணி என்று அழைக்கலாம். மனமார்ந்த நன்றி. பழ.கந்தசாமி 22:06, 7 செப்டெம்பர் 2010 (UTC)Reply


அயராது உழைக்கும் விண்மீனர்!
ஆயிரம் சொற்களுக்கான பக்கங்களைத் தாண்டிய அருநாடன் செய்த அருஞ்செயல்களுக்காக ஒரு விண்மீன்- பாராட்டுமுகமாக! - செல்வா

விக்கி மாரத்தான்

[தொகு]

விக்கி மாரத்தானில் கலந்து கொள்ள வாருங்கள்--ரவி 09:49, 27 அக்டோபர் 2010 (UTC)Reply

வடிவமைப்பு

[தொகு]

ஞாயிறு என்பதன் வரலாற்றைக் கண்ட போது, பொருள்1, பொருள்2 என்ற முறையில் அமைத்துள்ளீர்கள். உங்களுக்கு பிறகு சோமன்பாபுவும், நானும் விரிவு படுத்தியுள்ளோம். நான் மொழிபெயர்ப்பினையும், படங்களையும் இட்டு விரிவு படுத்தியுள்ளேன். அதன் உரையாடல் பக்கத்தினைக் கண்டு கருத்திடவும்.--த*உழவன் 17:02, 30 நவம்பர் 2010 (UTC)Reply

உரிச்சொற்கள்

[தொகு]

வணக்கம் அருநாடன்,

தாங்கள் awb மூலம் பதிவேற்றும் சொற்களில் சில உரிச்சொற்கள், பெயர்ச்சொற்களென இடப்பட்டுள்ளன. எ. கா - அக்கறையுள்ள, அச்சந்தருகிற. இதனை சற்று கவனிக்குப் படி கேட்டுக்கொள்கிறேன்--சோடாபாட்டில்உரையாடுக 10:20, 26 சூன் 2011 (UTC)Reply

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்_பேச்சு:அருநாடன்2&oldid=969546" இலிருந்து மீள்விக்கப்பட்டது