பயனர் பேச்சு:Iramuthusamy

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
வாருங்கள்! உங்களை வரவேற்கிறோம் !!

வாருங்கள், Iramuthusamy!

விக்சனரிக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ் விக்சனரி பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். தளத்தை பயன்படுத்துவது குறித்து ஏதேனும் உதவி, விளக்கம் தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் சொற் பொருள் எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள் அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு இப்படி --> இருக்கும் பொத்தானை அழுத்தவும் . .

விக்சனரிக்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, புதுப்பயனர் பக்கத்தை பாருங்கள். பக்கங்களை எப்படி தொகுப்பது என்று அறிய தொகுத்தல் உதவிப் பக்கத்தைப் பாருங்கள். புதிய சொற்களை சேர்க்க இங்கு செல்லுங்கள்.

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்சனரி உங்களுக்கு முதன் முதலில் எவ்வாறு எப்பொழுது அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி

--சோடாபாட்டில்உரையாடுக 13:00, 27 சனவரி 2012 (UTC)[பதிலளி]

capital letters[தொகு]

வணக்கம் முத்துசாமி,

விக்சனரியிலும் உங்களைச் சந்திப்பதில் மகிழ்கிறேன். தொடர்ந்து பங்களிக்க வாழ்த்துகள். ஒரு சிறு விசயம் - விக்சனரியில் ஆங்கிலச் சொற்களின் முதலெழுத்து capitalize செய்வதில்லை. அனைத்தையும் சிறிய எழுத்துகளால் எழுதுகிறோம். எனவே ஆங்கிலச் சொற்கள் முழுவதையும் சிறிய எழுத்துகளில் (lower case) எழுதும்படி வேண்டுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 13:02, 27 சனவரி 2012 (UTC)[பதிலளி]

வாருங்கள்! உங்களை வரவேற்கிறோம் !!

வாருங்கள், Iramuthusamy!

விக்சனரிக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ் விக்சனரி பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். தளத்தை பயன்படுத்துவது குறித்து ஏதேனும் உதவி, விளக்கம் தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் சொற் பொருள் எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள் அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு இப்படி --> இருக்கும் பொத்தானை அழுத்தவும் . .

விக்சனரிக்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, புதுப்பயனர் பக்கத்தை பாருங்கள். பக்கங்களை எப்படி தொகுப்பது என்று அறிய தொகுத்தல் உதவிப் பக்கத்தைப் பாருங்கள். புதிய சொற்களை சேர்க்க இங்கு செல்லுங்கள்.

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்சனரி உங்களுக்கு முதன் முதலில் எவ்வாறு எப்பொழுது அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி

சோடாபாட்டில்உரையாடுக

ஆலோசனைகள்[தொகு]

capital letters[தொகு]

வணக்கம். முத்துசாமி,

விக்சனரியிலும் உங்களைச் சந்திப்பதில் மகிழ்கிறேன். தொடர்ந்து பங்களிக்க வாழ்த்துகள். ஒரு சிறு விசயம் - விக்சனரியில் ஆங்கிலச் சொற்களின் முதலெழுத்து capitalize செய்வதில்லை. அனைத்தையும் சிறிய எழுத்துகளால் எழுதுகிறோம். எனவே ஆங்கிலச் சொற்கள் முழுவதையும் சிறிய எழுத்துகளில் (lower case) எழுதும்படி வேண்டுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 13:02, 27 சனவரி 2012 (UTC)[பதிலளி]

  • வணக்கம். சோடாபாட்டில்

தங்களை இங்கு சந்திப்பதில் மகிழ்ச்சி. இன்னும் பயிற்சி தேவை எனக்கு. முயற்சி செய்கிறேன் நான் பணியாற்றிய இடத்தில் குறிப்பிடத் தகுந்த அளவு கலைச்சொற்களை சேகரித்துள்ளேன். இவற்றை விக்சனரியில் பதிய விருப்பம். சில சொற்களைப் பதிந்துள்ளேன். அவற்றைப் படித்து, உங்கள் கருத்துக்களைக் கூறினால் மகிழ்வேன். நன்றி. வணக்கம்.--Iramuthusamy 18:30, 27 சனவரி 2012 (UTC)[பதிலளி]

ஒப்பம்[தொகு]

விக்சனரிக்கு வருக என வரவேற்கிறோம். உங்கள் பங்களிப்புக்கு மிக்க நன்றி. புதிய சொற்பக்கங்களைச் சேர்க்கும்போது அப்பக்கங்களில் பயனர் ஒப்பமிடுவது வழக்கமில்லை. யார் சேர்த்தார்/பங்களித்தார் என்பது பக்க வரலாற்றில் உள்ளது. பழ.கந்தசாமி 19:19, 27 சனவரி 2012 (UTC)[பதிலளி]

வைணவம்[தொகு]

முத்துசாமி! உங்களைச் சந்திப்பதிலே மகிழ்ச்சி. வைணவம் குறித்தச் சொற்களை நீங்கள் பதிவது கண்டு மகிழ்ச்சி. ஒவ்வொரு சொல்லிலும் (வைணவம்) என்று அடைப்புக்குறியீடுகளுக்குள் எழுதுகிறீர்கள். அவ்வாறு எழுத வேண்டாமெனக் கேட்டுக் கொள்கிறேன். வைணவம் என்பதனை, பகுப்பாக மாற்றி விட்டால், அப்பகுப்பினைச் சொடுக்கினால், அனைத்து சொற்களும் கிடைக்கும் அல்லவா? எனவே, இனி பதியும் சொற்களில் அங்ஙனம் செய்யக்கோருகிறேன். உங்களின் அலைப்பேச எண் கொடுத்தால், மேலும் பல விக்கிமுறைகளை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன். அதனை ஒப்பிட்டு பார்த்து உங்கள் பணிகளை செவ்வனே செய்ய வேண்டுகிறேன். திருமேனி பாங்கு என்ற சொல் போல, அனைத்து அடைப்புக்குறி சொற்களையும் மாற்ற வேண்டும். மற்றவை பிறகு. வணக்கம்.--04:32, 5 மார்ச் 2012 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

  1. பரஸ்தாபனா (வைணவம்)
  2. பிரதிஷ்டாபனா (வைணவம்)
  3. ஸமஸ்தாபனா (வைணவம்)

இம்மூன்றைத் தவிர அனைத்தினையும், ஏற்கனவே பின்பற்றப்படும் நடைமுறைக்கு ஏற்றவாறு மாற்றி விட்டேன்.இம்மூன்றும் உங்கள் பயிற்சிக்காக அப்படியே விட்டுவிடுகிறேன்.மீண்டும் சந்திப்போம்.வணக்கம்.--06:19, 5 மார்ச் 2012 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

வைணவம்[தொகு]

த*உழவன்!

தாங்கள் சுட்டிக் காட்டியபடி மூன்று சொற்களையும் பக்கம் நகர்த்தி சரி செய்துள்ளேன். எனக்கு பக்கம் நகர்த்த உரிமை உள்ளதா?
தங்களின் ஆலோசனைகள் எனக்கு மிகவும் உதவியாய் அமைந்தன.
எனினும் ஒரு ஐயம் தாயார் என்றால் அம்மா தாயார் (வைணவம்) என்றால் இறைவி அல்லது அம்மன் என்று சுட்டிக்காட்டலாமா? மற்றொரு ஐயம் நான் ஆங்கில சொல் ஒன்றைப் பதிவேற்றினால் தொடர்புடைய தமிழ்ச் சொல் தமிழ் அகாராதியில் உடனுக்குடன் பதிவாகுமா?
என் அலைபேசி எண் 9444441866
என மின்னஞ்சல் muthusamy_ar@rediff.com
மீண்டும் தங்கள் உதவிக்கும் ஆலோசனைகளுக்கும் என இதயங்கனிந்த நன்றி--Iramuthusamy (பேச்சு) 14:34, 5 மார்ச் 2012 (UTC)

1) நகர்த்தல் உரிமை உங்களுக்கு உள்ளது
2) இங்கு பொருள் கொண்டு அடைப்புகளில் இடுவதில்லை. ஒரு சொல்லுக்கு ஒரு பக்கம் என உருவாக்கி, ஒன்றுக்கு மேலுள்ள பொருட்களை அனைத்தையும் ஒரே பக்கத்தில் தருகிறோம்.
3)இல்லை. தானாக உருவாகாது.--சோடாபாட்டில்உரையாடுக 17:45, 5 மார்ச் 2012 (UTC)
நன்றி.பாலா!
திரு.முத்துசாமி! உங்கள் அனுபவங்களை இங்கு தொடர்ந்து பதிவதற்கு மிக்க நன்றி. விக்கி திட்டங்களில் அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் கொடுக்கப்படுகிறது. தொடர்ந்து பங்களிப்பவர்களுக்கு, சில பொறுப்புகள், பிறரால் அளிக்கப்படுகிறது. உங்களின் பதிவுகளை/பொறுப்புகளை, பலர் கவனிப்பர்.தேவைப்படும் போது, உங்களுக்கும் அளிப்பர். உங்களுக்கு ஏதேனும் பங்களிப்புக்குறித்த உதவித் தேவைப்படின், கேளுங்கள்.உங்களால் முடிக்கக் கூடியவைகள் அனைத்தும், உங்களின் உரிமைகளே. இவ்வார இறுதியில் உங்களின் பங்களிப்புகளை எளிமையாக எப்படி செய்வது என்பது குறித்து கலந்து ஆலோசிப்பம். வணக்கம்.--05:55, 6 மார்ச் 2012 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

பகுப்பு:சித்தரியல், பகுப்பு:தத்துவம்[தொகு]

--05:55, 6 மார்ச் 2012 (UTC) உழவன் (Info-farmer)+உரை..
விக்கிபீடியாவில் சித்தரியல் என்ற தலைப்பில் அட்டாங்க யோகம் மற்றும் அட்டமாசித்திகள் போன்ற சொற்கள் பகுக்கப்பட்டுள்ளன.
தற்போது விக்சனரியில் மேலே குறிப்பிட்ட சொற்கள் தத்துவம் என்ற தலைப்பில் பகுக்கப்பட்டுள்ளன.
விக்சனரியிலும் சித்தரியல் என்ற தலைப்பில் பகுப்பு செய்தால் இரண்டு திட்டங்களிலும் பயனர்கள் ஒரே விதமான பகுப்பில் பதிய உதவியாயிருக்கும்.
தங்கள் கருத்து என்னவென்று தெரிந்து கொள்ள ஆவலாயுள்ளேன். நன்றி வணக்கம்.--Iramuthusamy (பேச்சு) 12:24, 9 மார்ச் 2012 (UTC)

எனக்கு மாற்றுவதில் உடன்பாடே.அப்பகுப்பினை உருவாக்கியுள்ளேன்.பகுப்பு:சித்தரியல் சரியா?ஆனால், எவையவை அப்பகுப்புக்குள் வரும் என்று எனக்கு தெரியாது. தங்களுக்கு தெரியுமென்றால் மாற்றவும். ஏதேனும் மேலதிக தொடர்புக்கு இப்பக்கத்திலேயே கேட்கவும். மற்றொன்று, உறவுச் சொற்கள் என்ற பகுப்பினை, உறவினர் என்று சுருக்கமா மாற்றலாமா? அது குறித்த உங்கள் பதிவுகளை இப்பக்கத்தில் தெரியபடுத்தக் கோருகிறேன்.--05:23, 10 மார்ச் 2012 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

சாப்ஸ்டிக் குச்சிகள்[தொகு]

சாப்ஸ்டிக் குச்சிகள் என்ற நீங்கள் உருவாக்கிய சொல்லில் சிலமாற்றங்கள் செய்துள்ளேன்.அவைகளை, இனிவரப்போகும் சொற்களில் அமைத்தால், உங்கள் பதிவுகள் மேலும் சிறக்கும் என்ற எண்ணத்தில் கீழ்வருவனவற்றைத் தெரியபடுத்த விரும்புகிறேன்.

  1. நீங்கள் உருவாக்கும் சொல், பிற மொழியிலிருந்து வந்த சொல் என்று உறுதியாகத் தெரிந்தால், பகுப்பு:புறமொழிச் சொற்கள் என்பதனை இடவும்.
  2. அப்படி பிற மொழிச்சொல்லாக இருந்தால், படிவத்தில் இருக்கும் {.{விளக்கம்}} வார்ப்புருவினைத்தவிர, மற்றவற்றை நீக்குங்கள்.
  3. {.{சொல்வளம்3|*|*|*}} என்பது கட்டாயமில்லை. இருப்பினும், தொடர்புடைய சில சொற்களைச்சேர்த்தால் நன்றாக இருக்கும்.
  4. தமிழ் என்ற தலைப்புத் தேவையில்லையென்பது ஒரு சிலரின் கருத்து. உங்களுக்கு உடன்பாடு என்றால் அதனையும் விட்டு விடலாம்.
  5. முப்புள்ளிகள் எங்கு வரினும், அந்த இடத்தில் வாக்கியங்கள் எழுதினால், அம்முப்புள்ளிகளை நீக்கி விடவும்.
  6. வேறொரு பயனருடன் பேசிக் கொண்டிருந்த போது, அவர் சொன்னார் எதிர் காலத்தில் அலைப்பேசிப் பயன்பாடுகள் அதிகமாகி விடும்.அதற்கு ஏற்றாற் போல உங்கள் படிவத்தை மாற்றுங்கள் என்று கூறினார்.அதுவும் சிந்திக்க வைக்கக் கருத்தே.அது பற்றி இன்னும் முடிவு ஒன்றும் எடுக்கவில்லை. ஆனால், இதுவரை வந்த அனுபவத்தின் அடிப்படையில், மிதம் என்ற சொல் வடிவம் இருப்பின் நன்றாக இருக்குமெனப்படுகிறது. மற்றவை உங்கள் கருத்துக் கண்டு. வணக்கம்.--04:44, 12 மார்ச் 2012 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

துப்பாக்கிகள்[தொகு]

பல அடி கைத்துப்பாக்கி என்பதில் நீங்கள் உருவாக்கியச் சொற்களை கொண்டு, சொல்வளப்பகுதியை உருவாக்கியுள்ளேன். இதனை அனைத்து சொற்களிலும் இணைத்திடலாம். இவ்வாறு இடுவதன் நோக்கம் யாதெனில், நீங்கள் உருவாக்கிய சொற்கள் அனைத்தினையும் ஒருவர் காணலாம். எனக்கு நேரம் இருக்கும் போது, அனைத்திலும் உரிய படங்களை இணைக்கிறேன்.இங்கு உரிய படங்களை காணலாம். நீங்கள் இவ்வாறு சொல்வளப்பகுதியினையும், படங்களையும் இணைத்தால், உங்கள் உருவாக்கம் சிறப்படையும்.வணக்கம்.--07:56, 18 மார்ச் 2012 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

கூட்டுச்சொற்கள்[தொகு]

உங்கள் பதிவுகள் மேலும் சிறக்க கீழ்கண்டவைகளைத் தெரிவிக்க விரும்புகிறேன்.

  1. ஒரு புதிய சொல்லுக்கான பொருளை எழுதும் போது, அதனை ஏற்கனவே உருவாகியுள்ள சொல்லோடு தொடர்பு ஏற்படுத்துங்கள்.(எ. கா.) பதவி உயர்வு என்று மட்டும் சொல்லாமல், பதவி உயர்வு என்று எழுதினால் மேல்விக்கியால் சிறப்பான சொல் உருவாக்கமாகக் கருதப்படும்.
  2. முடிந்த வரை தமிழில் கூட்டுச்சொற்களை உருவாக்குவதை தவிர்க்கவும்.
  3. விளக்கம், பயன்பாடு, சொல்வளம் போன்றவைகளை எழுதவில்லையெனில் நீக்கி விடவும். வெற்றாக இருந்தால், ஒரு சொல்லுக்கான பொருளை விட, அதன் வடிவம் குறித்த சொற்கள் அதிகமாக தென்படுகிறது. அவ்வாறு நீக்கினால், நீங்கள் எழுதும் பொருளை உடன் காண வாய்ப்புண்டு.

தங்கள் பதிவுகளுக்கு நன்றி. மீண்டும் சந்திப்போம். வணக்கம்.--04:32, 22 மார்ச் 2012 (UTC) உழவன் (Info-farmer)+உரை..
--பேச்சு) உழவன் (Info-farmer)+உரை..

துப்பாக்கிகள் என்னும் தலைப்பில் தாங்கள் தெரிவித்த கருத்துக்கள் மிகவும் பயனுள்ளன. நான் உருவாக்கிய சொற்களை கொண்டு, சொல்வளப்பகுதி உருவாக்கி அனைத்து சொற்களிலும் இணைத்தல் அற்புதமான கருத்து. படிப்படியாக இவற்றைச் செய்கிறேன்.
கூட்டுச்சொற்கள் என்ற தலைப்பில் சொல்லிய கருத்துக்கள் யாவும் பயனுள்ளவை. முடிந்தவரை புதிய சொற்களை ஏற்கனவே உள்ள சொல்லோடு இணைக்க முயல்கிறேன்.
தங்கள் கருத்துக்களுக்கும் மேலான ஆலோசனைகளுக்கும் மிக்க நன்றி.--Iramuthusamy (பேச்சு) 09:54, 22 மார்ச் 2012 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Iramuthusamy&oldid=1081765" இலிருந்து மீள்விக்கப்பட்டது