பயனர் பேச்சு:Td.dinakar

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தொடர்பு கொண்டமைக்கு நன்றி. நான் சென்னையில் வசிக்கிறேன். தொடர்புக் கொள்ள வேண்டிய எண் 90031-60065.

தினகர்

தொடர்புக் கொண்டமைக்கு நன்றி. நான் சென்னையில் வசிக்கிறேந். தொடர்புக் கொள்ள வேண்டிய எண் 90031-60065.

தினகர்

உதவி[தொகு]

 • நான் த-உழவன். தங்கள் வருகைக்கு நன்றி. உங்கள் அருகில் இருந்து உங்களுக்கு பயிற்சி அளித்தால், அதனால் பல இடர்களை, நீங்கள் தவிர்க்கலாமென்று எண்ணுகிறேன். இந்தி விக்கிப்பீடியாவில் ஒரு கட்புலனில்லா ஒருவரைச் சந்தித்தேன். இந்திய சிறந்த விக்கியர்களில், அவரும் ஒருவர். நீங்களும் அவர் போல வளர, என்னால் முடிந்தவைகளை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன். எனவே, நீங்கள் எந்த ஊரில் இருந்து செயல்படுகிறீர்கள் என அறிந்து கொள்ள ஆவல். வணக்கம்.-- உழவன் +உரை.. 17:03, 28 சனவரி 2013 (UTC)[]

நான் பார்வையற்றவன் என்பதால் NVDA எனும் திரை வாசிப்பானைப் பயன்படுத்தி கணினியுடன் அலவலாவுகிறேன்.

விக்சனரியில், "உசாத்துணை" போன்ற தலைப்பின்கீழ் மற்றொரு இணையப் பக்கத்தின் தொடுப்பினை அளிக்கும்பொழுது, திரையில் ஒரு படம் தோன்றி, அதன் உள்ளடக்கத்தை தட்டச்சிட சொல்கிறது. இதனால், நான் இதைச் செய்ய இயலாமல், அருகிலிருக்கும் பார்வையுள்ள ஒருவரை உதவிக்கு அழைக்க வேண்டியுள்ளது.

ஆகவே, பிற இணைய பக்கங்களில் அளிக்கப்படுவதுபோல், ஒலியைக் கேட்டு உள்ளிடும் முறையை அறிமுகம் செய்தால் உதவியாயிருக்கும். இதைச் செய்ய இயலுமா?

நன்றி,


தினகர். (14:57, 28 சனவரி 2013‎ Td.dinakar)

உங்கள் கணக்கு புதிய கணக்கு என்பதால் CAPTCHA வருகிறது. நான்கைந்து நாள் சென்ற பிறகு அல்லது 10 தொகுப்புகளுக்கு மேல் செய்த பிறகு CAPTCHA வருவது நின்று விடும் --சண்முகம்ப7 (பேச்சு) 17:41, 28 சனவரி 2013 (UTC)[]

வரவேற்புரைகள்[தொகு]

வருக!

 • பல சொற்களைக் காணுங்கள். பிறகு சொற்பதிவுகளைச் சிறப்பாக செய்திடுங்கள். ஏதேனும் உதவி தேவையெனின், இப்பக்கத்திலேயே கேட்கவும். ஓரிரு நாட்களில் உங்களுக்கான உதவிகளை, நானோ, பிறரோ செய்வோம்.
வணக்கம்.--16:58, 26 சனவரி 2013 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

அப்படியேச் செய்கிறேன். பதிவேற்றும் சொல், வினைச் சொல்லாக இருந்தால், இந்த வார்ப்புருவை பயன்படுத்த இயலுமா?

தினகர்

பெயர் சொல்லுக்கான வார்ப்புரு[தொகு]

நீங்கள் பெரும்பாலும் புதிய பெயர்ச்சொற்களை பதிவேற்றம் செய்கிறீர்கள். மகிழ்ச்சி. உங்கள் பதிவுகளை, நீங்கள் வேகமாக செய்ய ஒரு சிறு வார்ப்புருவை வடிவமைத்துள்ளேன். அது வருமாறு:- {{subst:noun|மொழிக்குறியீடு|தமிழ் விளக்கம்}}. கருநிறத்தில் தடிமனாக இருக்கும் இதனை அப்படியே நகலெடுத்து, நீங்கள் பதிவேற்றும் சொல்லின் தொகுத்தல் சாளரத்தில் ஒட்டிக்கொள்ளவும். பிறகு, மொழிக்குறியீடு என்பதனை நீக்கிவிட்டு, நீங்கள் பதிவேற்றும் சொல் ஆங்கிலம் என்பதால், en என்பதை இணைக்கவும். அதனை அடுத்து ஒரு நேர்குத்துக் கோடு(pipeline) இருக்கும் அதனை அடுத்து, பதிவேற்றும் சொல்லுக்குரிய தமிழ்விளக்கத்தினை எழுதிச் சேமிக்கவும். நீங்கள் உருவாக்கிய ஆங்கிலச்சொல், தமிழ் விளக்கத்துடன் உரிய படிவத்தில் நிரப்ப ப்பட்டு பதிவேறியிருக்கும். இதனால், பராமரிப்பு வேலை எளிது. மேலும், நீங்கள் பதிவேறும் சொல், பெயர்ச்சொல் என்பதால் உரிய பகுப்பும் தானாகவே நிரப்ப ப்பட்டு இருக்கும். மேலும், பிறகு இதனை தானியங்கி மூலம் விரிவாக்கவும், பராமரிக்கவும், தேவையெனில் படம் இடவும் எளிது. எனவே, இனி தவறாமல், மேற்கண்ட வார்ப்புருவை பயன்படுத்தவும். நன்றி.வணக்கம்--தகவலுழவன் (பேச்சு) 17:19, 19 திசம்பர் 2013 (UTC)[]

கருத்திடுக.[தொகு]

மீடியாவிக்கி பேச்சு:Gadget-mySandbox.js என்ற பக்கத்தில், ஒரு பெயர் மாற்றுதலுக்கான தங்கள் பதிலை எதிர்நோக்குகிறேன். sandbox என்ற சொல்லிற்கு தற்போது, அனைத்து விக்கித்திட்டத்திலும், மணல்தொட்டி என்ற மொழிபெயர்ப்பு உள்ளது. அப்பகுதியில் தயக்கமின்றி பயிற்சிகள் செய்யலாம் எனவே, அதனை பயிற்சியிடம் அல்லது பயிலுமிடம் என்ற மாற்றலாமென்று எண்ணுகிறேன். உங்களது கருத்தென்ன?--தகவலுழவன் (பேச்சு) 17:43, 2 மார்ச் 2014 (UTC)[]

வடிகட்டி[தொகு]

இல்லாதச் சொற்களை, இனி விக்சனரிக்குள்ளேயே பிரித்தெடுக்க, தேவையான நிரல் எழுதப்பட்டுள்ளது. இதற்கானச் சோதனைகளிலும் வெற்றி பெற்றுள்ளோம். உங்களுக்கு நேரம் இருக்கும் போது, அழையுங்கள் இதற்குரியதை விளக்குகிறேன். வணக்கம்.--தகவலுழவன் (பேச்சு) 18:25, 6 மார்ச் 2014 (UTC)[]

 1. கட்டாயம் தங்களை அழைத்து விவரங்களைத் தெரிந்துக் கொள்கிறேன்.தினகர்
 2. தங்களிடம் இன்று உரையாடியதிலிருந்து இந்த வார்ப்புருவை பயன்படுத்துவதில் எனக்கு சிறிது சிக்கல் இருக்குமென நினைக்கிறேன். ஆகவே, என் கணக்கில் தாங்களே வடிகட்டுவதற்கான வார்ப்புருவைச் சேர்த்துவிடுமாறுக் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி. தினகர்

 • ஆவணப்படுத்தி இருக்கிறேன். தங்களுக்கு ஏற்படும் இடரைக் குறிப்பிட்டால், மாற்றங்களை ஏற்படுத்துவோம். --தகவலுழவன் (பேச்சு) 14:44, 9 மார்ச் 2014 (UTC)[]
  • பயன்படுத்துவதற்கான குறிப்புகள் வருமாறு;-
   • தொகுத்தல் சாளரத்தின் இறுதியாக விக்சனரி என்ற சொல் வந்திருக்கும். அதனை அழுத்தினால், கீழே புதிய வரிசையொன்று வந்திருக்கும்.
   • அப்புதிய வரிசையில் இரண்டு ஆழிகள்(buttons) உள்ளன. முதல் ஆழி, 'சொற்களுக்கு இணைப்பு குறியிடுக' என்ற விவரத்தைத் தரும். உங்கள் கீழுள்ள கட்டத்தில் சொற்களை இட்டு, இதனை அழுத்தினால், அனைத்துச் சொற்களுக்கும் இணைப்பு குறியீடுகளை இட்டு விடும் .அதாவது சொல் .
   • இவ்வாறு இட்ட பிறகு, அதற்கு அடுத்துள்ள ஆழி மீது வைத்தால், அது சிகப்பு இணைப்புகளை மட்டும் வடிகட்டு என்று காட்டும். இப்பொழுது இதனை அழுத்தினால், விக்சனரியில் இருக்கும் சொற்கள் தானாகவே மறைந்து, சிவப்புச் சொற்களை மட்டும் காட்டும்.
   • [[ ]] குறியீடுகள் தேவையில்லை என்றால், முதலில் உள்ள ஆழியினை அழுத்தினால், இட்ட அடைப்புக்குறிகள் நீங்கிவிடும்.

மற்றவை உங்கள் எண்ணம் கண்டு,..வணக்கம்.--தகவலுழவன் (பேச்சு) 14:44, 9 மார்ச் 2014 (UTC)[]

சட்டத்துறை[தொகு]

(சட்டத்துறை) என குறிப்பிட்டு தொடங்கும் ஆங்கிலச் சொற்களை, இனி {{சட்டத் துறை|en}} எனக்குறிப்பிடுங்கள். அப்படி செய்தால், அச்சொற்கள் தானாகவே, ஆங்கிலம்-சட்டத்துறை பகுப்பில் இணைந்துவிடும். மேலும், semicolonகுறியீடும் தானாகவே இடப்படும். எனவே, நீங்கள் (சட்டத்துறை) என்பதை, {{சட்டத்துறை|en}} என மாற்றி இடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.--தகவலுழவன் (பேச்சு) 17:46, 12 மார்ச் 2014 (UTC)[]

 1. அப்படியேச் செய்கிறேன்

தினகர்

இவைகளையும் காணவும்:[தொகு]

இவைகளையும் காணவும்: என்பதை இனி *இவைகளையும் காணவும்:- என இனி பயன்படுத்த கேட்டுக் கொள்கிறேன்.--தகவலுழவன் (பேச்சு) 16:51, 21 மார்ச் 2014 (UTC)[]

அப்படியே ஆகட்டும். -- [ [பயனர்:Td.dinakar|தினகர்]] (பேச்சு) 09:29, 23 மார்ச் 2014 (UTC)
ஒத்துழைப்புக்கு நன்றி. தினகர் என்ற பக்கத்தில் உங்களைப்பற்றிய அறிமுகத்தைத் தந்தால், அது பிறருக்கு உந்துதலாக இருக்கும். எனவே, அறிமுகவுரயைத் தாருங்கள். ஆவலுடன்.--தகவலுழவன் (பேச்சு) 10:44, 23 மார்ச் 2014 (UTC){ {[]

இறுதியில் ஏற்படும் பகுப்புப்பிழை நீக்குக.[தொகு]

தொடர்ந்து உங்களது பங்களிப்புகளைக் காணும்போது மகிழ்வாக இருக்கிறது. எனினும், ஒவ்வொரு சொல்லின் இறுதியில் வரும் {{பகுப்பு:ஆங்கிலம்-கூட்டுச்சொற்கள்} என்பதை [[பகுப்பு:ஆங்கிலம்-கூட்டுச்சொற்கள்] என மாற்றுக.மற்றவை சிறப்பாக உள்ளது. நான் இதுவரை இப்பிழையை நீக்கிவந்தேன். இனி நீங்களே, இப்பிழை வராவண்ணம், பங்களிக்கவும். வணக்கம்.--தகவலுழவன் (பேச்சு) 16:44, 7 மே 2014 (UTC)[]

 1. என்றுத் தட்டச்சுச் செய்தால், உள்ளீடு சேமிக்கப்பட்ட பின்னர், திரையில் :ஆங்கிலம்-கூட்டுச்சொற்கள்: ென்கிறப் பகுப்புத் தோன்றுவதில்லை. நிரலில் வழு உள்ளதென நினைக்கிறேன்.

எடுத்துக்காட்டாக, legal separation ென்கிறப் பக்கத்தைக் காணவும்.

நன்றி, --தினகர் (பேச்சு) 15:02, 8 மே 2014 (UTC)[]

நீங்கள் கூறியது போல பகுப்புநிரலில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அது மறைக்கப்பட்ட பகுப்பாக நிரலாக்கம் செய்யப்பட்டுள்ளது. எனவே, வழு அல்ல. பக்கமொன்றை உருவாக்கிய பிறகு மேலுள்ள தொகு என்பதை அழுத்தினால், பக்கம் தொகுப்பதற்கான சாளரம் வரும் அல்லவா? அதன் கீழ் இறுதிவரியாக, //இப்பக்கம் ஒரு மறைக்கப்பட்ட பகுப்பில் அடங்குகிறது:// என்ற குறிப்பு தோன்றும். அதற்கு முன், ஒரு அம்புக்குறி இருக்கும் அதனை அழுத்தினால், மறைக்கப்பட்ட பகுப்பு அப்பக்கத்தில் இருந்தால் காண்பிக்கும். இது போல பகுப்பொன்று மறைக்கப்படுவதற்குக் காரணம், முன்பு கூட்டுச்சொற்களின் ஆதாரங்களில் முன்பு வழு வந்தது. அதனை அனைத்து கூட்டுச்சொற்களிலும் சரி செய்ய இப்பகுப்பு தோற்றுவிக்கப்பட்டது. பிறருக்கு இது அதிகம் பயன்படாது என்பதால், இன்றளவும் அப்பகுப்பு மறைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து ஏதேனும் மாற்றுக்கருத்து தெரிவிக்க விரும்பினால் கூறவும்.வணக்கம்.--தகவலுழவன் (பேச்சு) 16:48, 8 மே 2014 (UTC)[]

இப்பொழுது புரிந்து கொண்டேன். இனி பகுப்பினை சரியாகச் சேர்ப்பேன். நன்றி. --தினகர் (பேச்சு) 09:30, 9 மே 2014 (UTC)[]

பகுப்பு:கணினியியல்[தொகு]

கணினித் தொடர்பான ஆங்கிலச் சொற்களுக்கு கீழ் வரும் இரு பகுப்புக்கள் பயன்படுத்தப்படுகின்றன:

 1. பகுப்பு:ஆங்கிலம்-பொதுக்கணினியியல்
 2. பகுப்பு:ஆங்கிலம்-கணினி மற்றும் மென்பொருள் சொற்கள்

மேற்கூறியவைகளில் நான் எதைப் பயன்படுத்த வேண்டும்?

நன்றி, --தினகர் (பேச்சு) 14:55, 11 மே 2014 (UTC)[]

 1. பகுப்பு:ஆங்கிலம்-பொதுக்கணினியியல் (பொதுவாக அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய சொற்கள்)
 2. பகுப்பு:ஆங்கிலம்-கணினி மற்றும் மென்பொருள் சொற்கள் (அத்துறைச் சார்ந்தவர்கள் அதிகம் பயன்படுத்தும் சொற்கள்)
ஆனால், இத்தகைய வேறுபாட்டை பெரும்பாலோர் பின்பற்றுவதில்லை.--தகவலுழவன் (பேச்சு) 18:07, 11 மே 2014 (UTC)[]

விளக்கத்திற்கு நன்றி. --தினகர் (பேச்சு) 07:18, 12 மே 2014 (UTC)[]

சொற்பட்டியல்-மின்னஞ்சல்[தொகு]

நீங்கள் அனுப்பிய சொற்பட்டியல் குறித்து, தங்களக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளேன். எனது எண்ணுக்கு அழைக்கவும்.9095343342--தகவலுழவன் (பேச்சு) 09:12, 22 செப்டம்பர் 2014 (UTC)[]

w:விக்கிப்பீடியா:உதவித்தொகை என்பதில் கலந்து கொள்க[தொகு]

இந்திய விக்கிமீடியாவின் நிதி உதவியால், மடிக்கணினிப் பெற, தமிழ்விக்கிசமூகத்தின் ஒப்புதல் பெற வேண்டும். எனவே, w:விக்கிப்பீடியா:உதவித்தொகை#Info-farmer (தகவலுழவன்) என்ற திட்டப்பக்கத்தில், விண்ணப்பித்துள்ளேன். இதுபற்றி ஏற்கனவே, தமிழ் விக்கிப்பீடியாவின் மேனிலைப் பங்களிப்பாளர்(Bureaucrats)களுக்கும், சிறப்புநிலைப் பங்களிப்பாளர்(system operator) களுக்கும், அவரவர் உரையாடற்பக்கத்தில், தனித்தனியே செய்தி விடுத்துள்ளேன். பிற பங்களிப்பாளரகளும், அத்திட்டபக்கத்தில் தங்களின் நிலைப்பாட்டைக் கூற அழைக்கிறேன். மேலும், பிற தமிழ் திட்டங்களின் ஆலமரத்தடியிலும், இச்செய்தி விடுத்துள்ளேன். வணக்கம்.---- உழவன்+உரை.. 01:45, 11 சூலை 2015 (UTC) []

எனது அலைப்பேசிக்கு அழைக்கவும்[தொகு]

நேரம் இருக்கம் போது அழைக்கவும்--தகவலுழவன் (பேச்சு) 05:56, 28 மே 2016 (UTC)[]

Share your experience and feedback as a Wikimedian in this global survey[தொகு]

 1. This survey is primarily meant to get feedback on the Wikimedia Foundation's current work, not long-term strategy.
 2. Legal stuff: No purchase necessary. Must be the age of majority to participate. Sponsored by the Wikimedia Foundation located at 149 New Montgomery, San Francisco, CA, USA, 94105. Ends January 31, 2017. Void where prohibited. Click here for contest rules.

எனது எண்ணுக்கு அழைக்கவும்[தொகு]

9095343342--தகவலுழவன்

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Td.dinakar&oldid=1851325" இருந்து மீள்விக்கப்பட்டது