பயனர் பேச்சு:Yoodhaa

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
வாருங்கள்! உங்களை வரவேற்கிறோம் !!

வாருங்கள், Yoodhaa!

விக்சனரிக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ் விக்சனரி பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். தளத்தை பயன்படுத்துவது குறித்து ஏதேனும் உதவி, விளக்கம் தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் சொற் பொருள் எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள் அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு இப்படி --> இருக்கும் பொத்தானை அழுத்தவும் . .

விக்சனரிக்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, புதுப்பயனர் பக்கத்தை பாருங்கள். பக்கங்களை எப்படி தொகுப்பது என்று அறிய தொகுத்தல் உதவிப் பக்கத்தைப் பாருங்கள். புதிய சொற்களை சேர்க்க இங்கு செல்லுங்கள்.

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்சனரி உங்களுக்கு முதன் முதலில் எவ்வாறு எப்பொழுது அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி

ஐபி பேச்சுப்பக்கம்[தொகு]

ஐபி பேச்சுப் பக்கத்தில் உள்ளடங்களை அழித்திருக்கிறேன். நிருவாகி எவரிடமாவது கோரி வரலாற்றையும் அழித்துவிடுகிறேன்.--Sodabottle 13:42, 3 ஏப்ரல் 2011 (UTC)

மிக்க நன்றி. Yoodhaa 13:43, 3 ஏப்ரல் 2011 (UTC)

நான் சென்ற முறை கண்ட பொழுது தமிழ் விக்கி 9வது இடத்தில் இருந்தது. இப்பொழுதோ அது 10ஆம் இடத்தை அடைந்துள்ளது. இது எப்பொழுது நடந்தது? Yoodhaa 13:58, 3 ஏப்ரல் 2011 (UTC)
ஜனவரி 2011ல் மலகாசி விக்சனரி கீழிருந்து மேல் நோக்கி முன்னேறியதால் நாம் 10வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளோம். தற்போது அது ஒரு மில்லியன் வார்த்தைகளைத் தாண்டியுள்ளது. ஆனால் அப்படியே ஆங்கில விக்கியில் உள்ளதை படியெடுத்து தானியங்கி வழியாக பதிவேற்றி மேலே போய்க்கொண்டிருக்கிறார்கள். (மலகாசி அர்த்தங்கள்/வார்த்தைகளை இடுவதில்லை, அப்படியே ஆங்கில விக்கியில் உள்ளதை படியெடுத்து மலகாசியில் ஏற்றிக்கொண்டிருக்கிறார்கள் - பெரும்பாலும், அவ்வார்த்தைகள் நீக்கப்பட வாய்ப்புள்ளது.--Sodabottle 13:50, 3 ஏப்ரல் 2011 (UTC)
அறிந்ததில் மகிழ்ச்சி. மீண்டும் தமிழ் விக்கியை 9ஆம் இடத்தில் சேர்க்க முயல்வோம். Yoodhaa 13:58, 3 ஏப்ரல் 2011 (UTC)
ஆம் முயலுவோம் :-) --Sodabottle 14:03, 3 ஏப்ரல் 2011 (UTC)
தங்களின் பேரார்வத்துக்கு நன்றி. நாமனைவரும் தொடர்ந்து பங்களித்தால், எண்ணிக்கையில் மட்டுமல்ல, விக்சனரி தரத்திலும் முன்னேறும். உங்களைப் பற்றிய ஒரு சிறிய குறிப்பையும் விரும்பினால் தரவும். பழ.கந்தசாமி 14:53, 3 ஏப்ரல் 2011 (UTC)

தமிழ் அர்த்தங்கள்[தொகு]

நீங்கள் உருவாக்கும் சில போலிஷ் சொற்களுக்கு தமிழ் பொருள் தருமிடத்தில் ஆங்கிலப் பொருளை தமிழில் எழுதியுள்ளீர்கள். இவற்றுக்கு தமிழில் அர்த்தம் தரவேண்டும், ஆங்கில எழுத்துப்பெயர்ப்பு வேண்டாம். நேரடியாக தமிழில் இணைச் சொல் இல்லையென்றாலும், தமிழில் சிறு விளக்கம் தந்துவிடுங்கள். மொழிபெயர்ப்பில் ஆங்கிலச் சொல்லை இடலாம்.

(எ.கா) kwarc= குவார்ட்ஸ் என்று எழுதியுள்ளீர்கள். இதற்கு தமிழில் படிகக்கல் என்ற இணைச்சொல் உண்டு. அது போலவே szafir (நீலக்கல்), bratanek (உடன்பிறந்தவரின் மகன்) போன்றவையும். இது போல வேறு சில சொற்களும் உள்ளன (மிகச்சிலவே - நான் சிலவற்றுக்கு). அவற்றை மாற்றுமாரும் வருங்காலப் பங்களிப்புகளில் இதைத் தவிர்க்குமாறும் வேண்டிக் கொள்கிறேன்.--Sodabottle 04:32, 5 ஏப்ரல் 2011 (UTC)


பல போலிசு சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள் தமிழ் விக்கியில் கூட காணப்படவில்லை. தேடி தேடி சோர்ந்து போன பின்னரே அவ்வாறு செய்கலானேன். அசௌகரியத்தை விளைவித்திருந்தால் தயவு செய்து மன்னிக்கவும்.
(எ.கா) நீலக்கல் என்னும் சொல்லை தட்டச்சிட்டு தேடிப் பார்க்கவும்.Yoodhaa 12:53, 5 ஏப்ரல் 2011 (UTC)
  • நன்றி. சரியான தமிழ்ச் சொற்கள் கிடைக்காத பட்சத்தில், நீங்கள் பொருந்தும் என்று நினைக்கும் தமிழ்ச் சொல்லை இட்டுப் பக்கத்தில் அடைப்புக் குறிக்குள் இணையான ஆங்கிலச் சொல்லையும் இட்டால் தெளிவாகிவிடும் (அவ்வாறு எழுதும்போது நீஸ் என்பதைவிட niece என்றே எழுதவும்). அப்பக்கத்துக்குப் பொருள் தேடிவருவோருக்குப் புரியும் என்பதோடு. பின்னால் சரியான தமிழ்ச்சொல் இடவும் வசதியாக இருக்கும். புயல்வேகப் பங்களிப்புக்குப் பாராட்டுகளும், நன்றியும், பழ.கந்தசாமி 15:24, 5 ஏப்ரல் 2011 (UTC)
தங்கள் ஆலோசனைக்கும் பாராட்டிற்கும் நன்றி. Yoodhaa 15:26, 5 ஏப்ரல் 2011 (UTC)


முதற்பக்கத்தில் சிரிலிக்கு எழுத்துகளையும் சேர்த்தால் நன்றாக இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து. Yoodhaa 14:50, 5 ஏப்ரல் 2011 (UTC)

பங்களிக்கக் தொடங்கி சில நாட்களுள் கிட்டத்தட்ட 1000 சொற்களை சேர்த்துள்ளீர்கள். உங்கள் பணியை வியந்து பாராட்டுகிறேன்!. மேலும் உங்கள் பணி தொடர என் வாழ்த்துகள்.

சில குறிப்புகள்:

  1. சிரிலிக்கு எழுத்துகளை முதல்பக்கத்தில் சேர்ப்பது குறித்தான் செய்தியை ஆலமரத்தடியில் இடுங்கள். பிற பயனர்கள் அதைப் பார்த்து கருத்து கூறுவர். ஒருமித்த கருத்து ஏற்பட்டபின் முதல் பக்கத்தில் இட்டு விடலாம்
  2. மலையாள சொற்களுக்கு {{=மலையாளம்=}} என்ற வார்ப்புருவை பயன்படுத்துங்கள்
  • ஒரு வாரத்துக்குள் ஆயிரம் சொற்கள்! விதந்து பாராட்டுகிறேன். வாழ்க, வளர்க! பழ.கந்தசாமி 05:12, 6 ஏப்ரல் 2011 (UTC)

--Sodabottle 04:06, 6 ஏப்ரல் 2011 (UTC)


தங்கள் ஆலோசனைக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி. Yoodhaa 06:22, 6 ஏப்ரல் 2011 (UTC)


கடந்த சில நாட்களாக பங்களிக்க இயலாது போனதற்காக மன்னிக்கவும். -Yoodhaa 01:52, 21 ஏப்ரல் 2011 (UTC)
Yoodhaa, என்ன சொல்றீங்க? பங்களிக்கலையா? புயல்வேகத்தில் போய் அசத்திக்கொண்டல்லவா இருக்கறீங்க? இணைந்து பங்காற்றுவதில் மிகுந்த மகிழ்ச்சி. நாம் அனைவரும் இவ்விக்சனரியை மிகுந்த தூரம் எடுத்துச்செல்லலாம்! பழ.கந்தசாமி 02:04, 21 ஏப்ரல் 2011 (UTC)
நான் கூறியது இடைப்பட்ட காலத்தைப் பற்றி. எனினும், தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி. -Yoodhaa 20:11, 21 ஏப்ரல் 2011 (UTC)

யூதா (Yoodhaa) அவர்களே!! நெஞ்சார்ந்த பாராட்டுகள்! உங்கள் ஆர்வமும் பங்களிப்பும் வியப்பில் ஆழ்த்துகின்றது! --செல்வா 21:09, 1 மே 2011 (UTC)[பதிலளி]

பகுப்பு:தெலுங்கு-உறவினர் என்ற பகுப்பு ஏறத்தாழ 25 சொற்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இப்பகுப்பின் பெயர் மாற்றப்பட உள்ளது. ஏனெனில், பகுப்பு:உறவுச் சொற்கள் என்ற பெயர் 200க்கும் மேற்பட்ட சொற்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. பெயர்கள் ஒருமித்தமாக இருந்தால் நன்றாக இருக்கும், என்ற ஒரே நோக்கத்திற்காக, இதன் பெயரை, பகுப்பு:தெலுங்கு-உறவுச் சொற்கள் என மாற்ற எண்ணுகிறோம். பகுப்பு பேச்சு:தெலுங்கு-உறவினர் என்பதில் உங்கள் எண்ணங்களைத் தெரிவியுங்கள். வணக்கம்.--தகவலுழவன் (பேச்சு) 01:35, 28 மார்ச் 2014 (UTC)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Yoodhaa&oldid=1229207" இலிருந்து மீள்விக்கப்பட்டது