பீரங்கி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பீரங்கி
ஒலிப்பு
(கோப்பு)


மொழிபெயர்ப்பு[தொகு]

ஆங்

  1. cannon


பொருள்

பீரங்கி = (பெ) - ஒரு போர் ஆயுதம்


தமிழ்ச் சொல்[தொகு]


வாக்கியப் பயன்பாடு[தொகு]

  1. பீரங்கிப்படை, ஒரு போரின் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்தும்.


சொல் தோற்றம்[தொகு]

  Firangi> ஃவிரங்கி > பீரங்கி

சொல் விளக்கம்[தொகு]

 பீரங்கி [1] என்பது ஒரு போர்த்துக்கேய மொழிச்சொல்.
இச்சொல்லானது போர்த்துக்கீசிய மொழிக்கு உருதின் فرنگی (இஃவிரங்கீ), பாரசீகத்தின் فرنگی (இஃவரங்கி), அரபின் إفرنجي‎ (இஃவிரன்ஜிய்), பழைய விரெஞ்சின் franc (இஃவிராங்க்) இல் இருந்து சென்ற சொல்லாகும். அங்கு இதன் பொருள் அயலான் என்பதாகும்.


மேலும், இந்த பீரங்கி என்னும் சொல்லின் உண்மையான அடிப்படைப் பொருளும் அயலான் என்பதே ஆகும் ; எறிகணையினைச் செலுத்தும் ஆய்தம் அன்று. இவ்வாய்தமானது வெளிநாட்டில் இருந்து வந்தது; நம் மண்ணிற்கு சொந்தமில்லாதது. ஆகையால் நம்மக்கள் அதற்கு வெள்ளையனின் அயலான் என்னும் பொருள்படும் போர்த்துக்கீசரின் இஃவிரங்கி(firangi) என்னும் சொல்லின் தமிழ்ப்படுத்தப்பட்ட வடிவமான பீரங்கி என்பதை இதற்கான தமிழ்ச்சொல்லாக வழங்கினர் .


இஃது முதன் முதலில் இந்திய துணைக் கண்டத்தின் மொழிகளில் வழக்கூன்றியது, ஐந்திராவிட மொழிகளில் ஒன்றான மராத்திய மொழியிலே ஆகும். அங்கு, கி.பி. 1500 ஆம் ஆண்டு வாக்கில் போர்த்துக்கீசியரால் இறக்குமதி செய்யப்பட்டு பயன்பாட்டிற்கு வந்த ஒரு மெல்லிய ஒடுக்கமான வாளைக் குறிக்கவே இது எழுந்தது[1]. பின்னர் மெல்ல மெல்ல கீழ் வந்து எமது மொழியிலும் நுழைந்தது.


இச்சொலானது தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் இதே Cannon என்னும் பொருளிலே வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

சொல்வளம்[தொகு]

கணையெக்கி - துமுக்கி -தகரி - தெறோச்சி -இயந்திரச் சுடுகலன் - சேணேவி

ஆதாரங்கள்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=பீரங்கி&oldid=1920129" இலிருந்து மீள்விக்கப்பட்டது