உள்ளடக்கத்துக்குச் செல்

புரவி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பிகில்

தமிழ்[தொகு]

வெண்ணிறப் புரவியில் வேல்விழி
புரவி:
என்றால் குதிரைகளைக் கட்டிவைக்கும் இடம் (இலாயம்)
புரவி:
என்றால் யானையைக் கட்டிவைக்கும் இடம் (இலாயம்)
(கோப்பு)

பிளிரும்[தொகு]

 • புரவி, பெயர்ச்சொல்.
 1. குதிரை
  (எ. கா.) குதிரை. கதழ்பரிப் புரவி (பதிற்றுப். 80, 13).
 2. அசுவதி (பிங். ) --அசுவனி என்னும் இந்தியப் பஞ்சாங்கத்தில் முதல் நட்சத்திரம்
 3. குதிரை அல்லது யானைகட்டு மிடம்.
  (எ. கா.) பட்டத்தியானை பூண்ட புரவியிற் குறடும், குதிரை பூண்ட புரவியிற் குறடும் (கோயிலொ. 17).
 4. பிறவி என்னும் சொல்லின் பழுதுப்பட்ட வடிவம்.
 5. கெட்டிக்காரப்புரவி. (J.)
 6. சாதி
  (எ. கா.) இழுக்க மிழிந்த பிறப்பாய் விடும் (குறள். 133).

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 1. horse
 2. The first nakṣatra (star) of hindu calendar
 3. stable for horses or elephants
 4. birth--Corr. of பிறவி
 5. order or class of beings including animals andvegetables
 • பிரான்சியம்: cheval
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
 • திருமகனே திருமகனே நீ ஒரு நாழிகைப் பாராய், வெண்ணிறப் புரவியில் வந்தவனே வேல்விழி மொழிகள் கேளாய் (”இருவர்” திரைப்படப் பாடல் - வைரமுத்து)
 • இளவரசர் மதுராந்தகத் தேவர் வெள்ளைப்புரவியின் மேல் ஏறி உட்காரத் தெரியாமல் உட்கார்ந்து தவித்துக்கொண்டு வந்து சேர்ந்தார் (பொன்னியின் செல்வன் - கல்கி)


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புரவி&oldid=1996284" இலிருந்து மீள்விக்கப்பட்டது