உள்ளடக்கத்துக்குச் செல்

புளகிதம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

புளகிதம் (பெ)

  1. பெருமகிழ்ச்சி, பரவசம் , பேருவகை ; குதூகலிப்பு ; குதூகலம்; ஆனந்தப்பரவசம்; கழிபேருவகை
  2. மயிர்ச் சிலிர்ப்பு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. ecstacy, rapture
  2. horripilation, goose-skin, goosebumps as from rapture
விளக்கம்
பயன்பாடு
  • புளகிதம் கொள் - be full of mirth, joy
  • மழலை என்ன சொன்னாலும் நமக்குப் புளகிதம் தருவதில்லையா? ([1])
  • கண்ணன் புளகிதம் அடைந்தான். ஆனந்தம், பனிபோல் அவன் கண்களைத் திரையிட்டது ([2])

(இலக்கியப் பயன்பாடு)

  • புளகிதத்தோடுங் கண்ணீர்மேவ மெய்கம்பித்து (திருவாலவா. 1, 22)
  • கண்டு தன் இரு விழி களிப்ப, கா ....கத்து
எண் தரும் புளகிதம் எழுப்ப, ஏதிலாள் (சூர்ப்பணகைப் படலம், கம்பராமாயணம்)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---புளகிதம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :புளகாங்கிதம் - புளகம் - மகிழ்ச்சி - பூரிப்பு - புல்லரிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=புளகிதம்&oldid=1069633" இலிருந்து மீள்விக்கப்பட்டது