உள்ளடக்கத்துக்குச் செல்

மனு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மனு (பெ)

  1. குறை, புகார் முதலியன தெரிவித்து எழுதும் கடிதம்
  2. வேலை முதலியன கோரி விண்ணப்பிக்கும் படிவம்; விண்ணப்பம்
  3. வார்த்தை
  4. சோழ மன்னனின் பெயர்
  5. மனுவின் இந்து தருமநூல்; பதினெட்டனுள் ஒன்றான மனுதர்ம சாத்திரம்
  6. மந்திரம்
  7. மனிதன்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. petition, request; prayer
  2. application as for a job
  3. word; submission
  4. an ancient Chola king
  5. A Sanskrit textbook of Hindu law ascribed to Manu, one of 18
  6. incantation, mystical verse or formula
  7. man
விளக்கம்
பயன்பாடு
  • தேர்தல் வேட்பு மனு - nomination application as a candidate in an election
  • கருணை மனு - petition for mercy
  • அழகே பிரம்மனிடம் மனு கொடுக்கப் போயிருந்தேன் .. நீ என் மனைவியாக வேண்டும் என்று (திரைப்பாடல்)
  • அறமாவது, மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும், விலக்கியன ஒழிதலும் ஆம். அஃது ஒழுக்கம், வழக்கு, தண்டம் என மூவகைப்படும் (உரைப்பாயிரம், பரிமேலழகர் உரை, திருக்குறள்)

(இலக்கியப் பயன்பாடு)

  • ஞானம் வாய்க்குமொருமனு வெனக்கிங் கில்லாமை யொன்றினையும் (தாயு. எங்குநிறை. 8)
  • மனுவொன்று பேசுவானே (இராமநா. கிஷ். 9)
  • மனுநூற் றொடைமனுவாற் றுடைப்புண்ட தெனும் வார்த்தை (பெரியபு. மனுநீதி. 37).
  • நெடுமறை மனுக்கள் கூறி (கந்தபு. திருக்கல். 70)
  • மனுவாய்த் தவஞ்செய்வாரின் (பாரத. அருச்சுனன்றவ. 38)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---மனு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :விண்ணப்பம் - படிவம் - மனு தர்மம் - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=மனு&oldid=1635957" இலிருந்து மீள்விக்கப்பட்டது