உள்ளடக்கத்துக்குச் செல்

மருள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
இருள்

தமிழ்

[தொகு]
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • மருள், பெயர்ச்சொல்.
  1. மயக்கம்
  2. பேயாட்டம்
  3. பயம்
  4. திரி புணர்ச்சி.
    மருடீர்ந்த மாசறு காட்சியவர் (குறள், 199)
  5. வியப்பு.
    மருள்பரந்த வெண்ணி லவு (திணைமாலை. 96)
  6. உன்மத்தம். (யாழ். அக.)
  7. கள். (யாழ். அக.)
  8. குறிஞ்சியாழ்த்திறம் எட்டனுள் ஒன்று. (பிங்.)
  9. எச்சம் எட்டனுள் பிறவிமுதல் அறிவின்றி மயங்கியிருக்கும் நிலை.
    மாவும் மருளும் (புறநா. 28)
  10. பெருங்குரும்பை
  11. புதல்
  12. பேய். (பிங்.)
  13. ஆவேசம்
  14. புல்லுரு

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  • ஆங்கில உச்சரிப்பு - maruḷ
  1. confused state / bewildered state
  2. bewilderment of evil spirit
  3. fear
  4. Ignorance of right and wrong; mistaking one for another; delusion; illusion
  5. Wonder
  6. Intoxication; madness
  7. Toddy
  8. (Mus.) A secondary melody-type of the kuṟiñcikuriñci-yāḻ-t-tiṟam, q.v.
  9. Congenital idiocy, one of eight kinds of eccam, q.v.
  10. Bowstring hemp
  11. Bush
  12. Imp, devil
  13. Possession, as by a spirit or deity
  14. scarecrow
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • வெய்யோற்குத் தன்தலை மணிமருள் மாலை சூட்டி (புறநானூறு)
மருள் - மருட்காட்சி - மருட்கை - மருட்கையுவமை - மருட்சி - மருட்டம் - மருட்டி - மருட்டுதல் - மருட்டு - மருட்டுப்பன்றி - மருட்பா


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மருள்&oldid=1995344" இலிருந்து மீள்விக்கப்பட்டது