மருட்டுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

 1. மயக்குதல்
  (எ. கா.) வெல்லாம லெவரையு மருட்டி விட (தாயு. சித்தர். 10).
 2. பயமுறுத்துதல் (W.)
 3. மாறுபடச்செய்தல்
  மாணல மருட்டும் (ஐங்குறுநூறு-139).
 4. ஒத்தல் (ஐங்குறு. அரும்.)
 5. மனங்கவியச்செய்தல்
  மெல்லெனச் செல்க என மருட்டிக் கூறியவாறு (தொல். பொ. 506, உரை).
 6. ஏமாற்றுதல் (யாழ். அக.)
 7. மறக்கச்செய்தல்
  (எ. கா.) கோல் வாங்கித்தருகிறேன் என்று இவனை யழுகை மருட்டி (திவ். பெரியாழ். 2, 6, ப்ர. பக். 358).


மொழிபெயர்ப்புகள்[தொகு]

 1. to entice, fascinate, infatuate, bewitch
 2. to threaten, menace
 3. to cause to be changed
 4. to resemble
 5. to allure, coax
 6. to cheat
 7. to make one forge


சொல்வளம்[தொகு]

மருள் - மருட்காட்சி - மருட்கை - மருட்கையுவமை - மருட்சி - மருட்டம் - மருட்டி - மருட்டுதல் - மருட்டு - மருட்டுப்பன்றி - மருட்பா


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மருட்டுதல்&oldid=1635981" இருந்து மீள்விக்கப்பட்டது