மலிந்த

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மலிந்த (பெ)

  1. நிறைந்த, மிகுந்த
  2. விலையில் சகாய, குறைந்த
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. full of, in abundance
  2. cheap in price
விளக்கம்
  • மலிந்த என்னும் சொல் மல் (மல்கு = பெருகு) என்னும் வேர்ச் சொல்லில் இருந்து எழுந்தது. மலிவு என்றால் விலை குறைவாக உள்ளது என்னும் பொருள், நிறைய (மலிந்து) கிடைப்பதால் விலை குறைந்துள்ளது என்பதைக் குறிப்பதாகும். Supply-demand-price theory of economics is buried in this word மலிவு. மலிஞ்சு கிடக்கு என்பது எங்கும் பரவலாகக் கிடைப்பது --> மலிது = ordinary. அரிதாகக் கிடைப்பது extra-ordinary (= rare) அரிது. [மல்லிப்பூ என்பது பல இதழ்கள் இருப்பதால் மல்லி (மணம் மிகுந்து தருவதாலும் மல்லி). வலிமை மிகுந்து இருப்பதால் மல்லர். (விக்கிப்பீடியா பேச்சு, செல்வா)
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • மாரத வீரர் மலிந்த நன்னாடு (பாரதியார்)
  • கடும்புனல் மலிந்த காவிரி (அகநா. 62)

(இலக்கணப் பயன்பாடு)


ஆதாரங்கள் ---மலிந்த--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

 :மலிவு - நிறைந்த - குறைந்த - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=மலிந்த&oldid=1643542" இருந்து மீள்விக்கப்பட்டது