உள்ளடக்கத்துக்குச் செல்

கடை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கடை

(பெ)

 1. முடிவு. (பிங். )
 2. இடம். (திவா.)
 3. எல்லை
  • கடையழிய நீண்டகன்ற கண் ணாளை (பரிபா. 11, 46)
 4. அங்காடி. (பிங். )
 5. கீழ்மை
  • நாயிற் கடையாய்க் கிடந்த வடியேற்கு (திருவாச. 1, 60)
 6. தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்
  • கல்லாத சொல்லுங் கடையெல்லாம் (நாலடி., 255)
 7. வாயில்
 8. பூண்கடைப் புணர்வு. (திவா.)
 9. காம்பு
 10. சோர்வு. (அக. நி.)
 11. வழி. (யாழ். அக. )
 12. பெண்குறி. (யாழ். அக. )

(இலக்கணம்: பகுதி)

 1. ஏழனுருபு. (நன். 302.)
 2. ஓர் உபசருக்கம்
 3. ஒரு வினையெச்ச விகுதி

(உரிச்சொல்)

 1. பின்
  • கடைக்கால் (பழ. 239)

(வி)

 1. மத்தால் கடைதல்
  • பாம்பு கயிறாக் கடல் கடைந்த மாயவன் (சிலப். 17, 2)
 2. மரம் முதலியனவற்றை இழைத்தல்
  • கடைந்த மணிச்செப் பென வீங்கு (கூர்மபு. தக்கன்வே. 52)
 3. மசித்தல்
 4. மிகப்பண்ணுதல்
  • காதலாற் கடைகின்றது காமமே (சீவக. 1308)
 5. அரித்தல்
  • கடையுங் கட்குரல் (சீவக. 1202)
 6. கடைவதுபோன்ற ஒலியுண்டாதல்.
  • தொண்டையிற் கபங் கடைகிறது.
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

n.

 1. end, termination, conclusion
 2. place
 3. limit, boundary
 4. shop, bazaar, market
 5. inferiority, baseness, meanness, lowness, least, lowest, worst
 6. degraded person, man of low caste
 7. entrance, gate, outer gateway
 8. clasp, fastening of a neck ornament
 9. handle, hilt
 10. fatigue
 11. way
 12. Pudendum muliebre

(இலக்கணம்: பகுதி)

 1. Sign of the locative
 2. Verbal prefix
 3. Termination of a verbal participle

(உரிச்சொல்)

 1. succeeding, following

verb

 1. To churn with a churning ro
 2. To turn in a lathe; to form, as moulds on a wheel
 3. To mash to a pulp, as vegetables, with the bowl of a ladle
 4. To increase, as the passion of love
 5. To trickle, drip, as honey
 6. To rattle and wheeze, as the throat from accumulation of phlegm

இந்தி - नाप, दुकान

துணிக்கடை, இந்தியா

சொல்வளம்[தொகு]

கடை - கடைதல் - கடைசல்
கடைசி, கடைக்கண், கடைவீதி, கடைத்தெரு
கடைக்கோடி
அந்திக்கடை, அலங்கடை, அறங்கடை, எதிர்க்கடை, கள்ளக்கடை, காசுக்கடை, குஜிலிக் கடை, சாப்பாட்டுக்கடை, சில்லறைக்கடை, தயிர்கடை, தவணைக்கடை
பிறங்கடை, புழைக்கடை, புறங்கடை, மலர்க்கடை, வயற்கடைதூரம்


( மொழிகள் )

சான்றுகள் ---கடை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கடை&oldid=1971217" இலிருந்து மீள்விக்கப்பட்டது