மாற்றுத் திறனாளி
Appearance
மாற்றுத் திறனாளி (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- ஊனமுற்றோர்; மாற்றுத் திறன் உடையவர்
ஆங்கிலம்
- handicapped; people with disabilities; a person with alternate ability; differently abled
விளக்கம்
பயன்பாடு
- ஐக்கிய நாடுகள் சபை மேற்கொண்ட முடிவின்படி, "ஊனமுற்றோர்' என்ற சொல்லால் அழைக்கப்படுபவர்கள் இனி "மாற்றுத் திறனாளிகள்' என அழைக்கப்படுவார்கள் (தினமணி, 28 மார்ச்சு 2010)
- உடற்குறையால், பார்வையிழப்பால், செவித்திறன் குறைவால் 40 சதவீதம் பாதிக்கப்பட்டோர், மூளைவளர்ச்சி குன்றியோர் ஆகியோரை மாற்றுத் திறனாளிகள் என்று வகைப்படுத்துகிறார்கள் (தினமணி, 28 மார்ச்சு 2010)
- பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு என்று ஒதுக்கப்பட்ட இடத்தை மற்றவர்கள் ஆக்கிரமிப்பது, அருவருப்பூட்டும் கழிவறைகளில் கைகளை ஊன்றியபடியே தவழ்ந்து செல்லும் மாற்றுத் திறனாளியின் அவலம், விடுதிகளில் இடம் மறுக்கப்படும் அவலம் என பல நுட்பமான பிரச்னைகளை பேசுகிறது 'மா' திரைப்படம் (ஆனந்த விகடன், 26 மே 2010])