வரன்முறை
Appearance
ஒலிப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
வரன்முறை(பெ)
- அடிப்படவந்த முறை, மரபு
- பாடினை யருமறைவரன்முறையால் (தேவா. 80, 3)
- வரலாறு
- அதன் வரன்முறை சொன்னான் (பிரமோத்.18, 1)
- ஊழ்
- பெரியோர்க்குச் செய்யும் உபசாரம்
- வரன்முறை செய்திட (கம்பரா. திருவவ. 64)
- முறைப்படி நிரந்தரமாக்குதல், முறைகளின்படி அங்கீகரித்தல்
- கட்டிடங்களை வரன்முறைப்படுத்த நகராட்சி புதிய திட்டம் வகுத்துள்ளது (க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி Third Edition, October 2020. பக்கம் 1155.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- தூது விடுக்கத் தகுதிவாய்ந்த பொருள்கள் "பத்து" என்று "இரத்தினச் சுருக்கச் செய்யுள்" மற்றும் "பன்னிரு பாட்டியல்" ஆகிய நூல்கள் கூறுகின்றன. ஆனால், நமது புலவர்கள் அந்த வரன்முறையைக் கடந்து புகையிலை, வெற்றிலை, மூக்குப்பொடி, சுருட்டு முதலிய அஃறிணைப் பொருள்களையும் தூதாக வைத்துப் பாடியுள்ளனர். (புகையிலைவிடு தூது, தமிழ்மணி, 17 Jun 2012)
- தமிழகத்தில் கடந்த பிப்ரவரி 28-ம்தேதிக்குள் வரன்முறைக்கு விண்ணப்பித்த தனியார் மனைகளுக்கும் வரன்முறை திட்டம் பொருந்தும் என்று வீட்டுவசதி துறை தெரிவித்துள்ளது. (செய்திபிரிவு, தி இந்து தமிழ்திசை, 09 Mar 2021)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
சொல்வளம்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +