வல்வினை
Appearance
பொருள்
வல்வினை(பெ)
- வலியதாகிய ஊழ்
- தீவினை
- கொடுஞ்செயல்
- வலிதாகிய தொழில்
- வலிய வினைச்சொல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- the law of karma, as irresistible
- bad karma
- wicked deed
- mighty act or deed
- strong verb
விளக்கம்
- வல்வினை = வல் + வினை
பயன்பாடு
- வல்வினைபோல் வந்து வாய்த்தது அல்கா பாயிக்கு பார்க்கின்சன் நோய். கை கால் நடுக்கம், நினைவு அடுக்குகளில் சரிவு, நினைவு பிறழ்தல்... கிடந்தகிடையாக ஆயிற்று (ஆத்மா, நாஞ்சில் நாடன் )
(இலக்கியப் பயன்பாடு)
- தொல்லை வல்வினைத் தொந்தந்தா னென்செயும்(தேவா. 4, 4).
- ஒழிகெனவொழியா தூட்டும் வல்வினை (சிலப். 10, 171).
- வாளிற் றப்பியவல்வினை யன்றே (மணி. 21, 60).
- நீ வல்வினைவயக்குதல் வலித்திமன் (கலித். 17).
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---வல்வினை--- DDSA பதிப்பு + வின்சுலோ +