வழித்தோன்றல்
Appearance
வழித்தோன்றல் (பெ)
பொருள்
- ஒரு குலத்தில் அல்லது மரபில் தோன்றியவன்; சந்ததி, உம்பல், வாரிசு
- ஒருவரின் வழியைப் பின்பற்றி நடப்பவர்கள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- பாண்டிய மன்னனின் வழித்தோன்றல்
- திருபாம்பரம் ஸ்வரூபம் பின்னர் திருவிதாங்கூர் ராஜ வம்சமாக ஆகியது. அவர்கள் தங்களை சேரர் வழித்தோன்றல் என்று சொல்லிக் கொன்டார்கள். அதற்கு ஐதீக பின்புலம் இருந்தது (கடிதங்கள், ஜெயமோகன்)
- போத் கயாவில் மகாபோதி மரத்தின் வழித்தோன்றல் என்று சொல்லப்படும் அரசமரம் உள்ளது (இந்தியப் பயணம் 19 ,போத் கயா, ஜெயமோகன்)
- காந்தியின் வழித்தோன்றல்கள் போல் காந்தி என்று எழுதி இந்திராவின் வாரிசுகள் காந்தி ஆகிவிட்டனர் (தமிழ்மணம்)
(இலக்கியப் பயன்பாடு)
- வடிம்பலம்ப நின்ற பாண்டியனின் வழித்தோன்றல் (மதுரைக் காஞ்சி)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---வழித்தோன்றல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +