வாழ்வாதாரம்
Appearance
வாழ்வாதாரம் (பெ)
பொருள்
- உயிர்/வாழ்வு வாழ ஆதாரமாக இருப்பவை; வாழ்கைத் தொழில்; பிழைப்பு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- basic means of sustenance
விளக்கம்
பயன்பாடு
- இப்போதைக்கு வட இலங்கையில் வசிக்கும் பெருவாரியான தமிழர்களின் ஒரே வாழ்வாதாரம் கடலில் மீன்பிடிப்பது மட்டுமே. விவசாயம் முழுமையாக அழிந்துவிட்ட நிலைமை. தொழில்வளம் என்பது பெயருக்குக்கூடக் கிடையாது (தினமணி, 17 ஜூலை 2010)
- சுனாமியின்போது ஓரிரு வாரங்களில் மக்களின் வாழ்வாதாரம் சரி செய்யப்பட்டது. ஆனால், 'தானே’ புயலால் பாதிக்கப்பட்ட 30 லட்சம் மக்களின் வாழ்வாதாரம் இன்னமும் சரிசெய்யப்படவில்லை. ஈழத் தமிழனுக்காகப் போராடிய நம் சகோதரர்கள், கடலூர் தமிழனுக்குக் குரல் கொடுக்கவில்லை. (தங்கர்பச்சானின் தமிழ்க் கூடு!, ஜூனியர் விகடன் 01 ஏப்ரல் 2012 )
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---வாழ்வாதாரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +