விக்சனரி பின்னிணைப்பு:புவியியல் கலைச் சொற்கள் (தமிழ் - ஆங்கிலம்)
Jump to navigation
Jump to search
தமிழில் கல்வி ஓரளவுக்காவது பயிலப்பட்டுவரும் இடங்களில் தமிழ்நாடும், இலங்கையும் முக்கியமானவை. எனினும் பல்வேறு பாடங்கள் சம்பந்தமான கலைச் சொற்கள் வெவ்வேறாக இவ்விரு இடங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் இவ்விரு நாடுகளிலும் பயன்பாட்டிலுள்ள சொற்களும் தனித்தனியாகக் கீழே சேர்க்கப்பட்டுள்ளன. "பயன்படும் இடங்கள்" என்பதன் கீழ்த் தரப்பட்டுள்ள இல என்பது இலங்கையில் பயன்படுத்தப்படும் சொல் என்பதையும், தநா என்பது தமிழ்நாட்டில் பயன்படுத்தப்படுவது என்பதையும் குறிக்கும்.
அமைப்புக்கள்
தமிழ் | ஆங்கிலம் | பயன்படும் இடம் |
---|---|---|
விரி குடா | Bay | தநா |
பெருங்கடல் | Ocean | தநா |
காலநிலை | Climate | இல |
பூமத்திய ரேகை | Equator | தநா |
சுற்றுச் சூழல் | Environment | தநா |
மலை | Mountain | தநா |
பீட பூமி | plateau | தநா |
ஆறு , நதி | River | தநா |
கிளைஆறு | Tributary | தநா |
பருவம் | Season | தநா |
கோடை காலம் ,கோடை | Summer | தநா |
தட்பவெப்பம் | Temperature | தநா |
தீவு | Island | தநா |
ஆற்றிடை துருத்தி | Riverine island | தநா |