விக்சனரி பேச்சு:த. இ. ப. சொற்கள் பதிவேற்றத் திட்டம்/தானியங்கிச் சோதனை-1
தலைப்பைச் சேர்தானியங்கிச் சோதனைப்பதிவு-1
[தொகு] நமக்கு தமிழக அரசு தந்த கொடைச்சொற்கள் 1,32,746 ஆகும்.
அதன் முதல் 10 சொற்களும், இறுதி 10 சொற்களும் படத்தில்
கொடுக்கப்பட்டுள்ளது.
இத்தகவல்களில், C பிரிவில் வருவதைப் பகுப்பாகக் கொள்ளலாம்.
D என்பதைப் புதியத் தலைப்புச்சொல்லாகக் கொள்ளலாம்.
E என்பதனை அதற்குரிய பொருள் பகுதியாகக் கொள்ளலாம்.
இந்த வகையில் தானியங்கிச் சோதனகளை செய்யப்படுகிறது.
- ஏறத்தாழ 70%-80% ஆங்கிலக் கூட்டுச்சொற்கள்.அவைகளுக்கு ஆதாரங்களை இணைக்க இயலா நிலையுள்ளது.
- சொல்வகைகளும் இப்பொழுதே சேர்க்க இயலாது. ஏனெனில், நமக்குத் தரப்பட்ட தரவில்(காண்க:படம்)அது இல்லை.
- இந்த அடிப்படையில், (உள்ளது உள்ளபடியே) பதிவேற்றச் சோதனை1 செய்யப்பட்டது.
இதனை மேம்படுத்த உதவும் தங்களது கருத்துக்களை, இந்த உரையாடல் பக்கத்தில் குறிப்பிட வேண்டுகிறோம். உங்களது கருத்துக்கள் இப்பவோ அல்லது மறுசீரமைப்பிலோ அனுசரிக்கப்படும்.
தமிழக அரசின் கொடைச் சொற்களில், 36,595 சொற்கள் நம்மிடம் இல்லாதவை ஆகும்.
அவை விக்சனரியில் இணைந்து, அட்டவணையில் 17வது இடத்திலிருந்து, முதல் 10 இடத்திற்குள், நம் தமிழ் விக்சனரி சென்றடையும். நன்றி. வணக்கம்.--த*உழவன் 05:28, 7 அக்டோபர் 2010 (UTC)
கருத்துக்கோவை
[தொகு]{.{மேல்எண்1}}வார்ப்புரு குறித்தவை
[தொகு]நோக்கம்:{{மேல்எண்1}}பயன்பாடு பற்றி உரையாடப்படுகிறது.(எ. கா.) பீடவிடை1காண்க:(dado,dado2)
முந்தைய கலந்துரையாடல்கள்::..
தற்போது கலந்துரையாடுபவர்:1.பழ.கந்தசாமி, 2.த*உழவன்,3.செல்வா,4.பவுல்.
தற்போதைய முடிவு:
தீர்வு அப்பயன்பாடு, இனிவரவிருக்கும் த.இ.க.க. சொற்பதிவுகளில் நீக்கம்.
- த*உழவனே! நன்றாக உள்ளது. ஆனால், பொருள் பகுதியில் மேற்குறீயீடாக வரும் 1 என்பது தேவையில்லை. கீழே தனிப்பகுப்பும் உள்ளதால், அது தேவையற்றது. நன்றி. பழ.கந்தசாமி 04:11, 7 அக்டோபர் 2010 (UTC)
- உங்களைப் போலவே நானும் நினைத்தேன். ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்கள் பிறரால் சேர்க்கப்படும் போது, எது எது யாரால் என்பதனை அறிய தேவையென எண்ணுகிறேன்.(எ. கா.) abacus--த*உழவன் 05:22, 7 அக்டோபர் 2010 (UTC)
- த.இ.க. வை ஆதாரப் பகுதியில் கொடுத்தால், குறிப்பிட்ட பொருள் அவர்களிடமிருந்து வந்தது என மேற்குறியீடு தனியாக இடவேண்டியதில்லை என எண்ணுகிறேன். மேற்குறியீடு கவனத்தைச் சற்றுக் சிதறடிக்கிறது. பழ.கந்தசாமி 05:39, 7 அக்டோபர் 2010 (UTC)
- இது போன்ற ஆங்கிலக் கூட்டுச்சொற்கள் பிற விக்சனரிகளிலோ அல்லது பிற இணைய ஆங்கில அகரமுதலிகளிலோ இல்லையென்பதால் சுருக்கமாக குறிப்பிட வேறுவழியின்றி, இப்படி குறிப்பிட வேண்டியாதாக உள்ளது.தற்பொழுது நாம் பயன்படுத்தும் {.{ஆங்கில ஆதாரங்கள்}} ஆங்கலக் கூட்டுச்சொற்களுக்குப் பிழையினைத் தருகிறது.--த*உழவன் 05:50, 7 அக்டோபர் 2010 (UTC)
- lower case பக்கத்தில் கூட்டுச்சொல்லுக்கான ஆதாரம் பார்க்கவும். சரியாக ஆங்கில விக்சனரிக்கு இட்டுச்செல்கிறது. பழ.கந்தசாமி 06:35, 7 அக்டோபர் 2010 (UTC)
- கண்டேன். பொங்கலன்று எண்ணிக்கையைக் கூட்டினோம் அல்லவா? அதன்படி த.இ.ப.வின் ஆங்கிலக்கூட்டுச்சொற்கள் பெரும்பாலும் (90%)மேற்கூறிய ஆங்கில இணைய அகரமுதலிகளில் இல்லையென்பதால் தவிர்த்தேன்.செல்வாமுன்பு உரையாடும் போது, இது {.{மேல்எண்1}} போல இடுதல் நன்றியுரையாக இருக்குமென்று கூறினார்.அவருடன் உரையாடிய பிறகே இதனை அமைத்தேன்.(எ. கா.) dado2.உங்களின் வாக்கை இத்திட்டபக்கத்தில் இடவும். --த*உழவன் 06:51, 7 அக்டோபர் 2010 (UTC)
- பழ.கந்தசாமி கூறிய கருத்துடன் ஒப்புகிறேன். மேலும் உள்ளிணைப்பு ஒரு பேச்சுப் பக்கத்துக்குச் செல்லாமல் த.இ.ப தந்த சொற்தொகுதியில் இருந்து பெற்ற பொருள்கள் என்று தெளிவாக இருத்தல் நல்லது. நன்றியுடன் நாம் இதனைத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.--செல்வா 17:03, 8 அக்டோபர் 2010 (UTC)
- {.{மேல்எண்1}} நீக்கிவிட்டேன்.பவுல் கூறியது போல(ஓரிடத்தில் விரிவான முறையில் த.இ.ப.-க்கு விக்சனரி பெயரால் நன்றி தெரிவிக்கலாம்), ஒரேபக்கத்தில் ஒருங்கிணைக்க மாதிரிகளைத் தாருங்கள்--த*உழவன் 00:36, 9 அக்டோபர் 2010 (UTC)
எண்ணிக்கை
[தொகு]ஆம். தகவல் உழவனின் முயற்சியால் தமிழ் 10வது இடத்திற்கு வரும் என்றால் உடன் விரைந்து செயல்படுத்தலாம். எந்த வடிவத்தில் பக்கம் இருக்க வேண்டும் என்பதை பின்னர் வருபவர்கள் முறைப்படி தொகுக்கலாம். தற்போதய தேவை மென்மேலும் சொற்கள் சேர்க்க வேண்டுமேயன்றி அது இந்த வடிவத்தில் தான் இருக்க வேண்டும் என்று கூறிக்கொண்டு காலவிரயம் செய்ய இயலாது. -அருநாடன்2 13:01, 7 அக்டோபர் 2010 (UTC)
- அருநாடன், ஒரு இலட்சத்துக்கும் மேலான சொற்கள் பதிவேற்றும் பொழுது சீரொழுக்கத்துடன் செய்ய வேண்டுவது முக்கியம். இச்சொற்களைத் தந்த தமிழிணையக் கல்விக் கழகமும்(தமிழ் இணைய பல்கலைக்கழக்கமாக இருந்த நிறுவனம்), அரசும் நாம் செப்பமுறச் செய்தோம் என்று றிந்து மகிழ்வர். ஆயிரம் சொற்கள் தாறுமாறாக இருப்பதினும் 100 சொற்கள் சீரொழுக்கத்துடன் பயனுடைய வகையில் இருப்பது நல்லது. அகரமுதலி போன்ற உசாத்துணை நூல்கள் சீரொழுக்கத்துடன் இருப்பது மிகவும் தேவையான ஒன்று. நாம் 10 ஆவது இடத்துக்கு நகர்ந்தால் அதற்கு முதற்கண் நன்றி தெரிவிக்க வேண்டியது, சொற்கள் வழங்கிய த.இ.க.க மற்றும் அரசு. தானியங்கி முறையில் பதிவேற்றம் செய்ய உதவுவதில் தகவல் உழவனும், சுந்தர், மாகிர் முதலானோரின் உழைப்பையும், உடன் உதவும் திருச்சி பெரியண்ணனையும், பழ,கந்தசாமியையும் நாம் யாவரும் பாராட்டுவோம், ஆனால் தகவல் உழவனின் முயற்சியால் 10வது இடத்துக்கு வருகிறோம் என்னும் கூற்று இதனைப் பற்றி அறியாதோர் பிழைபட எண்ணக்கூடும். மே-சூன் மாதம் முதல் பக்க வடிவமைப்பைப் பற்றி உரையாடி வருகிறோம், இதனை 10 நாட்களுக்குள் முடிவு செய்திருக்கலாம், அல்லது 15 நாட்களுக்குள் முடிவு செய்திருக்கலாம், அல்லது மிஞ்சிப் போனால் ஒரு மாதத்துக்குள் முடிவு செய்திருகக்லாம் என்பது என் தனிக்கருத்து. பவுலும் நானும் எவ்வளவோ முயன்று பார்த்தோம்! எனினும், இந்தச் சிலமாத காலத்தில் உரையாடல்கள்வழி அறிந்துகொண்டதும், கற்றுக்கொண்டதும் பயனுடையதே. செய்வனத் திருந்தச் செய் என்பார்கள் அதுபோல், சிறிது காலம் சென்றுவிட்டாலும் நன்றாக அமைந்தால் அது நம் யாவருக்கும் பெருமையும் மகிழ்ச்சியும் தரும் ஒன்று. ஆகவே சிறப்பாகச் செய்ய முனைவோம் (ஏராளமான சொற்கள் உள்ளன, அவை தானியங்கிவழியாய்த்தான் பதிவேறவும் போகின்றன ஆகவே, சரியான வடிவில் பலரும் போற்றும்படியாக அமைவது நல்லது.). எனவே அருநாடன், காலவிரயம் எனக் கவலைப்பட வேண்டியதில்லை. --செல்வா 17:26, 8 அக்டோபர் 2010 (UTC)
- செல்வா அவர்களின் கருத்துக்கள் சரியானவையே. அவரது கருத்துபடியே --- செயவனவற்றை செவ்வனே செய்வோம். இந்த ஒரு இலட்சம் சொற்களை பதிவேற்றிய பின் நமது தமிழ் விக்சனரி 17-வது இடத்திலிருந்து 7-வது இடத்திற்கு சென்றுவிடும் என்பது எனது நம்பிக்கை. அதற்கான எல்லா முயற்சிகளையும் செய்வோம்.
- சோதனைப் பயிற்சியாக, த.உழவன் உருவாக்கிய ஆங்கில கூட்டுச் சொற்களைக் கண்டேன்.நன்றாகவும் எளிமையாகவும், தேவையான பகுப்புப்பளையும் உள்ளடக்கி உள்ளது. எனது வாழ்த்துக்களுடன் இற்கான ஆதரவையும் தெரியப்படுத்திக்கொள்கிறேன்.
- மேலும், இப்பதிவேற்றத்திற்கான, என்னால் முடிந்த அளவு உதவிசெய்வேன் என்பதனைத் தெரியப்படுத்திக்கொள்கிறேன். நன்றி. வணக்கம்.--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 04:20, 11 அக்டோபர் 2010 (UTC)
புள்ளி மட்டும் உடைய வரிகள்
[தொகு]ஒருவேளை இதைப் பற்றி ஏற்கனவே உரையாடியிருந்து நான் கவனிக்கத் தவறியிருக்கலாம். புள்ளி மட்டும் உடைய வரிகள் எதற்காகச் சேர்க்கப்பட்டுள்ளன? இன்னும் பிறவற்றைச் சேர்க்கலாம் எனக் காட்டவா? அதற்கெனில் மூன்று புள்ளிகளை இடுவது மரபு. -- Sundar 07:13, 11 அக்டோபர் 2010 (UTC)
- சோதனைச் சொற்களில் வரும், வெற்று நிறப்பட்டைகளுக்கு இடையில் வரும் புள்ளியைச்(:*.) சொல்லுகிறீர்கள் என எண்ணுகிறேன். அப்படித்தானே? ஆம், எனில், இதுவரை நடந்த கலந்துரையாடல் சுருக்கத்தினைத் தருகிறேன்.அது யாதெனில்,
- அப்புள்ளிகள் இல்லையென்றால், நிறப்பட்டைகள் ஒன்றோடு ஒன்று இணைந்து விடும்.
- வெற்றாக இடுவதற்குக் காரணம், பங்களிப்பாளர்கள் பின்னர் அவற்றிற்கே உரிய பதிவுகளைச் செய்வர்.
- மேலும், பயன்படுத்தப்பட்டுள்ள வார்ப்புருக்களின் வரிசை மாறாமல் இருக்கும்.
- இனி பதிவேறும் சொற்களுக்கு மூன்று புள்ளிகள் வருமாறு கவனித்துக் கொள்கிறேன்.--த*உழவன் 11:23, 11 அக்டோபர் 2010 (UTC)
- நன்றி, த*உழவன். நிறப்பட்டைகள் இணையாமல் தடுக்கப் பிற வழிகள் இருக்கலாம். ஆனால் மற்ற காரணங்களை ஒத்துக் கொள்கிறேன். மூன்று புள்ளிகளை இடுவது நன்று. பொருள் இருக்கும் இடத்திலும் இவ்வாறு சேர்ப்பது தேவையா தெரியவில்லை. சீராக இருப்பதற்காக இருந்தால் பரவாயில்லை. -- Sundar 05:55, 13 அக்டோபர் 2010 (UTC)
- சரி. சுந்தர் உங்கள் வாக்கினையும் அளித்தால் மகிழ்வேன்--த*உழவன் 06:03, 13 அக்டோபர் 2010 (UTC) 05:59, 13 அக்டோபர் 2010 (UTC)
- இனி பதிவேறும் சொற்களுக்கு மூன்று புள்ளிகள் வருமாறு கவனித்துக் கொள்கிறேன்.--த*உழவன் 11:23, 11 அக்டோபர் 2010 (UTC)
தேடுபொறிகள் குறித்தவை
[தொகு](காண்க:அதில்14.4)இப்பக்கத்தில் இரவியுடன் நடந்த உரையாடல்கள்-வசதிக்காக இங்கிடப்படுகிறது.
//செல்வா, பவுல், கந்தசாமி, த. உழவன் - எனது கருத்துகளைப் படித்துப் பொறுமையாக பதில் தந்தமைக்கு நன்றி. இது தான் சரி, தவறு என்று ஏதுமில்லை. ஒரு அகரமுதலிக்கு உரிய தகவல்களை ஒழுங்குபடுத்தித் தர வேண்டும். அதே வேளை,..//
//**தேடுபொறிகளுக்கேற்ற வடிவமைப்ப்பு என்ற அடிப்படையில் கருத்திட, நீங்கள் 2006இல் உருவாக்கிய பார் சொல்லை எடுத்துக்கொண்டேன். கூகுளில் பார் என்று மட்டும் தேடினால், அது த.விக்கிப்பீடியா கட்டுரையின் முதல்வரிகளைக் காட்டுகிறது. அத்தேடுபொறி சாளரத்தில் முன்னொட்டாக அகரமுதலி அல்லது அகராதி என்று எழுதி பார் என்ற சொல்லினை இட்டால், கூகுள் நமது விக்சனரியின் பார் சொல்லைத் தேடித்தருகிறது. மற்ற இணைய அகரமுதலிகளை காட்டுவதில்லை என்பது மகிழ்வாக இருக்கிறது. யாகூவில் சிறுவேறுபாட்டுடன் தமிழ்விக்சனரித் தெரிகிறது. இதில் கவனிக்கப்பட வேண்டிய மற்றொன்று யாதெனில், தமிழ்விக்சனரியின் பார் சொல்லின் முதல்வரிகளைக் காட்டுவதில்லை என்பதே. சுந்தர், கணேசு, மாகிர் போன்ற நுட்பவியலாளரே வடிவமைப்பில் இறுதி முடிவு செய்தால் நன்றாக இருக்கும். விக்சனரிதிட்டத்தின் இந்திய மொழிகளில், தமிழ் முதலாவதாக இருக்கிறது. வடிவமைப்பிலும் பிற இந்திய மொழிகளுக்கு முன்னோடியாகவும், வழிகாட்டியாகவும் இருப்பின், அது நம் அனைவருக்கும் பேரானந்தம் அல்லவா? இப்போதைய தேவையை, முன்பு விட மேம்படுத்துவோம். பின்னர், அதனை இன்னும் மேம்படுத்துவோம். நம்விக்சனரியின் எதிர்காலம் அதன் வடிவமைப்பில் இருக்கிறது என்பதனை விட, அதன் உள்ளீடுகளைப் பொறுத்தே இருக்கிறது. ஒலிக்கோப்புகள் ஏறத்தாழ இன்னும் ஒரு இலட்சம் இருக்கிறது. படங்கள் இருக்கிறது. தொடர்புடைய சொற்களை உருவாக்க வேண்டும். எல்லாவற்றினையும் விட கைவசம் இருக்கும், ஒரு இலட்சம் சொற்களை இனியும் பதிவேற்ற காலதாமதம் செய்வது நமக்கு சிறப்பா? நம் ஒவ்வோர் மனதிலும் கருத்துக்களும், எண்ணங்களும் காலத்திற்கு ஏற்ப பல்வேறு காரணங்களால் மாறுபட்டுக்கொண்டே இருக்கும். எனவே, அருள்கூர்ந்து முடிவு எடுப்பீர். நன்றி. வணக்கம்--த*உழவன் 07:14, 18 செப்டெம்பர் 2010 (UTC)//--மறுபதிவு--த*உழவன் 00:27, 14 அக்டோபர் 2010 (UTC)
1. ஆயிரக்கணக்கான பக்கங்களில் விளக்கம், பயன்பாடு போன்ற வெற்றுத் தலைப்புகள், புள்ளிகளை இடுவது நல்லது அல்ல. 10 பேர் அளவே முனைப்பாக உள்ள தமிழ் விக்சனரியில் உடனடியாக இவற்றை நிரப்புவது சாத்தியம் அல்ல. பக்க அளவு, எண்ணிக்கைகாக வெற்றுப் பக்கங்களை இட்டது போல் தோற்றம் வரக்கூடாது.
2. தலைப்பைத் தவிர பக்கத்தின் எந்தப் பகுதியிலும் தலைப்புச் சொல் இடம் பெறவில்லை. தேடு பொறிகளில் சிக்க / முந்த இது உதவாது.
3. தேடு பொறிப் பக்கத்தில் இருந்தே பொருளை அறியுமாறு வடிவமைப்பது நல்லது. பொருள் பகுதியை பக்கத்தின் முதலில் வருமாறு செய்வது நல்லது. உச்சரிப்பு விவரத்தை அதற்கு அடுத்து தரலாம். கொடி போன்றவற்றை வலப்புறம் நகர்த்தலாம். தற்போது இருக்கிற பக்கங்கள், தேடு சொல்லைப் பொருத்து, தேடு பொறியில் பல்வேறு வகைகளில் இனங்காணப்படுகின்றன. இவற்றை ஆய்ந்து சரியான வரிசை, வடிவமைப்பு முறையை முன்வைக்க நேரம் தேவை. இதன் மேல் கூடுதல் கட்டுப்பாடு பெற மீடியாவிக்கியிலேயே meta description போன்ற புலங்களைச் சேர்ப்பது உதவும்.
கருத்து 1 ஐ விரும்பினால் செயற்படுத்தலாம்.
பொருள் என்ற பகுதியில் தலைப்பையும் இட்டால் கருத்து 2னைச் செயற்படுத்தலாம்.
தேடு பொறி காட்சிப்படுத்தலுக்கு ஏற்ற வடிவமைப்பு வரிசையை ஆய 2 வார கால அவகாசம் தந்தால் உதவ முடியும்.
நன்றி--ரவி 09:36, 13 அக்டோபர் 2010 (UTC)
- இரவி, என் கருத்து நீங்கள் மேலே கூறியவற்றில் இருந்து மாறுபடுகின்றது. நீங்கள் வெற்றுப்பக்கம் என்பதை நான் சீர்-தரமான படிவம் என்று நினைக்கின்றேன். நிரப்பத்தூண்டும் வடிவம் என்கிறேன். 10 பேரெ எனினும் ஆளுக்கு நாளொன்றுக்குக் பத்து சொற்கள் சேர்த்தாலும் ஆண்டுக்கு தலா 3300 சொற்கள் சேர்க்கலாம் (நிரப்பலாம்). சரி 3,000 என்று கொள்ளுங்கள் 10 பேர் ஓராண்டில் 30,000 சொற்கள் நிரப்பலாம். எத்தனை பேர் இன்னும் வருவார்கள் என்று கூறுவது கடினம். இனி வரும் நாட்களில் கூடுதலானோர் வரக்கூடும். எல்லாவற்றுக்கும் மேலாக சீரான வடிவு என்பது முக்கியம். இப்பொழுது இருக்கும் வடிவதத்தை மே-சூன் (2010) மாதம் முதல் தீர அலசியுள்ளோம். இன்னமும் 2 கிழமைகள் கூட்டலாம், ஆனால் பிறகு அது தொடர்பாக பெரும் கருத்து வேறுபாடுகள் தோன்றி, அலசல்கள் என்று நீண்டுகொண்டே போகும். இப்பொழுதுள்ள வடிவு நேர்த்தியாக இருப்பதாகவே எனக்கும் பிறருக்கும் படுகின்றது. கீழே பழ.கந்தசாமி, சுந்தர் கூறியவாறு உடனே தொடங்கி செயற்படுத்துவதே நல்லது. இப்பொழுதுள்ள வடிவம் மற்ற விக்சனரிகளைக் கருத்தில் கொண்டால் முதல் 2-3 என்பதாக நிற்கும் என்பது என் கணிப்பு. --செல்வா 13:49, 13 அக்டோபர் 2010 (UTC)
செல்வா, தாமதப்படுத்துவது எனது நோக்கம் இல்லை. பெருவாரியான ஆதரவு வாக்குகள் இருப்பதால், இப்போது கூட உள்ளது உள்ளபடியே பதிவேற்றலாம். ஆனால், இலகுவாக சரி பண்ணக்கூடிய, எனக்கு முழு ஒப்புதல் இல்லாத வடிவத்துக்கு ஆதரவு வாக்கு இட விரும்பவில்லை. விக்கி கட்டுரைகளில் நாம் முதலில் இருந்தே வார்ப்புருக்கூடுகள் இடுவதில்லை. இருந்தாலும் சீரொழுக்கம் பின்பற்றுகிறோமே? மிகச் சிலரே இருக்கும் தமிழ் விக்சனரியில், புதிதாக வருவோரையும் எளிதாக ஒருங்கிணைக்க இயலும் நிலையில், சீரொழுக்கத்துக்காக வெற்று வார்ப்புருக்களை இடுவதில் எனக்குத் துளியும் உடன்பாடில்லை. ஒரு ஆண்டுக்கு 30,000 என்பது போல் நம்பிக்கை தரும் இலக்குகள் வைக்கலாம். நம்பிக்கை வேறு, நடைமுறைச் சாத்தியம் வேறு.--ரவி 05:26, 14 அக்டோபர் 2010 (UTC)
- தாமதப்படுத்துவது உங்கள் நோக்கம் இல்லை என்பது சொல்லாமலே தெரியும் இரவி. நான் சீர்-தரமான படிவம் என்றது எல்லோரும் உள்ளிட பொதுவான படிவம் என்பதைக் குறிக்கப் பயன்படுத்தினேன். அவை வெற்று வார்ப்புருக்கள் இல்லை என்பதை நீங்கள் உணரவேண்டும். வருவோர் உள்ளீடு மட்டும் இட்டால் போதும், அந்த வார்ப்புருக்களை புதிதாக வருவோர் இட வேண்டியதில்லை என்பதை நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டுகிறேன். எவ்வளவு விரைவாய் அவை நிரப்பப்படும் என்று முன்கூட்டியே கூறுவது கடினம். ஆனால் தொடர்ந்து இயங்கிவந்தால் "விரைவில்" மிகப்பெரும்பாலானவை நிரம்பும் என்பது என் நம்பிக்கை. நாம் அனைவரும் விக்கிப்பீடியாவிலும் இங்கும் தொடர்ந்து இயங்கி வந்ததாலேயே இன்று தமிழக அரசின் ஒப்புதலோடு இந்த சொற்களின் கொடையும் கிடைத்துள்ளது. வேறுவழிகளிலும் தன்னார்வலர்களை ஈடுபடுத்த முடியும். உங்களுக்கு உடன்பாடு இல்லை என்பதால் வாக்களிக்காமல் இருப்பது புரிந்துகொள்ளக்கூடியதே. நடைமுறை சாத்தியம் பற்றி எனக்குத் தெரியாது இரவி. ஆனால் இவை பயனுடையவை என்று கருதுகிறேன், சீரான முறையில் உள்ளீடு செய்ய உதவுவன என்று எண்ணுகிறேன்.--செல்வா 17:20, 14 அக்டோபர் 2010 (UTC)
- "விளக்கம்", "பயன்பாடு", "சான்றுகள்" ("ஆதாரங்கள்") என்னும் வார்ப்புருக்கள் வெற்றுருக்களா?
இல்லை என்பதே என் கருத்து. அடிப்படை அமைப்பை உருவாக்குவோம்; விக்கியின் வளர்ச்சி பங்களிப்போரின் முனைவைப் பொறுத்து முன்னேறும். வெற்றிடமாகக் கிடந்துவிடுமே என்னும் அச்சம் வேண்டாம். வெற்றிடம் நிரப்பப்படும் (மெதுவாக!) என்னும் நம்பிக்கையை இழக்காமல் அடிப்படைகளை இடுவோம்!--பவுல்-Paul 17:38, 14 அக்டோபர் 2010 (UTC)
செல்வா,பவுல் - உங்கள் நம்பிக்கையை வரவேற்கிறேன். இது பற்றிய உரையாடலை முடித்துக் கொள்வோம் :) --ரவி 05:34, 15 அக்டோபர் 2010 (UTC)
- தேடுபொறியில் உதவும் என்றால், பொருள் என்ற பகுதியில் பக்கப்பெயரை இடுவதில் எனக்கு மறுப்பு இல்லை. (ஆனால், அதைவிடத் தேடுபொறிகளில் பயன்பாடு பகுதியில் உள்ள வாக்கியங்களும் உதவும்) பழ.கந்தசாமி 15:02, 13 அக்டோபர் 2010 (UTC)
- தேடு பொறிகள் பற்றி ஏற்கனவே உரையாடி உள்ளோம். அவ்விணைப்பை இப்பொழுது தர இயலவில்லை. அதன் சாரம்சம் வருமாறு;-
- தேடு பொறிகளின் முடிவுகள் வேறுபடுகின்றன.
- தேடு பொறிகள் முதல்வரிகளையே எடுத்துக்காட்டுவதில்லை.
- பயன்பாட்டு வரிகளையே கூட முதலில் காட்டுகிறது.
- எனினும், அறிவியல் பூர்வமான வடிவத்தை, நீங்கள் முன்மொழியின் அதனை வளர்த்தெடுக்க இன்னும் காலம் தேவைப்படலாம். உங்கள் கருத்துக்களை எடுத்துரைப்பின் அதனை மறுசீரமைப்பில் கலந்துரையாடி நடைமுறைப்படுத்தலாம்.பலரும் இவ்வடிவத்தில் பதிவேற்றத்தை விரும்புவதால் இதனைக் கூறுகிறேன்.--த*உழவன் 17:32, 13 அக்டோபர் 2010 (UTC)
- +இப்பக்கத்தின் உரையாடல் பக்கத்தில் உள்ள தேடுபொறிகள் குறித்தவை என்பதனையும் காணவும்.--த*உழவன் 00:30, 14 அக்டோபர் 2010 (UTC)
- பொருள் பக்கத்தில் பக்கப்பெயர் வந்தால், தேடுபொறி அந்தவரியைக் காட்ட வாய்ப்புள்ளது. தேடுபொறி குறித்து மேலும் விவாதங்கள் புரிந்து இன்னும் பதிவேற்றத்தைத் தள்ளிப்போட வேண்டுமா? அப்படியே செய்தாலும், தேடுபொறி நமக்கேற்பக் காட்டும் என்று எப்படித் தெரியும்? எப்படி உறுதி செய்வது? பழ.கந்தசாமி 01:35, 14 அக்டோபர் 2010 (UTC)
த. உழவன், பழ. கந்தசாமி - தேடுபொறி முடிவுகள் பக்க உள்ளடக்கத்தைப் பொருத்தும், தேடல் சொல்லைப் பொருத்தும் மாறுவது வழமையே. திட்டமிட்டு சீரொழுக்கமாக உள்ளடக்கம், மேல் தரவுகள் ( meta data ) இடுவதன் மூலம் இதனை ஓரளவு கட்டுப்படுத்த முடியும்.
பொருள் என்ற தலைப்பின் கீழ் முதலில் தலைப்புச் சொல்லை இட்டுவிட்டு, அதன் பிறகு bullet குறிகள் இட்டுப் பொருளைத் தரலாம். பயன்பாட்டுப் பகுதியில் உள்ள சொற்றொடர்களை தேடு பொறி முன்னிறுத்துவது எதிர்பார்க்கக்கூடிய விளைவே. உடனடியாக, இலட்சக்கணக்கான பக்கங்களில் பயன்பாட்டுச் சொற்றொடர்கள் ஏற்றப்பட வாய்ப்பில்லா நிலையில், தற்போது, பொருளை முன்னிறுத்தவே வாய்ப்பு அதிகம். தொழில்முறையாகவே தேடுபொறி உகப்பாக்கத் துறையில் (search engine optimization) ஈடுபட்டுள்ளவன் என்ற முறையில் சற்று உறுதியாகவே இது குறித்து என்னால் கூற முடியும். எனவே, தயவு செய்து, பொருள் என்ற தலைப்பின் கீழ் முதலில் தலைப்புச் சொல்லை இட்டுவிட்டு, அதன் பிறகு bullet குறிகள் இட்டுப் பொருளைத் தரலாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
பக்கத்தின் தொடக்கத்தில் உள்ள சொற்களுக்கு தேடுபொறிகள் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கும். எனவே, பொருள் பகுதியை மேல் வரிசைக்கு நகர்த்துவது நல்லது. பயனெளிமை ( usability )அடிப்படையிலும், ஒலிப்புக்கான தகவலே இல்லாத வெற்றுச் சிகப்பு இணைப்பை முதலில் தருவதைக் காட்டிலும் தகவல் உள்ள பொருள் பகுதியை முதலில் தரலாமே? பொருள் தேடியே பலரும் விக்சனரிக்கு வருவர் அல்லவா? எனவே, அவர்கள் தேடுவதை முதலில் காட்டலாமே? தகவலே இல்லாத விளக்கம், பயன்பாட்டுப் பகுதிகளுக்கும் சிகப்பு இணைப்பு மட்டுமே உள்ள ஒலிப்புப் பகுதிக்கும் பெரிய வேறுபாடில்லை. ஒலிப்பு என்று இன்னொரு நிறப்பட்டைப் பகுதியின் கீழ் ஒலிப்புக்கான கோப்பைத் தருவதன் மூலம் இந்த வடிவமைப்பை இன்னும் தனிசையாக்கவும், உள்ள தகவலை முன்னிறுத்தவும் உதவும்.
ஏற்கனவே, தனிசை முறை வடிவமைப்புக்குச் செல்வா ஒப்புக் கொண்டுள்ளார். எனவே, ஒலிப்பு x பொருள் வரிசையை மாற்ற ஒப்புவாரா என அறிய விரும்புகிறேன்.
எல்லாவற்றையும் மறு சீரமைப்பில் பார்க்கலாம் என்று சொல்வது ஏற்புடையதாயில்லை. எல்லாவற்றையும் மறு சீரமைப்பில் எப்படி மாற்ற இயலும் எனத் தெரியவில்லை. தானியக்கமாய் மாற்றுவதற்குரிய வடிவமைப்பை நம்மிடம் உள்ளதா? இப்போதே இலகுவாய் சரி செய்யக்கூடியதைச் செய்து விடலாமே--ரவி 05:26, 14 அக்டோபர் 2010 (UTC)
- இரவி, தேடுபொறிகளின் தேர்வுச் சிறப்பம் (optimization) நீங்கள் சொல்வது போல் இருக்குமானால், ஏன் ஆங்கிலவிக்சனரியில் முதலில் சொற்பிறப்பியலும், அடுத்து ஒலிப்பு பற்றியும் தந்து பிறகே பொருள் தருகின்றார்கள்? தேடுபொறிகளைக் குறிவைத்து நாம் செய்ய வேண்டும் என்பதும் சரியான முடிவல்ல என்பது பிறிதொரு கருத்து. எதனைக் கருத்தில் கொண்டு, எப்படித் தேர்வு செய்ய வேண்டும் என்பதைத் தேடுபொறிகள் முடிவுசெய்யட்டும், அது அவர்கள் வேலை. எப்படிச் செய்திகளைத் தந்தால் சிறப்பாக இருக்கும் என்று கவலைப்படுவது நம் வேலை. தமிழல்லா ஒரு மொழியில் முதலில் ஒலிப்பைத்தந்து பிறகு பொருளைத் தருவது சிறப்பாக இருக்கும். ஒலிப்பு-பொருள் வரிசையை மாற்றப் பெரும்பாலோர் விரும்பினால், நான் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் செயற்படுத்துவது முறையாகும். பெரிய இடர் ஏதும் இல்லை, ஆனால் ஏரணப்படி (logic, flow) சரியாகாது என்பது என் கருத்து. சொற்பிறப்பியலை விளக்கத்துக்குள் ஓர் உட்பகுப்பாகக் கொள்ளலாம், அது போலவே ஒலிப்பையும் கொள்ளலாமா எனத் தெரியவில்லை. ஆனால் பொருளுக்கு அடுத்து ஒலிப்பு வருவதினும், ஒலிப்பை, கீழே எங்கேனும் பொருத்தமான இடத்தில் சேர்ப்பது நல்லது (பொருளுக்கு அடுத்து அல்ல). இப்பொழுது இருக்கும் அடுக்கத்தை மாற்ற வலுவான காரணங்கள் ஏதும் இருப்பதாக நான் கருதவில்லை. பொருள் என்னும் பட்டைக்கு அடியில் மீண்டும் PAGENAME வருவதை நானும் வரவேற்கிறேன். இப்படித்தான் பல இடங்களில் நான் முன்னர் பதிவும் செய்துள்ளேன். பெயர்ச்சொல்லா வினைச்சொல்லா என்னும் குறிப்பையும் அங்கு தருவதும் பயனுடையதே. --செல்வா 17:48, 14 அக்டோபர் 2010 (UTC)
செல்வா, அகரமுதலிக் கலை, மரபு ஆகியவற்றைப் புரிந்து கொள்கிறேன். எனினும், இந்த அகரமுதலியை நாம் இணையத்தில் இடுவதால் இணைய ஊடகம் இயங்கும் விதத்துக்கு ஏற்பவும் அதன் வடிவமைப்பு இருத்தல் நலம். தமிழ் விக்சனரியைப் பற்றி அறியாத பலரும் தேபொறிகள் மூலமே இங்கு வந்து சேர வாய்ப்புண்டு. எனவே, அதற்கு ஏற்ப வடிவமைப்பதில் தவறில்லை. தமிழ் விக்சனரியின் அடுத்த கட்டம், மறு சீரமைப்பின் போது இதைப் பற்றி முழுமையாக அலசுவது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். எனவே, இது குறித்த உரையாடலை இப்போதைக்கு முடித்துக் கொள்கிறேன். பொறுமையாக, உங்கள் பதில்களைத் தந்தமைக்கு மிகவும் நன்றி--ரவி 05:34, 15 அக்டோபர் 2010 (UTC)
- பொருளுக்கு அடுத்து{.{PAGENAME}} என்று இடவா அல்லது ஆங்கில சொல்லையே இடவா? முதல் சோதனைச்சொல்லில் absolutely continuous function, அம்மாற்றங்களை ஏற்படுத்திக் காட்டவும்.absolute_line என்பதிலுள்ள ஒலிப்பு போல அமைய வேண்டுமா? நன்றி--த*உழவன் 05:48, 14 அக்டோபர் 2010 (UTC)
த. உழவன், நான் வேண்டிய மிக முக்கியமான மாற்றங்களை absolutely continuous function/version2 பக்கத்தில் செயற்படுத்தி உள்ளேன். பொருள் பகுதியில் தலைப்புச் சொல் வருகிறது. பொருள் பகுதியை முன்னிறுத்தி, ஒலிப்புப் பகுதியை தலைப்பிட்டு இரண்டாம் இடத்துக்கு நகர்த்தி உள்ளேன். இது குறித்து அனைவரின் கருத்தையும் அறிய விரும்புகிறேன்.
பி.கு 1.- வார்ப்புரு:வரியமை -> வார்ப்புரு:பயன்பாடு வழிமாற்றாக இருந்ததால், நேரடியாக வார்ப்புரு:பயன்பாடு இட்டுள்ளேன். ஒலிப்புப் பகுதியை உருவாக்க, அவசரத்துக்கு வார்ப்புரு:சமக்குறியீடுள்ளஒலிப்பு பயன்படுத்தி உள்ளேன். இதற்குத் தேவைப்படும் தக்க வார்ப்புருவை உருவாக்க வேண்டும்.
பி.கு.2 - இவ்வடிவம் கூட எனக்கு முழு ஒப்புதலான வடிவம் அல்ல :) ஆனால், பலரும் பல வாரங்கள் உரையாடி, ஆதரவு வாக்கு இட்டுள்ள ஒரு வடிவத்தை மேலும் மாற்ற உரையாடி கால தாமதம் செய்ய விரும்பவில்லை. வெற்றுப் பகுதிகளான ஒலிப்பு, பயன்பாடு, விளக்கம் ஆகியவற்றை நீக்கியும், கொடியை நீக்கியோ வலப்பக்கத்துக்கு நகர்த்தியோ உள்ள வடிவம் எனக்கு முழு ஒப்புதலாக இருக்கும்--ரவி 06:30, 14 அக்டோபர் 2010 (UTC)
+பேச்சு:absolutely_continuous_function/version2 இப்பக்கத்திலும் தேடுபொறி குறித்தவை இருக்கின்றன.--த*உழவன் 20:58, 14 அக்டோபர் 2010 (UTC)
உச்சரிப்புதவி வார்ப்புருவை விடலாமோ?
[தொகு]உச்சரிப்புதவி ஆங்கில விக்கியில் கிடைத்தாலின்றி, அதை நீக்கி தரவேற்றலாமே. ஏன் என்றால் விரைவில் எல்லாச் சொற்களுக்கும் உச்சரிப்புதவி தரப்படப்படாது அல்லவா. --Natkeeran 23:32, 13 அக்டோபர் 2010 (UTC)
- ஆனால், உச்சரிப்பு ஒலிக்கோப்பு இடப்படும் போது (யார் இட்டாலும்), இவ்வார்ப்புரு இருப்பதனால் பக்கங்களில் எம்மாற்றமும் செய்யாமல் உச்சரிப்பு உடனே தோன்றிவிடுமல்லவா? அதற்கான வசதியாக இவ்வார்ப்புருவைக் கருதலாம். பழ.கந்தசாமி 23:58, 13 அக்டோபர் 2010 (UTC)
- பழ. கந்தசாமி, நீங்கள் கூறுவது போல் நினைத்தே போன தானியங்கிப் பதிவேற்றத்தில் இவ்வாறு இட்டோம். ஆனால், பலவும் அரிய சொற்களாகவும் நுட்பச் சொற்களாகவும் இருப்பதால் இன்னும் பெருவாரிச் சொற்களுக்கு ஒலிக்கோப்புகள் இல்லை. தற்போது ஏற்றப்படும் சொற்களுக்கும் அதே நிலை வரலாம். எனவே, எனக்கும் இதில் தயக்கமே. ஏதேனும் ஆங்கிலக் கல்லூரி மாணவர்களுடன் இணைந்து ஒலிக்கோப்பாக்கத்துக்கான ஒரு முயற்சியை மேற்கொள்வது நல்ல வழியாக இருக்கும்--ரவி 05:26, 14 அக்டோபர் 2010 (UTC)
- த.இ.க. வின் சொற்களுக்கு இவ்வார்ப்புரு ஒலிப்புக் கொடுக்காவிட்டாலும், சேர்த்துவரும் பல புதியவார்த்தைகளுக்கு தானாக இவ்வார்ப்புரு ஒலி கொடுத்து வருகிறது. ஆங்கிலக் கல்லூரி மாணவர்களை வைத்து ஏற்படுத்தும் ஒலிக்கோப்பு சரியானதாக இருக்கும் என்பதில் ஐயமுண்டு பழ.கந்தசாமி 01:46, 15 அக்டோபர் 2010 (UTC)
- பழ. கந்தசாமி, நீங்கள் கூறுவது போல் நினைத்தே போன தானியங்கிப் பதிவேற்றத்தில் இவ்வாறு இட்டோம். ஆனால், பலவும் அரிய சொற்களாகவும் நுட்பச் சொற்களாகவும் இருப்பதால் இன்னும் பெருவாரிச் சொற்களுக்கு ஒலிக்கோப்புகள் இல்லை. தற்போது ஏற்றப்படும் சொற்களுக்கும் அதே நிலை வரலாம். எனவே, எனக்கும் இதில் தயக்கமே. ஏதேனும் ஆங்கிலக் கல்லூரி மாணவர்களுடன் இணைந்து ஒலிக்கோப்பாக்கத்துக்கான ஒரு முயற்சியை மேற்கொள்வது நல்ல வழியாக இருக்கும்--ரவி 05:26, 14 அக்டோபர் 2010 (UTC)
கந்தசாமி, நான் சொல்ல வருவது என்னவென்றால், யாராவது நிரப்புவார்கள் என்று நாம் சும்மாவே இருந்து விடுவதும் சரி இல்லை. நாமே இக்கோப்புகளை உருவாக்க முனைந்தால் அது தமிழ் விக்சனரி உலகுக்கு அளிக்கும் கொடையாக இருக்கும். இப்பணியைச் செய்ய ஆங்கிலக் கல்லூரி மாணவர்கள் பொருத்தமாக இருப்பார்கள் என்று நினைத்தேன். இல்லை, இதை விடத் தகுதியானவர்களை வைத்து எப்படிச் செய்யலாம் என்று சிந்திக்கலாம். நன்றி--ரவி 05:34, 15 அக்டோபர் 2010 (UTC)
சொற்றொடர்களுக்கு ஒலிப்பு உதவி?
[தொகு]நான் ஆங்கில விக்சனரியில் சிறிது நோட்டம் விட்டபோது அங்கு சொற்றொடர்களுக்கு ஒலிப்பு உதவிக் கோப்பைச் சேர்ப்பது போலத் தெரியவில்லை. அப்படியெனில் அவற்றுக்கான கோப்புகளும் இணைக்கப்படுமா என்பது ஐயமே. சொற்றொடர்களுக்கான பக்கங்களில் தொடரின் தனிச்சீர்களின் ஒலிப்புகளை இணைக்கலாமா? இதைத் தானியங்கி வழியாகச் செய்ய முடியும். பொதுவான உடன்பாடு இருந்தால் இப்பணியை என்னால் மேற்கொள்ள முடியும். -- Sundar 07:01, 22 அக்டோபர் 2010 (UTC)
- கூட்டுச்சொற்களில் தனிச்சொற்களுக்கான ஒலிப்புகளை சேர்ப்பது நல்லது. இதனை நானும் பல முறை நினைத்துப் பார்த்திருக்கின்றேன். எனக்கு முழு உடன்பாடு. --செல்வா 13:49, 22 அக்டோபர் 2010 (UTC)
- சுந்தர், எனக்கும் உடன்பாடே! நன்றி. பழ.கந்தசாமி 14:48, 22 அக்டோபர் 2010 (UTC)
- கூட்டுச்சொற்களில் தனிச்சொற்களுக்கான ஒலிப்புகளை சேர்ப்பது நல்லது. இதனை நானும் பல முறை நினைத்துப் பார்த்திருக்கின்றேன். எனக்கு முழு உடன்பாடு. --செல்வா 13:49, 22 அக்டோபர் 2010 (UTC)
- நீங்கள் கூறும் ஒலிப்பு உதவியைச் சேர்த்தால் பலரும் பயனுறுவர். எனவே ஆதரவாக வாக்களிக்கிறேன். --பவுல்-Paul 14:54, 22 அக்டோபர் 2010 (UTC)
- அதனைக் காண ஆவலாக இருக்கிறேன். ஒரு மாதிரியை உருவாக்கிக் காண்பிக்கக் கேட்டுகொள்கிறேன்.--த*உழவன் 23:10, 22 அக்டோபர் 2010 (UTC)
- அனைவருக்கும் நன்றி. திங்கட்கிழமை வரை பயணத்தில் இருப்பதால், அன்று இரவு ஒரு மாதிரியை உருவாக்கிக் காட்டுகிறேன். இதற்கும் இப்போது நடந்து கொணடிருக்கும் பதிவேற்றத்துக்கு எவ்வித மாற்றுத்தேவைகளும் இல்லை. பதிவேற்றத்துக்குப்பின்னர் அந்தப்பணியைச் செய்யலாம். -- Sundar 04:39, 23 அக்டோபர் 2010 (UTC)
- //பதிவேற்றத்துக்கு எவ்வித மாற்றுத்தேவைகளும் இல்லை//மனதில் தோன்றிய ஐயத்தை, நான் கேட்காமல் நீக்கியதற்கு மிக்கநன்றி.இணைய + மின் தடைகள் அடிக்கடி வருவதால் கணினியை அடிக்கடி கவனிக்க வேண்டியுள்ளது. எனவே, தான் தாமதமாகிறது. என்னால் இயன்ற வரை பதிவேற்றத்தை விரைவில் முடிக்கிறேன். ஆவலுடன்..--த*உழவன் 05:05, 23 அக்டோபர் 2010 (UTC)
- முதல் மாதிரி: பயனர்:Sundar/absolutely_continuous_function இயன்றால் கோப்புகளைத் தொடர்ந்து உச்சரிக்கும் விதமாக அமைக்க வேண்டும். முயன்று பார்க்கிறேன். -- Sundar 07:36, 26 அக்டோபர் 2010 (UTC)
- //பதிவேற்றத்துக்கு எவ்வித மாற்றுத்தேவைகளும் இல்லை//மனதில் தோன்றிய ஐயத்தை, நான் கேட்காமல் நீக்கியதற்கு மிக்கநன்றி.இணைய + மின் தடைகள் அடிக்கடி வருவதால் கணினியை அடிக்கடி கவனிக்க வேண்டியுள்ளது. எனவே, தான் தாமதமாகிறது. என்னால் இயன்ற வரை பதிவேற்றத்தை விரைவில் முடிக்கிறேன். ஆவலுடன்..--த*உழவன் 05:05, 23 அக்டோபர் 2010 (UTC)
- அனைவருக்கும் நன்றி. திங்கட்கிழமை வரை பயணத்தில் இருப்பதால், அன்று இரவு ஒரு மாதிரியை உருவாக்கிக் காட்டுகிறேன். இதற்கும் இப்போது நடந்து கொணடிருக்கும் பதிவேற்றத்துக்கு எவ்வித மாற்றுத்தேவைகளும் இல்லை. பதிவேற்றத்துக்குப்பின்னர் அந்தப்பணியைச் செய்யலாம். -- Sundar 04:39, 23 அக்டோபர் 2010 (UTC)
- சுந்தர்! அட்டகாசம். நானும் உங்களுடன் இணைய விரும்புகிறேன். ஒரே கோப்பாக இணைத்து விடுவீர்களென் எண்ணுகிறேன். நம் தளத்தில் ஒலிக்கோப்புகள் இல்லாத சொற்களே இல்லாமல் செய்துவிட வேண்டும். தனிச்சொற்பட்டியலை ஏற்கனவே பழ.கந்தசாமியும் நானும் பிரித்து வைத்துள்ளோம். உங்களுக்கு அப்பட்டியல் தேவைப்படுமா?---த*உழவன் 09:48, 26 அக்டோபர் 2010 (UTC)
- நன்றி, த*உழவன். உங்கள் உதவி கட்டாயம் தேவைதான். நீங்கள் குறிப்பிட்டுள்ள பட்டியலும் உதவும். ஒரே கோப்பாக இணைத்து விட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இல்லாவிட்டால் ஒன்றன்பின் ஒன்றாகத் தானாக ஒலிக்கும்படி செய்ய வாய்ப்பிருக்கலாம். எப்படியானாலும் ஒரு சொல்லுக்கும் அடுத்த சொல்லுக்கும் இடையில் சிறு இடைவெளி விட வேண்டும். -- Sundar 11:55, 26 அக்டோபர் 2010 (UTC)
- சுந்தர், நன்றாக உள்ளது. ஒரே கோப்பாக ஒன்றன் பின் ஒன்றாகத் தானாக ஒலிக்கச் செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் பழ.கந்தசாமி 14:52, 26 அக்டோபர் 2010 (UTC)
நன்று சுந்தர். இந்தப் பணியையும் முடித்து விட்டு, தமிழ் விக்சனரியின் முன்னேற்றத்தை அறிவித்தால் நன்றாக இருக்கும். எவ்வளவு விரைவாக முடிக்கலாம்? தானியங்கி இயக்கத்தில் உதவ முடியும். அப்புறம், ஒவ்வொரு கோப்பும் வெவ்வேறு குரலில் இருப்பதால் இரண்டு கோப்புகளின் ஒலிப்புக்கு இடையே சிறு இடைவெளி விடுமாறு செய்வது நன்று. --ரவி 07:55, 27 அக்டோபர் 2010 (UTC)
- முக்கியமான குறிப்பு இரவி. வெவ்வேறு குரல்கள் என்பதை நான் கேட்டுப்பார்க்கவில்லை. அதனாலும் செய்ய எளிதாக இருப்பதாலும், தனித்தனியாகவே மாதிரிப்பக்கத்தில் இருப்பது போலத் தரலாமா? அதைச் செய்வது எளிது. உறுதியாக நவம்பர் 14-க்கு முன்னதாகச் செய்துவிட முடியும். இடையில் ஒரு சொல்லுக்கான ஒலிப்பு மட்டும் இல்லாவிட்டால் அது மட்டும் சிவப்பு இணைப்பாக இருக்கலாமா? -- Sundar 09:57, 27 அக்டோபர் 2010 (UTC)
தனித்தனியாகத் தந்தால் மூன்று முறை சொடுக்கியே கேட்க வேண்டும். இது பயனெளிமைக்கு உகந்தது அல்ல. அதே வேளை, ஏதாவது ஒரு சொல்லை விட்டுத் தொடர்ச்சியாக ஒலிப்பதும் நன்றாக இருக்காது. தனக்குத் தான் கேட்கவில்லையோ என்று பயனர் குழம்பலாம். அனைத்துச் சொற்களும் இருந்தால் மட்டும் தொடர்ச்சியாக ஒலிக்குமாறும் இல்லாவிட்டால் தனித்தனியாக இருக்குமாறும் செய்யலாமா?--ரவி 10:26, 27 அக்டோபர் 2010 (UTC)
- அனைத்து சொற்களும் இருக்கின்றனவா இல்லையா எனப் பார்த்து அதற்கேற்ப முடிவெடுப்பது கட்டாயம் இயலும். ஆனால், தொடர்ந்து ஒரே சொடுக்கில் ஒலிக்குமாறு செய்யும் முறையைத் தான் கண்டறிய வேண்டியுள்ளது. அது புலப்பட்டதும் அதற்கான மாதிரியைச் செய்து காட்டுகிறேன். -- Sundar 15:45, 27 அக்டோபர் 2010 (UTC)
- ஒரே கோப்பாகத் தொடுப்பது இயலும்போலத் தெரிகிறது. வெவ்வேறு குரலில் அமைந்துள்ள கோப்புகளை (இடைவெளி விட்டு) ஒன்றாக இணைத்தால் தவறில்லை தானே? -- Sundar 15:51, 27 அக்டோபர் 2010 (UTC)
தவறில்லை :) --ரவி 19:03, 27 அக்டோபர் 2010 (UTC)
- சுந்தர், வெவ்வேறு குரலில் இருப்பதும் ஓர் அழகு தரும். (மாறிமாறிப் பேசும் தொலைக்காட்சித் தொகுப்பாளினி-தொகுப்பாளர் போல் ;) பழ.கந்தசாமி 15:59, 27 அக்டோபர் 2010 (UTC)
- கருத்துக்கு நன்றி, இரவி, கந்தசாமி. செய்து பார்க்கிறேன். அனைத்து விக்சனரிக்கும் நமது கொடையாக இருக்கட்டும். :) -- Sundar 11:56, 28 அக்டோபர் 2010 (UTC)
கோப்புகளைத் தொடுக்கும் பணி
[தொகு]லினக்சில் எளிதாக இரு ஒலிக்கோப்புகளை இணைக்க முடிந்தது. முதல் சோதனைக் கோப்பை படிமம்:En-us-absolutely-continuous.ogg என்ற இணைப்பின் வழி காணலாம். முதல் கட்டத் தேவைகள்:
- நல்ல, இலவச இணைப்பு வசதி கொண்ட இலினக்சுக் கணினி
- உபுண்டுவில் முடியுமா?--த*உழவன் 12:28, 4 நவம்பர் 2010 (UTC)
- இயலும் த*உழவன். உபுண்டு உட்பட எந்தவொரு இலினக்சிலும் இயக்கலாம். w:பயனர்:Logicwiki தன்னுடைய வசமிருக்கும் ஒரு வழங்கியைத் தர இசைந்துள்ளார். விரைவில் உறுதிப்படுத்துகிறேன். -- Sundar 13:18, 5 நவம்பர் 2010 (UTC)
- மகிழ்ச்சியுடன் காத்திருப்பேன்.(tha.uzhavanATgmailCOM).--த*உழவன் 02:25, 6 நவம்பர் 2010 (UTC)
- பதிவேற்றிய சொற்றொடர்களின் பட்டியல்
- வெறும் இடைவெளி மட்டும் கொண்ட ஒலிக்கோப்பு
இவை இரண்டும் இருந்தால் நான் தரும் நிரலை இயக்கி, தேவையான கோப்புகளைத் தரவிறக்கி இணைக்கலாம். பின் அவற்றை மொத்தமாக பைவிக்கிப்பீடியாபாட்டு கொண்டு பதிவேற்றலாம். முதல் தேவைதான் இன்றியமையாதது. மற்ற இரண்டையும் நானே செய்து கொள்கிறேன். -- Sundar 11:50, 4 நவம்பர் 2010 (UTC)
தற்போதைய நிலை
[தொகு]- பதிவிறக்கத்துக்கும் கோப்புகளைத் தொடுப்பதற்கும் தேவையான நிரலைக் கிட்டத்தட்ட எழுதிவிட்டேன்.
- இந்த வேலையைச் செய்ய இரவி ஒரு வழங்கியையும் பயனர்:Logicwiki-ன் நண்பர்களின் உதவியால் அவர்கள் கல்லூரித் திட்டங்களுக்கான இலினோடு ஒன்றையும் இரவல் தர முன்வந்துள்ளனர்.
- முதல் தடவையாக விக்கிப் பக்கங்களுக்கு மாற்றாக சிறப்பு XML API ஒன்றைப் பயன்படுத்த எண்ணி உதவி கோரியுள்ளேன்.
- காமன்சில் தானியங்கி அணுக்கத்துக்கும் விண்ணப்பித்துள்ளேன்.
அணுக்கம் கிடைத்ததும் அடுத்தக்கட்ட வேலையான பதிவிறக்கத்தைத் தொடங்கி விடலாம். -- Sundar 16:26, 10 நவம்பர் 2010 (UTC)
- சுட்டியப் பக்கங்களைக் கண்டேன். சோதனை ஓட்டங்களை அங்கு காண ஆவலாக இருக்கிறேன்.--த*உழவன் 05:20, 12 நவம்பர் 2010 (UTC)
- வெள்ளோட்டத்தைத் தொடங்கியுள்ளேன். மேற்கொண்டு அணுக்கம் கிடைத்ததும் முழுப்பதிவேற்றத்தைத் தொடங்கவுள்ளேன். -- Sundar 17:55, 3 டிசம்பர் 2010 (UTC)
- இங்கு வெள்ளோட்டத்தைக் கண்டேன். ஆங்கில சொற்றொடரின், முதல் சொல்லுக்கு மட்டுமே ஒலி வருகிறது.(எ. கா.) double efficiency என்பதனை அறியும் போது, double என்பதற்கு மட்டுமே ஒலி வருகிறது. --த*உழவன் 01:56, 4 டிசம்பர் 2010 (UTC)
- ஆ, நன்றி தஉழவன். சரி பார்க்கிறேன். -- Sundar 02:17, 4 டிசம்பர் 2010 (UTC)
யாருக்காக? இனி யாருக்காக?
[தொகு]- கருத்துக்கணிப்பு தொடங்கி ஒரு வாரம் ஆன நிலையில் இனியும் நாம் யாருக்காகவும் காத்திருககவேண்டுமா? அவசியமில்லை, பதிவேற்றத் துவங்கலாம எனக் கருதுகின்றேன். பழ.கந்தசாமி 04:43, 13 அக்டோபர் 2010 (UTC)
- ஆம், தொடங்கலாம் என்றே நானும் நினைக்கிறேன். -- Sundar 05:56, 13 அக்டோபர் 2010 (UTC)
- ஆம், தொடங்கலாம் என்றே நானும் நினைக்கின்றேன்.--செல்வா 13:50, 13 அக்டோபர் 2010 (UTC)
- தமிழ் விக்சனரிகுழுமம், விக்கிப்பீடியா,விக்கிச்செய்திகள் ஆகியவற்றில் அறிவிப்பைச் செய்துள்ளேன். ஞாயிறு வரை இக்கணிப்பைத்தொடரலாமென்று எண்ணுகிறேன்.திங்கட்கிழமை(18.10.2010) முதல் பதிவேற்றத்தைத் தொடங்கலாமா?--த*உழவன் 05:01, 14 அக்டோபர் 2010 (UTC)
- இந்த வார இறுதி வரை பொறுக்கலாம். பழ.கந்தசாமி 01:33, 15 அக்டோபர் 2010 (UTC)
- காலம் தாழ்த்தாமல், பதிவேற்றத்தைத் துவங்கவேண்டுகிறேன். பதிவேற்றத்திற்கு, எந்த வகையிலாவது உதவி தேவைப்பட்டால், அதனை எனக்குத் தெரிவித்தால் செய்வதற்கு காத்திருக்கிறேன். நன்றி. வணக்கம்.--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 04:50, 15 அக்டோபர் 2010 (UTC)
- இது எனது முதல் அனுபவம் என்பதால் பல்வேறு மனநிலையில், தயக்கத்துடனேயே பலரது கருத்தினை ஒருங்கிணைக்கிறேன். அதனால் சற்று காலதாமதம் ஏற்படுகிறது. மேலே சுட்டியபடி திங்களன்று பதிவேற்றத்தை நாம் ஆரம்பிக்கலாம்--த*உழவன் 02:56, 16 அக்டோபர் 2010 (UTC)
- த*உழவன், திட்டமிட்டபடியே தொடங்குங்கள்! குறைநிறைகளைப் பற்றி இப்போது கவலை வேண்டாம்; பிறகு சரிப்படுத்திக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன். --பவுல்-Paul 04:00, 16 அக்டோபர் 2010 (UTC)
- தங்களுரை எனக்குக் கொஞ்சம் தெம்பைத் தருகிறது. நன்றி.வணக்கம்.--த*உழவன் 16:40, 16 அக்டோபர் 2010 (UTC)
சொற்களின் எண்ணிக்கை பற்றிய குறிப்பு
[தொகு][தமிழ் விக்சனரியின் தற்போதைய நிலை] இதனை புதுப்பித்தவர் (இற்றை படுத்தியவர்):--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 04:13, 21 அக்டோபர் 2010 (UTC)
வரிசை எண் | நாள் | சொற்களின் எண்ணிக்கை | தமிழ் விக்சனரியின் நிலை |
---|---|---|---|
1 | 09-09-2010 | 1,20,765 | 17 |
2 | 18-10-2010 | 1,21,531 | 17 |
3 | 20-10-2010 | 1,24,932 | 16 |
4 | 21-10-2010 | 1,25,646 | 15 |
5 | 22-10-2010 | 1,59,409 | 12 |
6 | 23-10-2010 | 1,67,268 | 10 |
7 | 25-10-2010 | 1,86,403 | 9 |
8 | நாள் | எண்ணிக்கை | நிலை |
9 | நாள் | எண்ணிக்கை | நிலை |
பதிவேற்றம் குறித்த தமிழ் / ஆங்கில அறிக்கை
[தொகு]வணக்கம். பதிவேற்றப் பணி முடிந்த உடன் அது குறித்த சுருக்கமான அறிக்கையை தமிழ், ஆங்கிலத்தில் வெளியிடுவது நன்றாக இருக்கும். சொற்களைப் பெற்ற முறை, வடிவமைப்பு உரையாடல்கள், தானியங்கிப் பதிவேற்றத்துக்குப் பயன்படுத்திய வழிமுறைகள், எதிர்கொண்ட சிக்கல்கள் குறித்து குறிப்பிடலாம். இந்திய, உலக அளவில் கவனத்தை ஈர்க்க இது உதவும். முதலில் இருந்தே இப்பணியில் ஈடுபட்டுள்ள எவரேனும் இதில் உதவினால் நன்றாக இருக்கும். நன்றி--ரவி 05:56, 23 அக்டோபர் 2010 (UTC)
- ரவி நீங்கள் சொல்வது அவசியமான ஒன்று. ஆரம்பத்திலிருந்து பங்கு கொள்வோர் கூட்டாக இதனை தயாரிக்கலாம். ஆங்கில விக்கிசெய்தி, தமிழ் விக்கிசெய்தி என்றல்லாது தமிழ் ஊடகங்களிலும் தகவல் பரப்பலாம். இதன் மூலம் கல்வியாளர்கள், பொதுமக்களிடையே எளிதாக சென்றடையும். நன்றி -- மாகிர் 18:55, 24 அக்டோபர் 2010 (UTC)
- சொற்களைப் பெற்ற முறையை செல்வா தெளிவாகக் கூற முடியுமென எண்ணுகிறேன். இறுதியாக உள்ள பதிவேற்ற முறைகள், எதிர்கொண்ட சிக்கல்கள் குறித்து தெரிவிக்கிறேன். எனினும், பதிவேற்ற முறைகளைக் குறிப்பிடுவதன் மூலம் புதியவர் தவறாக அவற்றைப் பயன்படுத்த வாய்ப்புள்ளதல்லவா?
- நான்பயன்படுத்தியது AWBமுறை.
- அதில் பல நுட்பங்கள் உள்ளது. நான் CSVloader வழியாகப் பதிவேற்றினேன்.
- ஏற்கனவே பதிவேற்றியச் சொற்களும், பதிவேறாச்சொற்களும் ஒன்றாக க் கொடுக்கப்பட்டதால் அதனை பிரித்தெடுப்பதே தொழில்நுட்பச்சிக்கலாக இருந்தது.முழுமையான தெள்ளிய முறையில் பிரிக்கும் தொழில்நுட்பம் தேவைப்படுகிறது.--த*உழவன் 00:40, 25 அக்டோபர் 2010 (UTC)
- செல்வா! நீங்கள் இதுபற்றி எழுதுவது பொருத்தம் என்பது என் கருத்தும் கூட. பழ.கந்தசாமி 00:52, 25 அக்டோபர் 2010 (UTC)
செல்வா எழுதினால் நன்று. ஆனால், அவர் பணிப்பளுவில் இருக்கலாம். எனவே, யாராவது ஒருவர் தொடங்கினால் கூட்டாகவே தொகுத்து மேம்படுத்தலாம். பொதுவான செய்தி வெளியீட்டுக்கு, தொழில்நுட்ப விடயங்களை விரிவாக கூறத் தேவை இருக்காது. நவம்பர் 14, 2010 சென்னையில் ஒரு இந்திய விக்கிமீடியர் சந்திப்புக்கு ஏற்பாடு நடந்து வருகிறது. அதில் இந்தப் பதிவேற்றம் பற்றிய தொழில்நுட்ப விவரங்களை முன்வைத்துப் பேசுவது நன்றாக இருக்கும். த. உழவன் நேரில் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும். அல்லது, த. உழவன் / பழ. கந்தசாமி, கணேசு முதலியோர் skype வழியாக உரையாடலாம்--ரவி 05:47, 25 அக்டோபர் 2010 (UTC)
- எல்லோருமே சேர்ந்து எழுதுவது நல்லது. சொற்கள் தமிழ் விக்சனரிக்கு எப்படிக் கிடைத்தன என்பதை நானறிந்தவாறு 4-5 வரிகள் கட்டாயம் எழுதித்தர முடியும். பிறகு பதிவேற்ற என்னென்ன முயற்சிகள் செய்தோம் என்று சுருக்கமாக ஒரு 5-7 வரிகள் (வடிவம், அமைப்பு, பதிவேற்றும் முறை, அதற்குமுன் நிகழ்ந்த ஒழுங்குகள் முதலியன). பணியாற்றிய அனைவரின் பெயர்களையும் குறிப்பிட்டு ஆவணப்பதிவாகவும் செய்வது நல்லது. செய்தி வரைவை எல்லோருமாகக் கூடி பொது இடத்தில் இட்டோ இங்கேயே இட்டோ எழுதி சீர் செய்யலாம். நன்றி நவிலலில், அமைச்சர் மாண்புமிகு பூங்கோதை அவர்கள், தகவல்நுட்பத் துறைச் செயலர் திரு டேவிதார் அவர்கள், முனைவர் அருள் அவர்கள், முனைவர் வா.செ.கு அவர்கள், முனைவர் நக்கீரன் அவர்கள், தமிழ் இணையக் குழு ஆட்சியர் குழுவினர் ஆகிய அனைவரையும் குறிப்பிடல் வேண்டும் ஏனெனில் ஒவ்வொருவரும் உண்மையிலேயே துணை செய்துள்ளார்கள். இது ஓர் உயர்நோக்கு பெருங்கொடை. அரசாக உவந்து வந்து அளித்தது. எடுத்துக்காட்டான நன்கொடை (என் கணிப்பில்).--செல்வா 01:34, 29 அக்டோபர் 2010 (UTC)
- செல்வா, த.இ.க. சொற்கள் கிடைத்த வரலாறு, உதவியவர்கள், பக்க வடிவமைப்பு விவாதங்கள் அனைத்து விபரங்களும் அறிந்தவர் என்ற முறையில் இவை அனைத்தும் பற்றி நீங்கள் தொடங்கி எழுதினால் அதைத் தொட்டு நாங்களும் உதவுகிறோம். நன்றி பழ.கந்தசாமி 01:46, 29 அக்டோபர் 2010 (UTC)
- விரைவில் செய்கிறேன்; இவ்வார இறுதிக்குள் செய்யலாம் அல்லவா?--செல்வா 01:55, 29 அக்டோபர் 2010 (UTC)
நன்றி செல்வா. வார இறுதிக்குள் செய்யலாம்--ரவி 05:57, 29 அக்டோபர் 2010 (UTC)
மெட்டாவில் நான் கோரியிருந்தபடி http://www.wiktionary.org/ தளத்தில் தமிழை முதல் வட்டத்தில் காட்டத் தொடங்கியுள்ளனர். :) -- Sundar 11:55, 4 நவம்பர் 2010 (UTC)
- மிக்க மகிழ்ச்சி. பெருமைக்குரிய விசயம். இதற்காக உழைத்த அனைவருக்கும் பாராட்டுக்களும் நன்றியும். --சிவகுமார் 08:18, 16 நவம்பர் 2010 (UTC)
இது குறித்த நமது அறிக்கையை விரைவில் இறுதி செய்ய வேண்டுகிறேன். அண்மையில் நடந்த நிகழ்வுகளில் நானும் மற்றவர்களும் இதைக் குறிப்பிட்டபடியால் இதழாளர்கள் செய்தி எழுதக்கூடும். ஒருவேளை நம்மில் யாரையாவது தொடர்பு கொண்டால் என்ன சொல்வது என்பதையும் முடிவு செய்ய உதவும். -- Sundar 05:01, 19 சனவரி 2011 (UTC)