கிருஷ்ணார்ப்பணம்
Appearance
பொருள்
கிருஷ்ணார்ப்பணம்(பெ)
- கிரியை முடிவில் அதனைக் கண்ணபிரானுக்கு அர்ப்பிக்குந் தொடர்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- expression used generally at the close of ablutions, rituals, etc., dedicating them to Sri Krishna
விளக்கம்
பயன்பாடு
- "இன்று துர்வாச மகரிஷி அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டு விட்டார். அதனால் எனக்கு வயிற்றுவலி" என்றான் ஸ்ரீகிருஷ்ணன். நாரதருக்கு குழப்பம் மேலும் அதிகமானது. துர்வாசர் அதிகம் சாப்பிட்டால் கிருஷ்ணனுக்கு வயிற்று வலி வருவானேன்? நாரதரின் குழப்பத்தைப் புரிந்துகொண்டு, பரந்தாமன் பதில் தந்தான்.
- "நாரதா, துர்வாசர் எது சாப்பிட்டாலும் தனக்கெனச் சாப்பிடமாட்டார். சாப்பிடும் முன்பும், சாப்பிட்ட பின்பும் அவர் 'ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம்' என்று மந்திரம் ஜபித்து, தண்ணீர் அருந்திவிடுவார். அவர் நித்தியமான உபவாசி. அவர் சாப்பிடுகிற அன்னமெல்லாம் என்னையே வந்தடைகின்றன. அவற்றை நானே சாப்பிடுகிறேன். அவர் சுவாசிக்கும் காற்றைக்கூட கிருஷ்ணார்ப்பணமாகவே சுவாசிக்கிறார். துர்வாசர் வைராக்கியமான பூரண தபஸ்வி. அவர் கோபதாபங்களுக்கு அவர் பொறுப்பேற்பதில்லை. அனைத்தையும் எனக்கே கிருஷ்ணார்ப்பணம் செய்து விடுகிறார். தனக்கென வாழாது கிருஷ்ணனுக்கே தன்னை அர்ப்பணம் செய்து வாழும் தபஸ்வி அவர்" என்றார் ஸ்ரீகிருஷ்ணர்.
- எதையும் கிருஷ்ணார்ப்பணம் செய்யும்போது, அது எத்தனை உயர்வாகி விடுகிறது என்பதை நாரதர் புரிந்துகொண்டார். (கண்ணனே பிரம்மசாரி, சக்திவிகடன், 15-மே -2012)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கிருஷ்ணார்ப்பணம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +