இட்டம்
Appearance
பொருள்
இட்டம், (பெ)
- விருப்பம்.
- நம் பனை நாடொறு மிட்டத்தா லினிதாக நினைமினோ (தேவா. 20, 8)
- அன்பு.
- இட்டமான வியற்புக ரோனிடங் கிட்டினான் (கந்த பு. சுக்கிரனுப. 15)
- சிநேகம். Colloq
- கிரகநிலையால் ஆகும் பலாபலன். (W.)
- துருவத்திற்கும் இராசியின் அங்கத்திற்கும் இடையேயுள்ள வித்தியாசம்
- யோகம் (நாநார்த்த.)
- யாகம் (நாநார்த்த.)
- ஸம்ஸ்காரம் (நாநார்த்த.)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- desire, wish, inclination of mind, will
- love, attachment, affection
- friendship
- (Astrol.) Good or evil consequences resulting from the position and influence of a planet in the horoscope
- (Astron.) Longitudinal difference between the turuvam and the end of a sign
- yoga
- sacrifice
- Purificatory ceremony
- liter (volume)
( மொழிகள் ) |
சான்றுகள் ---இட்டம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி